என்னதான் உழைச்சாலும் கையில சல்லிக்காசு தங்கலையா? இந்த தோஷத்தை கண்டறிந்து பரிகாரம் செய்தால் அள்ளஅள்ளப் பணம் தான்!

 

என்னதான் உழைச்சாலும் கையில சல்லிக்காசு தங்கலையா? இந்த தோஷத்தை கண்டறிந்து பரிகாரம் செய்தால் அள்ளஅள்ளப் பணம் தான்!

சகடை தோஷம் என்றால் என்ன?அதற்கான, அந்த தோசம் நிவர்த்தி ஆவதற்கான விதிவிலக்குகள் என்ன??

“அகடின் மன்னனுக்கு ஆறெட்டோடு,வியத்தில்
கடிலா மதி எய்தி இருந்திடின்
சகடை தோஷம் என்று சொல்லு’

அதாவது மன்னன் என்பவர் குருபகவான். குருவுக்கு ஆறு,எட்டு, பன்னிரண்டாம் பாவத்தில் ,
சந்திரன் அமரப்பெறும்போது அது ‘சகடை தோஷம்’என்று அழைக்கப்படுகிறது.

guru

இந்த யோகம் இருப்பவர்கள் கஷ்டப்பட்டு, கடுமையாக உழைத்து முன்னேறுவார்கள். எதுவுமே ஈசியாக கிடைக்காது. வாழ்க்கையானது, “வண்டிச்சக்கரம் போல” , “கிணற்றில் நீர் இறைக்கும் உருளை போல” உயர்வும், தாழ்வும் மாறி மாறி வரும். இன்றைக்கு ஒரு லட்சம் ரூபாய் கையில் இருக்கும். நாளை ஒரு டீ சாப்பிடக் கூட சல்லிக்காசு இருக்காது.

இன்றைக்கு நண்பராக இருப்பார். நாளை அவரே விரோதியாவார். இன்றைக்கு விரோதியாக இருப்பவர் நாளை நண்பராக மாறுவார். நாம நினைச்சது நடக்காது. எதிர்பாராமல் ஒன்று நடக்கும்.
கல்லைக் கண்டால் நாயை காணோம்;
நாயைக் கண்டால் கல்லைக் காணோம் என்பது போல!

தேவைப்படும் போது கிடைக்காத பணம், தேவையில்லாதபோது கிடைக்கும். எல்லாமே ஏட்டிக்குப் போட்டியாக நடக்கும்.

chanthran

 

35 வயதுவரை எந்தவித மருந்து, மாத்திரை எடுத்து கொள்ளாதவர்கள்,ஆஸ்பத்திரி பக்கமே எட்டி பாக்கதவர்களுக்கு திடீர்னு நோய் ஏற்பட்டு சீக்கிரத்தில் குணமாகாது.பயங்கரமா,கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிக்க வேண்டிவரும்.எல்லாமே தேவைப்படும் போது கிடைக்காது.கிடைக்கும் போது தேவைப்படாது. எல்லாமே இருக்கும். ஆனால் எதையும் அனுபவிக்க விடாது.

இதுதான் சகடை தோஷம் என்று அழைக்கப்படுகிறது. இதற்கான விதிவிலக்குகளும் ஜாதகத்திலே ஒளிந்து உள்ளது. 
விதிவிலக்குகள்:

1) சகடை தோஷம் உள்ள ஜாதகத்தில் குருவும், சந்திரனும் அல்லது இருவரில் ஒருவர்,ஆட்சி , அல்லது உச்சம் பெற சகடை தோஷம் நிவர்த்தி ஆகும்.

2) சகடை தோசம் உள்ள ஜாதகத்தில் குருவும், சந்திரனும் பரிவர்த்தனை பெற ஜாதகத்தில் உள்ள சகடை தோஷம் நிவர்த்தி ஆகும்.

sagada yogam

3)சூரியனுக்கு ஏழில் சந்திரன் அமர்ந்து (சமசப்தமமாக) பௌர்ணமி தினத்தில், முழுநிலவு அன்று பிறந்த ஜாதகர்களுக்கு அவர்களின் ஜாதகத்தில் உள்ள சகடை தோஷம் நிவர்த்தி ஆகிவிடும்

4)ஏதாவது ஒரு கிரகம் திக்பலம் பெற ,ஜாதகத்தில் உள்ள சகடை தோஷம் குறைகிறது. பரிகாரம் பெற்று விடுகிறது. எனவே தோஷம் என்று சொல்லி எந்த ஒரு ஜாதகத்தையும் ஒதுக்காமல் விதிவிலக்குகளையும், பரிகாரங்களையும் ஊன்றி கவனித்து நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும்.