07-01-2022 தினப்பலன்: சுறுசுறுப்பான நாளாக இருக்கும்!

 
Astrology Red 3

பிலவ ஆண்டு I மார்கழி 23 I வெள்ளிக்கிழமை I ஜனவரி 7, 2022

இன்றைய ராசி பலன்!

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

மேஷம்

ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவது மனதுக்கு அமைதியையும் ஆறுதலையும் பெற்றுத் தரும். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். உரிய அங்கீகாரமும் பாராட்டும் கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.13-05-2021 தினப்பலன் –

ரிஷபம்

சுறுசுறுப்பான நாளாக இருக்கும். வெற்றியைக் காண கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பார்கள். குடும்பத்தில் அமைதி குறைவு காணப்படும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். நிதி நிலை சுமாராக இருக்கும். வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருக்கும்.

13-05-2021 தினப்பலன் –

மிதுனம்

சாதகமான நாளாக இருக்கும். உங்கள் வார்த்தைகள் மூலம் மற்றவர்களைக் குளிர்விப்பீர்கள். வேலை சூழல் சற்று அலைச்சல் மிக்கதாக இருக்கலாம். வேலையில் சவால்களைச் சமாளிப்பீர்கள். குடும்பத்தில் நல்லுறவு காணப்படும். கணவன் மனைவி இடையே அமைதி நிலவும். நிதி நிலை சாதகமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

13-05-2021 தினப்பலன் –கடகம்

சுமாரான நாளாக இருக்கும். எந்த ஒரு விஷயத்தையும் திட்டமிட்டு செயல்படுத்துவதன் மூலம் வெற்றி பெறலாம். வேலைப் பளு அதிகமாக இருக்கும். வேலை சூழல் மகிழ்ச்சியாக இருக்காது. குடும்பத்தில் அமைதி குறைவு காணப்படும். கணவன் மனைவி இடையே மன வருத்தம் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்காது. செலவுகள் அதிகமாக இருக்கும்.

13-05-2021 தினப்பலன் –

சிம்மம்

வெற்றிகரமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலை சூழல் சாதகமாக இருக்கும். வேலையை சுறுசுறுப்பாகச் செய்து முடித்து உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். தேவைகளை நிறைவேற்றிக்கொள்வீர்கள்.

13-05-2021 தினப்பலன் –

கன்னி

மன உறுதியுடன் காணப்படுவீர்கள். வெற்றி பெற அனைத்து சாதகமான சூழலும் உள்ளது. திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். உடன் பணி புரிபவர்கள் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் அன்பான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சியும் அன்பும் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்புகள் உள்ளன.

13-05-2021 தினப்பலன் –

துலாம்

பலன்கள் நிறைந்த நாளாக இருக்கும். புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்திச் சாதிப்பீர்கள். வேலைப் பளு அதிகமாக இருக்கும். வேலையில் அதீத கவனத்துடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் உறவு நிலை சாதகமாக இருக்கும். வெளிப்படையாகப் பேசுவதன் மூலம் வாழ்க்கைத் துணைவருடன் புரிந்துணர்வை அதிகரிக்கச் செய்யலாம். நிதி நிலை சாதகமாக இருக்கும். இதனால் மனத் திருப்தி அடைவீர்கள்.

13-05-2021 தினப்பலன் –

விருச்சிகம்

மந்தமான நாளாக இருக்கும். நிதானத்துடனும் நம்பிக்கையுடனும் செயல்பட வேண்டும். வேலைப் பளு அதிகமாக இருக்கும். வேலையை விரைவாக முடிக்க சௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும். குடும்பத்தில் அமைதி குறைவு காணப்படும். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். பண வரவுக்கு வாய்ப்பு குறைவு. பணப் பற்றாக்குறை அதிகரிக்கும்.

13-05-2021 தினப்பலன் –

தனுசு

நன்மை நிறைந்த நாளாக இருக்கும். இன்றைய சூழல் உங்களுக்குச் சாதகமானதாக அமையும். வேலையில் உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆர்வத்துடன் வேலையை சுறுசுறுப்பாகச் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் அதிகரிக்கும். பணப் புழக்கம் மகிழ்ச்சியை அளிக்கும். பணத்தை சேமிப்பீர்கள்.

13-05-2021 தினப்பலன் –

மகரம்

சுமாரான பலன்கள் நிறைந்த நாளாக இருக்கும். மனதில் குழப்பங்கள் அதிகரிக்கும். வேலையில் சிறப்பாகச் செயல்படுவீர்கள். இருப்பினும் மற்றவர்களுடன் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் இனிமையான சூழல் இருக்காது. கணவன் மனைவி இடையே வாக்குவாதம் எழலாம். நிதி நிலை மிதமாக இருக்கும். வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருக்கும்.

13-05-2021 தினப்பலன் –

கும்பம்

சராசரியான நாளாக இருக்கும். ஆன்மிக காரியங்கள் பொழுதுபோக்கில் ஈடுபடுவது அமைதியைப் பெற உதவும். வேலைப் பளு அதிகமாக இருக்கும். வேலையில் வீண் தாமதங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் இனிமையான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். பண வரவுக்குச் சாதகமான வாய்ப்பு உள்ளது.

13-05-2021 தினப்பலன் –

மீனம்

மந்தமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டாம். வேலையில் வீண் தாமதங்கள் ஏற்படும். வேலையில் கவனக் குறைவு அதிகரிக்கும். குடும்பத்தில் மோதல் சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே கருத்து மோதல் ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. பண இழப்புக்கு வாய்ப்புகள் உள்ளது.