18-11-2021 தினப்பலன்: அதீத கவனத்துடன் செயல்பட வேண்டிய நாள் இன்று!

 
Astrology

பிலவ ஆண்டு I கார்த்திகை 2 I வியாழக்கிழமை I நவம்பர் 18, 2021

இன்றைய ராசி பலன்!

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

மேஷம்

சோர்வான, மந்தமான நாளாக இருக்கும். சேர்வை விரட்டி புத்துணர்வு, மகிழ்ச்சியுடன் இருப்பதன் மூலம் இன்றைய நாளை சாதகமானதாக மாற்றலாம். வேலைப் பளு அதிகரிக்கும். சவால்களை சந்திக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் சலசலப்புகள் ஏற்படலாம். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். பணப் புழக்கம் சுமாராக இருக்கும். செலவுகள் அதிகரிக்கும்.13-05-2021 தினப்பலன் –

ரிஷபம்

ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். வேலையை நிறுத்தி நிதானமாக செய்வதன் மூலம் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். குடும்பத்தில் அன்பான சூழல் நிலவாது. கணவன் மனைவி இடையே மன வருத்தம் ஏற்படலாம். பணப் பற்றாக்குறை காணப்படும்.13-05-2021 தினப்பலன் –

மிதுனம்

ஆசைகள் நிறைவேறும் நாளாக இருக்கும். இலக்குகளை எளிதாக அடைவீர்கள். வேலைப் பளு அதிகரிக்கும். அதை சமாளிக்க திட்டமிட்டு செயல்பட வேண்டியது அவசியம். குடும்பத்தில் குழப்பமான சூழல் காணப்படலாம். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். நிதி நிலை சுமாராக இருக்கும். பண இழப்பைத் தவிர்க்க விழிப்புடன் இருக்க வேண்டும்.

13-05-2021 தினப்பலன் –

கடகம்

அதீத கவனத்துடன் செயல்பட வேண்டிய நாள். இழப்புகளைத் தவிர்க்க கவனமாக இருக்கவும். வேலையில் சாதகமான சூழல் இருக்காது. உயர் அதிகாரியின் கோபத்தைச் சம்பாதிக்க நேரிடலாம். குடும்பத்தில் நல்லுறவு நிலவும். கணவன் மனைவி இடையே அமைதி நிலவும். பண வரவு சிறிதளவு காணப்படும். சேமிப்பு அதிகரிக்கும்.13-05-2021 தினப்பலன் –

சிம்மம்

திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் இன்றைய நாள் வெற்றிகரமான நாளாக அமையும். நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்வது நல்லது. வேலையில் சிக்கல்களைச் சந்திக்கலாம். உடன் பணி புரிபவர்களுடன் நட்புறவைப் பராமரிக்க வேண்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை சீராக இருக்கும். வரவுக்கு ஏற்ப செலவும் இருக்கும்.

13-05-2021 தினப்பலன் –

கன்னி

சாதகமான நாளாக இருக்காது. அதிர்ஷ்டத்தை நம்பாமல் உழைப்பின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். வேலை சூழல் சவால் நிறைந்ததாக இருக்கும். கவனக் குறைவு காரணமாக தவறுகள் நிகழலாம். குடும்பத்தில் அன்பு குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. செலவுகள் அதிகரிக்கும்.13-05-2021 தினப்பலன் –

துலாம்

சமநோக்கு நாளாக இருக்கும். திட்டமிட்டு எச்சரிக்கையுடன் செயல்பட்டால் சாதகமான நாளாக மாறும். வேலைப் பளு அதிகரிக்கும். ஓய்வின்றி உழைக்கும் சூழல் இருக்கும். குடும்பத்தில் நல்லுறவு பாதிக்கப்படலாம். கணவன் மனைவி இடையே இடையூறுகள் ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. செலவுகள் அதிகரிக்கும்.13-05-2021 தினப்பலன் –

விருச்சிகம்

ஏமாற்றமான நாளாக இருக்கும். லட்சியங்களை அடைவதில் தடைகள் காணப்படும். வேலைப் பளு அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வேலையில் தவறுகள் ஏற்படுவதை, தாமதத்தைத் தவிர்க்கலாம். குடும்பத்தில் அமைதி குறைவு காணப்படும். கணவன் மனைவி இடையே மன வருத்தம் ஏற்படலாம். நிதி நிலை சுமாராக இருக்கும். பண விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.13-05-2021 தினப்பலன் –

தனுசு

எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாள். இலக்குகளை அடைவதில் போராட்டம் காணப்படும். வேலையில் தாமதங்கள் காணப்படும். வழக்கமான வேலையைக் கூட செய்ய முடியாமல் திணறும் சூழல் ஏற்படும். குடும்பத்தில் நல்லுறவு பாதிக்கப்படலாம். அமைதியாக இருந்து, விட்டுக்கொடுத்துச் செல்வதன் மூலம் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. கடன் வாங்கும் சூழல் ஏற்படலாம்.13-05-2021 தினப்பலன் –

மகரம்

ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும். இல்லத்தில் அமைதியை நிலைநாட்ட முயற்சிகள் செய்வீர்கள். வேலை சூழல் கடினமாக இருக்கும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்காது. குடும்பத்தில் கருத்து வேறுபாடு காணப்படும். இதை சரி செய்ய முயற்சி செய்வீர்கள். நிதி நிலை சுமாராக இருக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.13-05-2021 தினப்பலன் –

கும்பம்

நீங்கள் முயற்சி செய்தால் இன்றைய நாள் சாதகமானதாக, அதிர்ஷ்டமானதாக அமையும். வெற்றிகளைச் சந்திப்பீர்கள். வேலை சூழல் திருப்திகரமாக இருக்கும். சுறுசுறுப்பாக முன்கூட்டியே வேலையை முடிப்பீர்கள். குடும்பத்தில் அன்பான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.13-05-2021 தினப்பலன் –

மீனம்

யதார்த்தமான நாளாக இருக்கும். எதிர்மறை எண்ணங்களைத் தவிர்ப்பது நன்மையைப் பெற்றுத் தரும். வேலை சூழல் அலைச்சல் மிகுந்ததாக அமையலாம். வேலை காரணமாக வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். மகிழ்ச்சியாக மனம் விட்டுப் பேசுவதன் மூலம் அமைதியை ஏற்படுத்தலாம். நிதி நிலை சாதகமாக இருக்கும். பணம் சம்பாதிப்பீர்கள்.