05-01-2022 தினப்பலன்: மிகச் சிறப்பான நாளாக அமையும்!

 
Astrology

பிலவ ஆண்டு I மார்கழி 21 I புதன்கிழமை I ஜனவரி 5, 2022

இன்றைய ராசி பலன்!

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

மேஷம்

கடின உழைப்பை வெளிப்படுத்தி வெற்றி பெறுவீர்கள். எதை செய்தாலும் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் செய்யுங்கள். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். நிலுவையில் வைத்திருந்த வேலையையும் கூட விரைவாக முடிப்பீர்கள். குடும்பத்தில் நல்லுறவு நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.13-05-2021 தினப்பலன் –

ரிஷபம்

செயல்திறன் மிக்க நாளாக இருக்கும். வெற்றிகளை எளிதாக பெறுவீர்கள். வேலை சூழல் சற்று அலைச்சல் மிக்கதாக இருக்கலாம். எதிர்பாராத பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம். குடும்பத்தில் மோதல் போக்கு நிலவலாம். அனுசரித்து நடப்பது நல்லது. நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.13-05-2021 தினப்பலன் –

மிதுனம்

நன்மைகள் நிறைந்த நாளாக இருக்கும். மனதில் உற்சாகம் அதிகமாக இருக்கும். எனவே, முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டாம். வேலைப் பளு அதிகமாக இருக்கும். பொறுப்புக்கள் தேடி வரும். நிதானத்துடன் அதை எதிர்கொள்வது நல்லது. குடும்பத்தில் அமைதி குறைவு ஏற்படலாம். எனவே, பழக்கும் போது கவனத்துடன் பழகுவது நல்லது. பண வரவுக்கு வாய்ப்பு குறைவு. பண இழப்பு ஏற்படலாம்.13-05-2021 தினப்பலன் –கடகம்

சாதகமான நாளாக இருக்கும். நண்பர்கள், உறவினர்கள் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.13-05-2021 தினப்பலன் –

சிம்மம்

முயற்சிகள் வெற்றிபெறும் நாளாக இருக்கும். ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவது மனதுக்கு அமைதியைப் பெற்றுத் தரும். வேலை சூழல் திருப்திகரமாக இருக்கும். வேலையை விரைவாக முடிப்பீர்கள். குடும்பத்தில் ஏற்றத் தாழ்வுகள் காணப்படும். இருப்பினும் ஓரளவுக்கு மகிழ்ச்சி காணப்படும். நிதி நிலை சுமாராக இருக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.13-05-2021 தினப்பலன் –

கன்னி

அனுகூலமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலை சூழல் சாதகமாக இருக்கும். திறமையை வெளிப்படுத்தி உயர் அதிகாரியின் கவனத்தை ஈர்ப்பீர்கள். குடும்பத்தில் நல்லிணக்கம் காணப்படும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்புகள் உள்ளன.13-05-2021 தினப்பலன் –

துலாம்

துடிப்பான நாளாக இருக்கும். தேவைகள் நிறைவேறும். வேலையில் அலைச்சல், வெளியூர் பயணம் போன்றவை ஏற்படலாம். உங்கள் திறமையை வெளிப்படுத்துவீர்கள். குடும்பத்தில் புரிந்துணர்வு காணப்படும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தேவையைப் பூர்த்தி செய்வீர்கள்.13-05-2021 தினப்பலன் –

விருச்சிகம்

சாதகமான நாளாக இருக்கும். இன்றைய நாளை பயன்படுத்திக்கொண்டு முன்னேற முயற்சிக்க வேண்டும். வேலை சூழல் சீராக இருக்கும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே உறவு சீராக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்புகள் உள்ளன. சேமிப்பு அதிகரிக்கும்.13-05-2021 தினப்பலன் –

தனுசு

நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். உடனடி பலனை எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். வேலைப் பளு அதிகரிக்கும். அனுசரித்து நடப்பதன் மூலம் வேலையில் ஏற்படக் கூடிய பிரச்னைகளைத் தவிர்க்கலாம். குடும்பத்தில் அமைதி குறைவு காணப்படும். வாழ்க்கைத் துணைவருடன் உரையாடும் போது வார்த்தைகளில் கவனம் தேவை. செலவுகள் அதிகமாக இருக்கும்.13-05-2021 தினப்பலன் –

மகரம்

சமநிலையான நாளாக இருக்கும். மனதில் அமைதி, நல்லிணக்கம் காணப்படும். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். அதிக லாபத்தைக் காண்பீர்கள். உடன் பணி புரிபவர்கள், உயர் அதிகாரியின் ஒத்துழைப்பும் அங்கீகாரமும் கிடைக்கும். குடும்பத்தில் நல்லிணக்கம் காணப்படும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி நிலவும். நிதி நிலை சாதகமாக இருக்கும்.13-05-2021 தினப்பலன் –

கும்பம்

சுமாரான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். வேலைப் பளு அதிகரிக்கும். வேலையில் உடன் பணி புரிபவர்களால் பிரச்னையில் சிக்க நேரிடலாம். குடும்பத்தில் நல்லுறவு பாதிக்கப்படும். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. பண இழப்புக்கு வாய்ப்புகள் உள்ளன.13-05-2021 தினப்பலன் –

மீனம்

ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். ஆற்றலுடன் செயல்பட்டு சாதிப்பீர்கள். வேலை சூழல் கடினமாக இருக்கும். அணுகுமுறையில் மாற்றம் செய்வதன் மூலம் வேலை சூழலைச் சமாளிக்கலாம். குடும்பத்தில் இனிமையான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் காணப்படும். நிதி நிலை சாதகமாக இருக்கும். ஓரளவுக்கு சேமிக்கவும் செய்வீர்கள்.