03-01-2022 தினப்பலன்: நிதானத்துடன் செயல்பட வேணடிய நாள் இன்று!

 
Astrology Red 4

பிலவ ஆண்டு I மார்கழி 19 I திங்கட்க்கிழமை I ஜனவரி 3, 2022

இன்றைய ராசி பலன்!

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

மேஷம்

எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாளாக இருக்கும். நேர்மறை மாற்றங்கள் ஏற்படும். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். உரிய அங்கீகாரத்தைப் பெறுவீர்கள். குடும்பத்தில் நல்லிணக்கம் நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். பயனுள்ள காரியங்களுக்கு செலவு செய்வீர்கள்.

13-05-2021 தினப்பலன் –

ரிஷபம்

நிதானத்துடன் செயல்பட வேண்டிய தினம் இன்று. ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவது நன்மையை பெற்றுத் தரும். வேலை சூழல் கடினமாக இருக்கும். இது கவலையை ஏற்படுத்தும். குடும்பத்தில் மோதல் போக்கு நிலவும். கணவன் மனைவி இடையே அனுசரித்து நடப்பது நல்லது. நிதி நிலை சாதகமாக இருக்காது. செலவுகள் அதிகமாக இருக்கும்.

13-05-2021 தினப்பலன் –

மிதுனம்

சாதகமான நாளாக இருக்கும். புத்துணர்வுடன் நடந்துகொள்வீர்கள். புதிய தொடர்புகள் கிடைக்கும். வேலை சூழல் சாதகமாக இருக்கும். விரைவாக வேலையை முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

13-05-2021 தினப்பலன் –கடகம்

பலன்கள் நிறைந்த நாளாக இருக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வேலை சூழல் சற்று கவலையை ஏற்படுத்தலாம். இருப்பினும் சவாலைச் சமாளிப்பீர்கள். குடும்பத்தில் வாக்குவாதம் ஏற்படலாம். வாழ்க்கைத் துணைவருடன் அனுசரித்து நடப்பது நல்லது. நிதி நிலை ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது.

13-05-2021 தினப்பலன் –

சிம்மம்

சுமாரான நாளாக இருக்கும். கவனத்துடனும் நிதானத்துடனும் செயல்பட வேண்டும். வேலை சூழல் மந்தமாக இருக்கும். வேலையில் பதற்றமான சூழல் காணப்படும். குடும்பத்தில் அமைதி காணப்படும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் அதிகரிக்கும். நிதி நிலை மகிழ்ச்சியாக இருக்காது. செலவுகள் அதிகரிக்கும்.

13-05-2021 தினப்பலன் –

கன்னி

பலன்கள் நிறைந்த நாளாக இருக்கும். வளர்ச்சி அதிகரிக்கும். ஆன்மிக காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். வேலையில் வெற்றி காண்பீர்கள். வேலையை சுறுசுறுப்பாக முடித்து பெயர் வாங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

13-05-2021 தினப்பலன் –

துலாம்

சாதகமான நாளாக இருக்கும். மனதில் தன்னம்பிக்கை, உற்சாகம் அதிகரிக்கும். வேலை சூழல் சாதகமாக இருக்கும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு காரணமாக வேலையை விரைவாக முடிப்பீர்கள். குடும்பத்தில் நல்லுறவு காணப்படும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

13-05-2021 தினப்பலன் –

விருச்சிகம்

பொறுப்புக்கள் அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாளாக இருக்கும். வேலை சூழல் சாதகமாக இருக்கும். அதீத உற்சாகத்துடன் செயல்படுவதால் வேலையில் தவறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் காணப்படும். செலவுகள் அதிகரிக்கும். சேமிப்பு குறையும்.

13-05-2021 தினப்பலன் –

தனுசு

அனுகூலம் குறைவான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். வேலையில் கவனக் குறைவு அதிகரிக்கும். உடன் பணி புரிபவர்களால் பிரச்னைகளில் சிக்க நேரிடலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி குறைந்து காணப்படும். வாழ்க்கைத் துணைவர், உடன் பிறந்தோருடன் கருத்து வேறுபாடு அதிகரிக்கும். நிதி நிலை சுமாராக இருக்கும். முதலீடுகளைச் செய்வதை தவிர்க்கவும்.

13-05-2021 தினப்பலன் –

மகரம்

அமைதியான நாளாக இருக்கும். அன்றாட செயல்களில் கூடுதல் கவனம் தேவை. வேலையில் அலைச்சல் ஏற்படக் கூடும். இருப்பினும் வேலையை கருத்தாக விரைவாக முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி குறைந்து காணப்படும். வாழ்க்கைத் துணைவருடன் அனுசரித்து நடப்பதன் மூலம் நல்லிணக்கத்தைப் பாதுகாக்கலாம். பண இழப்புக்கு வாய்ப்புகள் உள்ளன.

13-05-2021 தினப்பலன் –

கும்பம்

உற்சாகமான நாளாக இருக்கும். இன்றைய நாளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்தில் உற்சாகமான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் காணப்படும். பணப் புழக்கம் சாதகமாக இருக்கும். பணத்தைப் பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.

13-05-2021 தினப்பலன் –

மீனம்

ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். இலக்குகளை அடையக் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். வேலையில் சாதகமான சூழல் இருக்காது. வேலையில் ஆர்வமின்மை அதிகரிக்கும். குடும்பத்தில் உற்சாகமான சூழல் இருக்காது. கணவன் மனைவி இடையே மன வருத்தம் ஏற்படலாம். நிதி நிலை எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது. பண இழப்புக்கு வாய்ப்புகள் உள்ளது.