12-11-2021 தினப்பலன்: குடும்பத்தில் அமைதி நிலவும் நாளாக இருக்கும்!

 
Astrology

பிலவ ஆண்டு I ஐப்பசி 25 I வெள்ளிக்கிழமை I நவம்பர் 12, 2021

இன்றைய ராசி பலன்!

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

மேஷம்

சிறப்பான நாளாக இருக்கும். எடுத்த காரியம் அனுகூலமாக முடியும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். வேலை சூழல் சாதகமாக இருக்கும். வேலையில் நல்ல பலன்களைக் காண்பீர்கள். தொழிலில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். குடும்பத்தில் அன்பான சூழலில் காணப்படும். கணவன் மனைவியிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.13-05-2021 தினப்பலன் –

ரிஷபம்

ஓரளவுக்கு சாதகமான பலன்களைக் காண்பீர்கள். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். வேலை சூழல் எளிதாக இருக்கும். வேலைகளை விரைவாக சுறுசுறுப்பாக முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு ஏற்படும். நிதிநிலை சாதகமாக இருக்கும். வேலைக்கு உரிய அங்கீகாரம் பாராட்டைப் பெறுவீர்கள்.13-05-2021 தினப்பலன் –

மிதுனம்

கவலையான நாளாக இருக்கும். மனதில் குழப்பங்கள் ஏற்படும். ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவது நன்மையைத் தரும். வேலைப்பளு அதிகமாக இருக்கும். வேலையில் தாமதங்களைக் காண்பீர்கள். குடும்பத்தில் அமைதி காணப்படும். கணவன் மனைவியிடையே அன்பு காதல் அதிகரிக்கும். சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படும். வாழ்க்கைத் துணையின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள்.

13-05-2021 தினப்பலன் –

கடகம்

மந்தமான நாளாக இருக்கும். தன்னம்பிக்கை குறைவு காணப்படும். வேலை சூழல் சுமுகமாக இருக்காது. வேலையில் தவறுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராக இருக்கும். குடும்பத்தில் அமைதி குறைவு காணப்படும். குடும்பத்தில் சிறு சங்கடம் ஏற்படும் என்றாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. நிதிநிலை சாதகமாக இல்லை. பணம் இழப்புக்கு வாய்ப்பு உள்ளது.13-05-2021 தினப்பலன் –

சிம்மம்

சாதகமான நாளாக இருக்கும். வேலைகளை விரைவாக முடிப்பீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். வேலையில் வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் நல்லுறவு காணப்படும். கணவன்-மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதிநிலை மகிழ்ச்சிகரமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.13-05-2021 தினப்பலன் –

கன்னி
ஏற்ற இறக்கங்களை சந்திக்கும் நாளாக இருக்கும். மன உறுதியுடன் செயல்பட்டால் வெற்றியை சாத்தியமாக்குவீர்கள். வேலை சூழல் சாதகமாக இருக்கும். கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மோதல் போக்கு காணப்படும். இதனால் வருத்தம் ஏற்படலாம். நிதி நிலை சுமாராக இருக்கும். செலவுகள் அதிகமாக இருக்கும். செலவு விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.13-05-2021 தினப்பலன் –

துலாம்

ஓரளவுக்கு வாய்ப்பு மிகுந்த நாளாக இருக்கும். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். வேலை சூழல் சுமாராக இருக்கும். உடன் பணி புரிபவர்களால் பாதிப்பு ஏற்படலாம். குடும்பத்தில் அன்பான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே நல்லுறவு மேம்படும். நிதிநிலை ஏற்ற இறக்கம் இன்றி சமநிலையாக இருக்கும். கையிருப்பு கொண்டு சமாளிப்பீர்கள்.13-05-2021 தினப்பலன் –

விருச்சிகம்

அனுகூலமான நாளாக இருக்காது. மனதில் தன்னம்பிக்கை குறைவு காணப்படும். வேலைப்பளு அதிகரிக்கும். இதனால் கவலை கூடும். வேலையை முன்னதாக முடிக்கத் திட்டமிட்டுச் செயல்படுவது முக்கியம். குடும்பத்தில் கருத்து வேறுபாடு காணப்படும். கணவன்-மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். நிதிநிலை சாதகமாக இருக்காது. வீண் செலவுகள் அதிகரிக்கும். 13-05-2021 தினப்பலன் –

தனுசு

ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் பேசும்போது நிதானம் அவசியம். வேலை சூழல் சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும்குடும்பத்தில் அன்பான சூழலில் காணப்படும். கணவன் மனைவியிடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தின் தேவையை நிறைவேற்றுவீர்கள்.13-05-2021 தினப்பலன் –

மகரம்

வாய்ப்பு மிகுந்த நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. உடன் பணிபுரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் இனிமையான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே நல்லுறவு மேம்படும். நிதிநிலை சிறப்பாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.13-05-2021 தினப்பலன் –

கும்பம்

கவலையான நாளாக இருக்கும். கவலையால் வளர்ச்சி பாதிக்கப்படலாம். மனதில் நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்வது நல்லது. வேலை சூழல் கடினமாக இருக்கும். கவனக்குறைவு காரணமாக தவறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி காணப்படும். கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். செலவுகள் அதிகரிப்பதால் கையிருப்பு குறையும். வரவை விட செலவு அதிகமாக இருக்கும். 13-05-2021 தினப்பலன் –

மீனம்

மந்தமான நாளாக இருக்கும். உடல் நலக் குறைவு ஏற்படலாம். வேலை சூழல் சிறப்பாக இருக்காது. வேலைப்பளு அதிகரிக்கும். உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்காது. குடும்பத்தில் அமைதி குறைவு காணப்படும். கணவன்-மனைவி இடையே மனஸ்தாபம் ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. செலவுகள் அதிகரிக்கும்.