11-01-2022 தினப்பலன்: இன்று சாதகமான நாளாக இருக்கும்!

 
Astrology ஜோதிடம்

பிலவ ஆண்டு I மார்கழி 27 I செவ்வாய்க்கிழமை I ஜனவரி 11, 2022

இன்றைய ராசி பலன்!

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

மேஷம்

நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். அதிகமாக உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்க்க வேண்டும். பணிச் சுமை அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி பெறலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்த மாட்டீர்கள். இதனால் கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. செலவுகள் அதிகமாக இருக்கும்.

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

ரிஷபம்

ஓரளவுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும். சூழலுக்கு ஏற்ப அனுசரித்து நடக்க வேண்டும். வேலையில் மிதமான ஆதாயம் கிடைக்கும். உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்காமல் போகலாம். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே நல்லுறவு மேம்படும். பண வரவுக்கு வாய்ப்பு குறைவு. நிதி விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

மிதுனம்

திருப்திகரமான நாளாக இருக்கும். இன்றைய நாள் மகிழ்ச்சியாக காணப்படும். வேலை சூழல் கடினமாக இருக்கும். இருப்பினும் செயல்திறனில் திருப்திகரமான மனநிலை காணப்படும். குடும்பத்தில் சுமுக நிலை இருக்கும். கணவன் மனைவி இடையே உறவு மேம்படும். நிதி நிலை சுமாராக இருக்கும். பயனுள்ள வகையில் செலவுகள் செய்வீர்கள்.

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

கடகம்

முன்னேற்றமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். வேலை சூழ் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். உடன் பணி புரிபவர்களுடன் நல்லுறவு ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் காணப்படும். சிலருக்கு பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. நிதி நிலை திருப்திகரமாக இருக்கும்.

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

சிம்மம்

மகிழ்ச்சியான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். வேலை சூழல் சாதகமாக இருக்கும். இருப்பினும் வேலையில் கூடுதல் கவனம் தேவைகுடும்பத்தில் நல்லுறவு காணப்படும். கணவன் மனைவி இடையே நட்புறவு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். அதீத மகிழ்ச்சி கவனக் குறைவு காரணமாகப் பண இழப்பு ஏற்படலாம். எனவே, கூடுதல் கவனம் தேவை.

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

கன்னி

தன்னம்பிக்கை குறைந்து காணப்படும். உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக் கொள்வது சாதகமான பலனைப் பெற உதவும். வேலைப் பளு அதிகமாக இருக்கும். வேலையில் தவறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். கணவன் மனைவி இடையே அமைதி நில சுமுகமாகப் பழகுவது அவசியம். பண வரவுக்கு வாய்ப்பு மிகக் குறைவு. பணப் பற்றாக்குறை அதிகரிக்கும்.

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

துலாம்

அனுகூலமான நாளாக இருக்கும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். வேலை சூழல் மகிழ்ச்சிகரமாக இருக்கும். உடன் பணி புரிபவர்கள், உயர் அதிகாரி என அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். குடும்பத்தில் அன்பான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

விருச்சிகம்

சாதகமான நாளாக அமைய வாய்ப்புகள் உள்ளது. அமைதியாக இன்றைய நாளைக் கழிப்பது நல்லது. சவாலான வேலையைக் கூட எளிதாக முடிப்பீர்கள். நிலுவையிலிருந்ததை எல்லாம் முடிப்பீர்கள். குடும்பத்தில் புரிந்துணர்வு காணப்படும். கணவன் மனைவி இடையே நட்புறவு அதிகரிக்கும். நிதி விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது.

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

தனுசு

மந்தமான நாளாக இருக்கும். வெற்றி பெறக் கடினமாக உழைக்க வேண்டும். வேலை சூழல் அலைச்சல் மிகுந்ததாக இருக்கும். வேலையைச் சரியான நேரத்தில் முடிக்க முடியாத சூழல் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி குறைவு நிலவும். கணவன் மனைவி இடையே நல்லுறவைப் பராமரிக்க அணுகுமுறையில் மாற்றம் தேவை. பண வரவுக்கு வாய்ப்பு குறைவு. சேமிப்பு இருக்காது.

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

மகரம்

இன்றைய நாளை உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். உற்சாகம், தைரியத்துடன் காணப்படுவீர்கள். மனம் தெளிவாக இருக்கும் என்பதால் முக்கிய முடிவுகளை இன்று எடுப்பீர்கள். வேலை சூழல் சாதகமாக இருக்கும். உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் அன்பான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

கும்பம்

சாதகமான நாளாக இருக்கும். புதிய மனிதர்களின் சந்திப்பு பயனுள்ளதாக அமையும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். உங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். வேலையை சிறப்பாக செய்து பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் இனிமையான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். பணப் புழக்கம் சிறப்பாக இருக்கும். பணத் தேவைகள் பூர்த்தியாக வாய்ப்பு உள்ளது.24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

மீனம்

அசௌகரியமான நாளாக இருக்கும். எதையும் லேசாக எடுத்துக்கொள்வது நல்லது. மனதை அமைதியாகவும் புத்துணர்வுடனும் வைத்திருக்க வேண்டும். வேலை சூழல் கடினமாக இருக்கும். வேலைப் பளு அதிகரிப்பது மன வருத்தத்தை ஏற்படுத்தும். குடும்பத்தில் சுமுக உறவு காணப்படாது. கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். பண வரவுக்கு வாய்ப்பு குறைவு. இருப்பதைக் கொண்டு சமாளிப்பதே கடினமாக இருக்கும்.