15-01-2022 தினப்பலன்: செயல்திறன் குறைவான நாளாக இருக்கும்!

 
Astrology

பிலவ ஆண்டு I தை 2 I சனிக்கிழமை I ஜனவரி 15, 2022

இன்றைய ராசி பலன்!

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

மேஷம்

மகிழ்ச்சியான நாளாக இருக்கும். மனதில் உற்சாகம் அதிகமாக இருக்கும். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் குறித்த நேரத்துக்கு முன்னதாகவே வேலையை முடிக்கலாம். குடும்பத்தில் இனிமையான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். ஆக்கப்பூர்வமான காரியங்களுக்கு செலவு செய்வீர்கள்.

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

ரிஷபம்

சாதகமான பலன்கள் கிடைக்காது. இருப்பினும் ஓரளவுக்கு மகிழ்ச்சியான நாளாகவே இருக்கும். வேலைப் பளு அதிகரிக்கும். கொடுக்கப்பட்ட வேலையை செய்ய முடியாமல் திணறும் சூழல் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி குறைவு காணப்படும். கணவன் மனைவி இடையே வாக்குவாதம் எழலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது.24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

மிதுனம்

சிறப்பான நாளாக இருக்காது. திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் இன்றைய நாளை சாதகமானதாக மாற்றலாம். வேலைப் பளு அதிகரிக்கும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்காது. குடும்பத்தில் நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். செலவுகள் அதிகரித்து கவலையை ஏற்படுத்தும். தேவைகளை பூர்த்தி செய்வது கடினமாக இருக்கும்.

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

கடகம்

செயல்திறன் குறைவான நாளாக இருக்கும். மகிழ்ச்சி, உற்சாகம் குறைந்து காணப்படும். வேலை சூழல் கடினமாக இருக்கும். வேலையை முடிப்பதில் வீண் தாமதங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் ஓரளவுக்கு அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே நல்லுறவு பாதிக்கப்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. கையிருப்பு குறையலாம்.

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

சிம்மம்

முயற்சி வெற்றிபெறும் நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலையில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். உயர் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் இனிமையான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே உறவு நிலை உற்சாகமானதாக இருக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். ஆக்கப்பூர்வமான காரியங்களுக்கு செலவு செய்வீர்கள்.

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

கன்னி

சிறப்பான நாளாக இருக்கும். நற்பலன்கள் நிறைந்து காணப்படும். வேலை சூழல் சாதகமாக இருக்கும். திறமைகள் வெளிப்படும். வேலையில் மும்முரமாக இருப்பீர்கள். குடும்பத்தில் அன்பான சூழல் காணப்படும். மற்றவர்களின் தேவைகள், உணர்வுகளைப் புரிந்துகொள்வீர்கள். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். நிதி நிலை போதுமானதாக இருக்கும்.

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

துலாம்

ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். அதீத உணர்ச்சிப் பெருக்கு, கட்டுப்பாடு இழப்பு போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். வேலை சூழல் பிரச்னைக்குரியதாக மாறலாம். வேலையில் கவனக் குறைவு அதிகரித்து தவறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் நல்லுறவு குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி குறைவு ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. சேமிப்பு குறையலாம்.

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

விருச்சிகம்

ஓரளவுக்கு நற்பலன்கள் கொண்ட நாளாக இருக்கும். வெற்றிகளைச் சற்று தாமதமாகப் பெறுவீர்கள். முயற்சிகளைக் கைவிட வேண்டாம். வேலை சூழல் கவலையை அளிக்கலாம். திட்டமிட்டு செயல்படுவது நல்லது. குடும்பத்தில் இறுக்கமான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே வெளிப்படைத் தன்மை குறையலாம். நிதி நிலை சாதகமாக இல்லை. பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது.

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

தனுசு

சிறப்பான நாளாக இருக்கும். லட்சியங்கள், இலக்குகளை நிறைவேற்ற இன்றைய நாள் சாதகமானதாக இருக்கும். வேலையில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் இனிமையான தருணங்கள் காணப்படும். கணவன் மனைவி இடையே நட்புறவு அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

மகரம்

உற்சாகமான நாளாக இருக்கும். புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி இன்றைய நாளை சாதகமானதாக அமைப்பீர்கள். வேலை சூழல் திருப்திகரமாக இருக்கும். உயர் அதிகாரியின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே அமைதியும் நல்லிணக்கமும் அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

கும்பம்

அசௌகரியமான நாளாக இருக்கும். மன அழுத்தத்தைக் குறைக்க ஆன்மிக காரியங்கள், பொழுதுபோக்கில் ஈடுபடலாம். வேலைப் பளு அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்படுவது நல்லது. குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்படலாம். கருத்து வேறுபாடு எழுவதைத் தவிர்க்க விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. பண வரவுக்கு வாய்ப்பு குறைவு. பண இழப்பு ஏற்படலாம்.

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

மீனம்

ஓரளவுக்கு வளர்ச்சிக்கான நாளாக இருக்கும். சவால்களைத் தாண்டி சாதிப்பீர்கள். இலக்குகளை அடைவதில் தாமதம் ஏற்படலாம். சோர்ந்துவிட வேண்டாம். வேலையில் தடைகள் காணப்படும். கடின உழைப்பை நம்பினால் சாதிப்பீர்கள். குடும்பத்தில் அதிருப்தி நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு குறையலாம். நிதி நிலை சுமாராக இருக்கும். வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருக்கும்.