சென்னை சில்க்ஸ், போத்தீஸ் உள்ளிட்ட 103 துணிக் கடைகளில் விடிய விடிய வணிக வரித்துறை சோதனை

 

சென்னை சில்க்ஸ், போத்தீஸ் உள்ளிட்ட 103 துணிக் கடைகளில் விடிய விடிய வணிக வரித்துறை சோதனை

தமிழகம் முழுவதும் உள்ள போத்தீஸ், தி சென்னை சில்க்ஸ், நல்லி சில்க்ஸ், ஆனந்தம் உள்ளிட்ட, ஆர்.எம்.கே.வி உள்ளிட்ட துணிக்கடைகளுக்குச் சொந்தமான 103 கடைகளில் வணிக வரித்துறை அதிகாரிகள் விடிய விடிய சோதனையில் ஈடுபட்டனர்.

சென்னை சில்க்ஸ், போத்தீஸ் உள்ளிட்ட 103 துணிக் கடைகளில் விடிய விடிய வணிக வரித்துறை சோதனை

மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சென்னை, கோவை, சேலம், மதுரை உள்ளிட்ட இடங்களில் உள்ள போத்தீஸ் நிறுவனங்களிலும், சென்னை, கோவை பகுதிகளில் உள்ள நல்லி சில்க்ஸ் நிறுவனத்திலும் சோதனை நடைபெற்றது. திருச்சி, மதுரை, திருநெல்வேலியில் உள்ள ஆனந்தம் சில்க்ஸ்க்கு சொந்தமான இடங்களில் வணிக வரித்துறையினர் சோதனை நடத்தினர். திருநெல்வேலி, சென்னை, வேலூர், கோவை, சேலம் ஆகிய நகரங்களில் உள்ள ஆர்.எம்.கே.வி நிறுவனங்களிலும் சோதனை நடைபெற்றுவருகிறது. தி சென்னை சில்க்ஸ்க்கு சொந்தமாக ஈரோடு, கோவை, சென்னை, சேலம், வேலூர், மதுரை, திருநெல்வேலி மற்றும் திருச்சியில் உள்ள இடங்களிலும் வணிக வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். மேற்கண்ட நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கிடைத்த தகவலின் பேரில், வணிக வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த ஜவுளி நிறுவனங்கள்முறையாக வரி செலுத்தாமல் உள்ளதாகவும் புகார் எழுந்த்தாக கூறப்படுகிறது.

சென்னை சில்க்ஸ், போத்தீஸ் உள்ளிட்ட 103 துணிக் கடைகளில் விடிய விடிய வணிக வரித்துறை சோதனை

இதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் செயல்படும் சென்னை சில்க்ஸ் நிறுவனத்தில் வணிகவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இரவு சுமார் 8 மணி அளவில் இந்த வணிக நிறுவத்திற்குள் நுழைந்த அதிகாரிகள் விடிய விடிய சோதனையில் ஈடுபட்டனர். கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள போத்தீஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களிலும் வணிக வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

வேலூர் காகிதபட்டறையில் உள்ள சென்னை சில்ஸ் ஜவுளி கடையில் வணிக வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை ஈடுபட்டனர். ஆனால் அந்த கடை நேற்று இரவு வழக்கம் போல் செயல்பட்டது. விற்பனை ரசீதுகளை கொண்டு வரி ஏய்ப்பு நடைபெற்று இருக்கிறதா என விற்பனைக்கு அனுமதி அளித்து வணிக வரித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.