19-7-2021 தினப்பலன் – சுமாரான நாளாக இருக்கும்!

 

19-7-2021 தினப்பலன் – சுமாரான நாளாக இருக்கும்!

பிலவ வருடம் I ஆடி 3 I திங்கட்க்கிழமை I ஜூலை 19, 2021

இன்றைய ராசி பலன்!

19-7-2021 தினப்பலன் – சுமாரான நாளாக இருக்கும்!

மேஷம்

இனிமையான நாளாக இருக்கும். கடின உழைப்பின் மூலம் இலக்குகளை அடைவீர்கள். வேலையை சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். குழந்தைகள் நலன் பற்றிய கவலை அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்புள்ளது.

19-7-2021 தினப்பலன் – சுமாரான நாளாக இருக்கும்!

ரிஷபம்

வளர்ச்சிக்கான நாளாக இருக்கும். நற்பலன்கள் நிறைந்து காணப்படும். வேலை சூழல் சாதகமாக இருக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் நல்லிணக்கம் நிலவும். கணவன் மனைவி அன்பு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். குடும்பத் தேவைக்காக செலவு செய்வீர்கள்.

19-7-2021 தினப்பலன் – சுமாரான நாளாக இருக்கும்!

மிதுனம்

கவனத்துடன் செயல்பட வேண்டிய நாள் இன்று. எந்த ஒரு காரியத்தையும் ஒன்றுக்கு பல முறை யோசித்து சிந்தித்து செயல்படுத்துவது நல்லது. வேலை சூழல் கடினமாக இருக்கும். வழக்கமான பணிகளைக் கூட முடிக்க முடியாமல் திணறும் நிலை வரலாம். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். செலவுகள் அதிகரிக்கும்.

19-7-2021 தினப்பலன் – சுமாரான நாளாக இருக்கும்!

கடகம்

குழப்பமான நாளாக இருக்கும். பாதுகாப்பின்மை உணர்வு நிலவும். சௌகரியங்களை விட்டுக்கொடுக்கும் நிலை வரும். வேலை சூழல் சவாலாக இருக்கும். வேலைப் பளு அதிகரிக்கும். குடும்பத்தில் குழப்பமான சூழல் நிலவும். கணவன் மனைவி உறவு சுமுக நிலை பாதிக்கப்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. பண இழப்புக்கு வாய்ப்புள்ளது.

19-7-2021 தினப்பலன் – சுமாரான நாளாக இருக்கும்!

சிம்மம்

சாதகமான நாளாக இருக்கும். மகிழ்ச்சி அளிக்கக் கூடிய சம்பவங்கள் நிகழும். வேலை சூழல் உற்சாகமானதாக இருக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அன்பு நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். பண வரவுக்கு சிறிதளவு வாய்ப்புள்ளது. சேமிப்பு அதிகரிக்கும்.

19-7-2021 தினப்பலன் – சுமாரான நாளாக இருக்கும்!

கன்னி

பாதுகாப்பின்மை உணர்வு அதிகரிக்கும். சிந்தித்து செயல்படுவது நல்லது. வேலை சூழல் சவால்கள் நிறைந்ததாக இருக்கும். கவனக் குறைவு காரணமாக வேலையில் தவறுகள் ஏற்படலாம். கவனம் தேவை. குடும்பத்தில் அன்பு குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சியின்மை காணப்படும். நிதி நிலை எதிர்மறையாக இருக்கும். வீண் இழப்புகள் ஏற்படலாம்.

19-7-2021 தினப்பலன் – சுமாரான நாளாக இருக்கும்!

துலாம்

சுமாரான நாளாக இருக்கும். இலக்குகளை அடைய திட்டமிட்டு செயல்படுவது நல்லது. வேலை சூழல் பாதிப்பானதாக அமையலாம். உயர் அதிகாரியுடன் விரும்பத் தகாத சூழல்கள் ஏற்படலாம். குடும்பத்தில் சுமுகமான சூழல் இருக்காது. நல்லுறவைத் தக்க வைக்க வாழ்க்கைத் துணைவருடன் அமைதியுடனும் கட்டுப்பாட்டுடனும் இருக்க வேண்டும். பண வரவுக்கு வாய்ப்பு குறைவு.

19-7-2021 தினப்பலன் – சுமாரான நாளாக இருக்கும்!

விருச்சிகம்

துடிப்பான நாளாக இருக்காது. உற்சாகம் குறைந்து காணப்படும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டாம். வேலை சூழல் சாதகமாக இருக்காது. பணிச் சுமை அதிகரிக்கும். குடும்பத்தில் சிக்கலான சூழல் காணப்படும். குடும்ப பிரச்னை காரணமாக மன அமைதி குறையலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. சேமிப்பு கரையும்.

19-7-2021 தினப்பலன் – சுமாரான நாளாக இருக்கும்!

தனுசு

ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும். பயனுள்ள வகையில் புதிய தொடர்புகள் கிடைக்கும். பணியிடச் சூழல் சிறப்பாக இருக்கும். கடின உழைப்புக்கு ஏற்ற பலனை அனுபவிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். குடும்ப நலனுக்காக செலவு செய்வீர்கள்.

19-7-2021 தினப்பலன் – சுமாரான நாளாக இருக்கும்!

மகரம்

புதிய வாய்ப்புகள் கிடைக்கும் நாளாக இருக்கும். திருப்திகரமான சூழல் நிலவும். வேலையை சிறப்பாக செய்வீர்கள். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். வெற்றிகரமாக வேலையை முடிப்பீர்கள். குடும்பத்தில் நட்புறவு நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

19-7-2021 தினப்பலன் – சுமாரான நாளாக இருக்கும்!

கும்பம்

கவனத்துடன் செயல்பட வேண்டிய நாள் இன்று. அதிக எதிர்பார்ப்பை கொண்டிருக்க வேண்டாம். வேலை சூழல் சாதகமாக இருக்காது. வேலையில் தடைகளை சந்திக்கும் சூழல் வரலாம். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். செலவுகள் அதிகரிக்கும். பணப் பற்றாக்குறை ஏற்படும்.

19-7-2021 தினப்பலன் – சுமாரான நாளாக இருக்கும்!

மீனம்

எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காது. மனதில் கவலை, தன்னம்பிக்கை குறைவு ஏற்படும். பணியிட சூழல் சுமாராக இருக்கும். வேலைப் பளு அதிகரிக்கும். கடின உழைப்பை வெளிப்படுத்த வேண்டியிருக்கும். குடும்பத்தில் மோதல் போக்கு நிலவும். விட்டுக் கொடுப்பதன் மூலம் வாழ்க்கைத் துணைவருடனான உறவு பாதிக்கப்படுவதை தவிர்க்கலாம். நிதி நிலை திருப்திகரமாக இருக்காது. செலவுகள் அதிகரிக்கும்.

toptamilnews.com