இந்த ராசிக்காரர்களெல்லாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்!
முக்கியமானவர்களுடன் பேசும்போது வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பேசுங்கள். அழுத்தமும் டென்சனும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
கார்த்திகை 20, விகாரி வருடம்
டிசம்பர் 06,2019
வெள்ளிக்கிழமை
நல்ல நேரம்
காலை 9.15 மணி முதல் 10.15 வரை
மாலை 5.30 மணி முதல் 6 வரை
ராகு காலம்
காலை 10.30 மணி முதல் 12 வரை
எமகண்டம்
மாலை 3 மணி முதல் 4.30 வரை
மேஷம்
இன்று சக்தி நிரம்பி இருப்பீர்கள். நீங்கள் எதைச் செய்தாலும் வழக்கத்தை விட பாதி நேரத்தில் செய்து முடிப்பீர்கள். சொத்து பேரங்கள் முடிவாகும், நல்ல லாபம் கிடைக்கும். உங்கள் வாழ்வில் இனிய ஓட்டத்தை வடிவமைத்துக் கொள்ளுங்கள்.
அதிர்ஷ்ட எண்: 2
ரிஷபம்
பொழுது போக்கு மற்றும் மனம் மகிழும் நிகழ்ச்சிகள் நிரம்பிய நாள். நீண்டகாலம் நிலுவையாக உள்ள பாக்கிகள் வசூலாகும். மாற்றம் ஏற்படுத்தக் கூடிய மற்றும் முக்கியமானவர்களுடன் நட்பை மேம்படுத்த சமூக நிகழ்ச்சிகள் சரியான வாய்ப்பாக இருக்கும். கடுமையாக இருக்க முயற்சி செய்யுங்கள், இன்று உங்கள் நாள் என்பதால் நிச்சயமாக அதிர்ஷ்டமாக இருக்கும்.
அதிர்ஷ்ட எண்: 1
மிதுனம்
பண வரவு இருக்கும். தூரத்து உறவினரிடம் இருந்து எதிர்பாராத நல்ல செய்தி வந்து மொத்த குடும்பத்தையே மகிழ்ச்சியில் ஆழ்த்தும். உங்கள் வழியில் யார் குறுக்கிட்டாலும் பணிவுடன் இருங்கள். இன்று பல புதிய நிதி திட்டங்கள் உங்களிடம் வைக்கப்படும்.
அதிர்ஷ்ட எண்: 8
கடகம்
எந்தக் கருத்தும் தெரிவிப்பதற்கு முன்பு, அவற்றின் சாதக பாதங்களை கவனமாக பாருங்கள். காதலுக்கு உரியவர் மகிழ்ச்சியாக இருப்பார். இன்று வேலையில் உங்களுக்கு சாதகமான நாள். முக்கியமானவர்களுடன் பேசும்போது வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பேசுங்கள்.
அதிர்ஷ்ட எண்: 3
சிம்மம்
குழந்தையைப் போன்ற இயல்பு வெளிப்பட்டு விளையாட்டுத்தனமான மனநிலைக்குப் போவீர்கள். ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது நல்லது. நண்பர்கள் பிசினஸ் நிறுவனங்கள் மற்றும் உறவினர்களுடன் டீலிங் செய்யும்போது உங்கள் நலன்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
அதிர்ஷ்ட எண்: 1
கன்னி
நகைகளில் செய்யும் முதலீடு லாபத்தையும் வளத்தையும் கொண்டு வரும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். ஆனால் தேர்வு செய்வதில் கவனமாக இருங்கள். நல்ல நண்பர்கள் என்பவர்கள் எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டிய புதையலைப் போன்றவர்கள். பயணம் செல்வதாக இருந்தால் எல்லா ஆவணங்களையும் எடுத்துக் கொண்டீர்களா என்பதை உறுதி செய்யவும்.
அதிர்ஷ்ட எண்: 8
துலாம்
கூட்டு முயற்சிகளிலும் சந்கேகமான நிதி திட்டங்களிலும் ஈடுபடாதீர்கள். நண்பர்களும் குடும்பத்தினரும் உங்களுடைய பெரும்பாலான நேரத்தை எடுத்துக் கொள்வார்கள். அமைதியான தூய்மையான காதலை உணர்ந்திடுங்கள். பிசினஸ் செய்பவர்களுக்கு நல்ல நாள். வேலை நிமித்தமாக மேற்கொண்ட திடீர் பயணத்துக்கு நல்ல பலன் கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண்: 2
விருச்சிகம்
நீங்கள் எதிர்பார்த்த அங்கீகாரமும் வெகுமதியும் தள்ளிப் போவதால் ஏமாற்றம் ஏற்படும். ஒரு இருப்பினும் நல்ல தகவல் உங்களை தேடி வரக்கூடும் தங்களுக்கு தாங்களே உதவி செய்பவர்களுக்கு கடவுள் உதவுவார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தகவல் தொடர்புகளை கவனமாகக் கையாள வேண்டும்.
அதிர்ஷ்ட எண்: 4
தனுசு
நீங்கள் இன்று சுறுசுறுப்பைக் காணலாம். நாள் முழுவதும் உங்களுக்கு ஆற்றல் இருக்கும் இன்று நீங்கள் உங்கள் நண்பர்களுடன் சுற்று பயணம் செய்யப் போகிறீர்கள் என்றால், பணத்தை சிந்தனையுடன் செலவிடுங்கள். பணத்தை இழக்க முடியும்.
அதிர்ஷ்ட எண்: 1
மகரம்
உங்களை பலிகடாவாக ஆக்க சிலர் முயற்சிப்பார்கள் என்பதால் கவனமாக இருங்கள். அழுத்தமும் டென்சனும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. உங்கள் நிதி நிலைமை மேம்படும் என்றாலும் அதிகம் பணம் செலவு ஏற்படுவதால் திட்டங்களை செயல்படுத்துவதற்கு தடங்கலாக இருக்கும். துணைவரின் ஆரோக்கியம் உங்களுக்கு கவலை ஏற்பட காரணமாக இருக்கலாம்.
அதிர்ஷ்ட எண்: 1
கும்பம்
இன்று நிலம், ரியல் எஸ்டேட் அல்லது கலாசார திட்டங்கள் தொடர்பான விஷயங்களில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். நண்பர்கள் கூடும் இடங்களில் உங்களின் நகைச்சுவையான இயல்பு உங்களை பிரபலமாக்கும். இன்று வேலையில், அனைத்து விஷயங்களும் உங்களுக்கு சாதகமாகவே இருக்கும்.
அதிர்ஷ்ட எண்: 7
மீனம்
உங்கள் இடை விடாத உழைப்பு இன்று உங்களுக்கு நற்பலன்களை தரும். நெருக்கமானவர்களுடன் நிறைய கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நாள் முழுக்க டென்சனாக இருக்கும்.வீட்டில் யாரையும் புண்படுத்தாமல் இருக்க முயற்சி செய்ய வேண்டும். குடும்பத்தின் தேவைகளுக்கு ஏற்ப மாறிக் கொள்ள வேண்டும்.
அதிர்ஷ்ட எண்: 5