28-5-2021 தினப்பலன் – குடும்பத்தில் அமைதி நிலவும்!

 

28-5-2021 தினப்பலன் – குடும்பத்தில் அமைதி நிலவும்!

பிலவ வருடம் I வைகாசி 14 I வெள்ளிக்கிழமை I மே 28, 2021

28-5-2021 தினப்பலன் – குடும்பத்தில் அமைதி நிலவும்!

மே 28, 2021 – இன்றைய ராசிபலன்

28-5-2021 தினப்பலன் – குடும்பத்தில் அமைதி நிலவும்!

மேஷம்

நன்மையான நாளாக இருக்கும். மனம் ஆன்மிக காரியங்களில் ஈடுபட விரும்பும். உங்கள் தெருவில் உள்ள கோவிலுக்கு சென்று வழிபாடு செய்யுங்கள். வேலையில் முழு ஆர்வத்துடன் பங்கேற்பீர்கள். அனைத்தையும் வெற்றிகரமாக முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி குறைய வாய்ப்புள்ளது. நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும்.

28-5-2021 தினப்பலன் – குடும்பத்தில் அமைதி நிலவும்!

ரிஷபம்

சுமாரான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டாம். வேலை, தொழில் சூழல் மகிழ்ச்சியானதாக இருக்காது. செய்யும் வேலையில் தவறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் குழப்பமான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே புரிதல் குறையலாம். பணப்புழக்கம் சுமாராக இருக்கும். செலவு அதிகரிக்கும்.

28-5-2021 தினப்பலன் – குடும்பத்தில் அமைதி நிலவும்!

மிதுனம்

வளர்ச்சிக்கான நாளாக இருக்கும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வளர்ச்சியை எட்டலாம். வேலை, தொழில் சூழல் சாதகமாக இருக்கும். சுறுசுறுப்புடன் வேலையை செய்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். லாபகரமான நாளாக இருக்கும்.

28-5-2021 தினப்பலன் – குடும்பத்தில் அமைதி நிலவும்!

கடகம்

வெற்றிகரமான நாளாக இருக்கும். இறங்கும் காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். வேலை, தொழிலில் திருப்திகரமான சூழல் காணப்படும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் இணக்கமான சூழல் காணப்படும். வாழ்க்கைத் துணைவரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். தேவைகள் நிறைவேறும்.

28-5-2021 தினப்பலன் – குடும்பத்தில் அமைதி நிலவும்!

சிம்மம்

பரபரப்பான நாளாக இருக்கும். மனதில் உற்சாகம் கரைபுரண்டோடும். உணர்வுகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இந்த நாளை சிறப்பானதாக மாற்றலாம். அதீத உற்சாகம் காரணமாக செய்யும் வேலையில் தவறுகள் நேரலாம். கணவன் மனைவி இடையே நல்லுறவு பாதிக்கப்படும் சூழலும் உள்ளது. நிதி நிலை சாதகமாக இருக்காது. பண இழப்புக்கு வாய்ப்புள்ளது.

28-5-2021 தினப்பலன் – குடும்பத்தில் அமைதி நிலவும்!

கன்னி

சாதகமான நாளாக இருக்கும். தடைகள் பல வந்தாலும் அனைத்தையும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். வேலைப் பளு அதிகரிக்கும். இருப்பினும் அனைத்தையும் திறம்படச் செய்து முடிப்பீர்கள். வீண் விவாதங்களைத் தவிர்ப்பதன் மூலம் வாழ்க்கைத் துணைவருடன் மகிழ்ச்சியான போக்கைத் தக்க வைக்கலாம். பண வரவுக்கு வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் செலவுக்கும் வாய்ப்புள்ளது.

28-5-2021 தினப்பலன் – குடும்பத்தில் அமைதி நிலவும்!

துலாம்

நிதானமாக திட்டமிட்டு புத்திசாலித்தனத்துடன் செயல்பட வேண்டிய நாள் இன்று. சாதகமான பலன்கள் கிடைக்கவில்லை என்றால் உடனே துவண்டுவிட வேண்டாம். வேலைப் பளு அதிகரிக்கும். உடன் பணி புரிபவர்களுடன் நல்லுறவைப் பேணுவது நல்லது. குடும்பத்தில் நல்லிணக்கம் குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே வாக்குவாதம் எழலாம். நிதி நிலை மகிழ்ச்சிகரமாக இருக்காது. சேமிப்பு கரையும்.

28-5-2021 தினப்பலன் – குடும்பத்தில் அமைதி நிலவும்!

விருச்சிகம்

சிறப்பான நாளாக இருக்கும். கடின உழைப்புக்கு ஏற்ற வெற்றியை பெறுவீர்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். செய்யும் வேலையை சிறப்புடன் செய்வீர்கள். இருப்பினும் வார்த்தைகளில் கவனம் தேவை. கணவன் மனைவி இடையே புரிதல் ஏற்படும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பண வரவுக்கு சிறிதளவு வாய்ப்புள்ளது.

28-5-2021 தினப்பலன் – குடும்பத்தில் அமைதி நிலவும்!

தனுசு

மனதில் குழப்பம் அதிகரிக்கும். இதனால் ஆன்மிகம், பொழுதுபோக்கு போன்றவற்றில் மனதை செலுத்துவது நல்லது. வேலையில் சாதகமான சூழல் இருக்காது. இருப்பினும் தடைகளை வெற்றிகரமாக சமாளிப்பீர்கள். குடும்பத்தில் குழப்பமான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. பண இழப்புக்கு வாய்ப்புள்ளது.

28-5-2021 தினப்பலன் – குடும்பத்தில் அமைதி நிலவும்!

மகரம்

திட்டமிட்டு செயல்பட்டால் இன்றைய நாள் சாதகமாக அமையும். பொறுப்புக்கள் அதிகரிக்கும். இதன் காரணமாக வேலைப் பளு அதிகரிக்கும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்காமல் திணறும் நிலை வரலாம். குடும்பத்தில் நல்லுறவு பாதிக்கப்படலாம். இதனால் மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. கவனமாக இருந்தால் இதைத் தவிர்க்கலாம். பணப் புழக்கம் குறைந்து காணப்படும். செலவு அதிகரிக்கும்.

28-5-2021 தினப்பலன் – குடும்பத்தில் அமைதி நிலவும்!

கும்பம்

நன்மையான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலையில் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உங்கள் உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.

28-5-2021 தினப்பலன் – குடும்பத்தில் அமைதி நிலவும்!

மீனம்

ஏற்றத்தாழ்வு கொண்ட நாளாக இருக்கும். நிதானத்துடனும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். வேலையை திட்டமிட்டு செய்வதன் மூலம் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். வாழ்க்கைத் துணைவருடன் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. நிதி நிலையில் ஏற்றத்தாழ்வு இருக்கும். செலவு கையை மீறி செல்லும்.