16-11-2021 தினப்பலன்: முயற்சி செய்தால் வெற்றிகரமான நாளாக அமையும்!

 
Astrology Red 4

பிலவ ஆண்டு I ஐப்பசி 29 I செவ்வாய்கிழமை I நவம்பர் 16, 2021

இன்றைய ராசி பலன்!

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

மேஷம்

உற்சாகத்துடன் செயல்பட்டால் இன்றைய தினம் சாதகமானதாக இருக்கும். வேலைப் பளு அதிகரிக்கும். வேலையை விரைவாக முடிக்க முடியாத சூழல் ஏற்படலாம். குடும்பத்தில் இடையூறுகள் காணப்படும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி பாதிக்கப்படலாம். பணப் புழக்கம் குறைந்து காணப்படும்.

13-05-2021 தினப்பலன் –

ரிஷபம்

விருப்பங்கள் நிறைவேறும் நாளாக இருக்கும். மகிழ்ச்சி, உற்சாகம் அதிகரிக்கும். வேலை சூழல் சாதகமாக இருக்கும். வேலையை சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் நிலவ விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும். நிதி நிலை சீராக இருக்கும்.

13-05-2021 தினப்பலன் –

மிதுனம்

நற்பலன்கள் நிறைந்து காணப்படும். மனதி அமைதி சௌகரியம் காணப்படும். வேலையை விரைவாக முடிப்பீர்கள். உடன் பணி புரிபவர்கள், உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் நல்லிணக்கம் நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பணப் புழக்கம் சாதகமாக இருக்கும்.

13-05-2021 தினப்பலன் –

கடகம்

கவலை மிகுந்து காணப்படும். மற்றவர்களுக்கு உதவுவதன் மூலம் ஆறுதலைப் பெறலாம். வேலை சூழல் கடினமாக இருக்கும். வேலை காரணமாக அலைச்சல் காணப்படும். குடும்பத்தில் இணக்கம் குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். நிதி நிலை சுமாராக இருக்கும்.

13-05-2021 தினப்பலன் –

சிம்மம்

சுமாரான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். வேலை சூழல் சிறப்பாக இருக்காது. உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்காது. வேலையில் தவறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்காது. கணவன் மனைவி இடையே அமைதி நிலவ அனுசரித்து நடப்பது நல்லது. பணப் புழக்கம் குறைந்து காணப்படும். வீண் செலவுகள் அதிகரிக்கும்.

13-05-2021 தினப்பலன் –

கன்னி

நம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி பெறலாம். திட்டமிட்டு செயல்பட வேண்டும். வேலை சூழல் சாதகமாக இருக்கும். சவால்களை சந்திக்க நேரிடலாம். அனைத்தையும் எதிர்கொண்டு செயல்படுவீர்கள். குடும்பத்தில் நல்லிணக்கம் நிலவும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி நிலவும். பணப் புழக்கம் சிறப்பாக இருக்கும்.

13-05-2021 தினப்பலன் –

துலாம்

நிதானத்துடன் செயல்படுவதன் மூலம் வெற்றியைப் பெறலாம். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். வேலை சூழல் சாதகமாக இருக்கும். உடன் பணி புரிபவர்கள் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை முன்னேற்றமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

13-05-2021 தினப்பலன் –

விருச்சிகம்

நன்மை நிறைந்த நாளாக இருக்கும். புத்திசாலித்தனம் வெளிப்படும். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். திறமையை வெளிப்படுத்தி வேலையில் வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் இனிமையான சூழுல் காணப்படும். கணவன் மனைவி உறவு வலுப்படும். நிதி நிலையில் ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். கடன் வாங்கி நிதி நிலையை மேம்படுத்துவீர்கள்.

13-05-2021 தினப்பலன் –

தனுசு

தன்னம்பிக்கை மிகுந்து காணப்படும். உடன் பிறந்தவர்கள், உறவினர்கள், நண்பர்களுடனான நல்லுறவு மேம்படும். வேலை சூழல் பதற்றம் நிறைந்ததாக இருக்கும். நேரத்தை மேலாண்மை செய்வதன் மூலம் வேலையை குறித்த நேரத்தில் முடிக்க முடியும். குடும்பத்தில் சுமுகமான சூழல் இருக்காது. கணவன் மனைவி இடையே வாக்குவாதம் எழலாம். சிலருக்கு பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.13-05-2021 தினப்பலன் –

மகரம்

முயற்சி செய்தால் முன்னேற்றமான நாளாக இருக்கும். புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி சாதிப்பீர்கள். வேலை சூழல் உற்சாகமாக இருக்கும். லாபம் சம்பாதிக்க வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் திருப்திகரமான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி நிலவும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பண வரவு மகிழ்ச்சியை அளிக்கும்.13-05-2021 தினப்பலன் –

கும்பம்

பதற்றமான நாளாக இருக்கும். குடும்பம், எதிர்காலம் தொடர்பான கவலை மனதில் அதிகரிக்கும். வேலைப் பளு அதிகரிக்கும். கவனக் குறைவு காரணமாக வேலையில் தவறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். மற்றவர்களை அரவணைத்து செல்வதன் மூலம் சுமுக உறவை பராமரிக்கலாம். நிதி நிலை சுமாராக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.13-05-2021 தினப்பலன் –

மீனம்

குழப்பமான நாளாக இருக்கும். மனதை தெளிவாக வைத்திருப்பதன் மூலம் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். வேலை சூழல் பதற்றமானதாக இருக்கும். நிதானத்துடன் செயல்பட வேண்டும். குடும்பத்தில் குழப்பமான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே அமைதி குறைவு ஏற்படலாம். பணவ வரவுக்கு வாய்ப்பு குறைவு. செலவுகள் அதிகரிக்கும்.