சனீஸ்வர பகவானை அதிபதியாக கொண்ட நட்சத்திரம் – ‘உத்திரட்டாதி’ பொதுப் பலன்கள்

 

சனீஸ்வர பகவானை அதிபதியாக கொண்ட நட்சத்திரம் – ‘உத்திரட்டாதி’ பொதுப் பலன்கள்

உத்திரட்டாதி நட்சத்திரத்தின் அதிபதி சனீஸ்வர பகவான் ஆவார். சனி பகவானின் நேர்மறை சக்தி இந்த நட்சத்திரத்தை ஆட்சி செய்கிறது.

உத்திரட்டாதி நட்சத்திரத்தின் அதிபதி சனீஸ்வர பகவான் ஆவார். சனி பகவானின் நேர்மறை சக்தி இந்த நட்சத்திரத்தை ஆட்சி செய்கிறது.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எத்தகைய சூழலிலும் உண்மையே பேசக் கூடியவர்களாக இருப்பார்கள். சொன்ன சொல்லை நிறைவேற்றக் கூடியவர்கள். சாமர்த்தியசாலிகளாக இருப்பார்கள். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மிகுந்த கல்வியறிவு கொண்டவர்கள் நண்பர்களாக இருப்பார்கள். உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் வெளியூர்களுக்கு அடிக்கடி பயணம் செய்ய விரும்புவார்கள். தங்களுடைய தொலைநோக்குச் சிந்தனையால் வாழ்க்கையில் உயரக் கூடியவர்களாக இருப்பார்கள். இவர்கள் தொட்ட காரியம் எல்லாம் சரியாக நடக்கும். எல்லாம் தெரிந்திருந்தும் அதை ஆரவாரமாக காட்டிக் கொள்ள மாட்டார்கள்.

ttn

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களில் பலர் கூச்ச சுபாவம் கொண்டவர்களாக இருப்பார்கள். சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதற்கு ஏற்ப முன்கோபம் வந்தால் முரட்டுத் தனமாக நடந்து கொள்வார்கள். கதை, கவிதை எழுதக் கூடியவர்களாக இருப்பார்கள். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கணித மேதை, சட்ட நிபுணர், நீதிபதி, மனோதத்துவ நிபுணர், பத்திரிகையாளர் ஆகியோராக ஜொலிப்பார்கள். நண்பர்கள் வட்டம் பெரிதாக இருந்தாலும் யாரிடமும் உதவி கேட்க மாட்டார்கள்.

உத்திரட்டாதியில் பிறந்தவர்கள் 27 வயது முதல் வாழ்க்கையில் முன்னேறத் தொடங்குவார்கள். ஆனால் 39 வயதிலிருந்துதான் அவர்களுக்கு முழுமையாக எல்லாம் கிடைக்கும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அடிக்கடி அயல்நாடு செல்பவர்களாக இருப்பார்கள்.