20-7-2021 தினப்பலன் – சவாலான நாளாக இருக்கும்!

 

20-7-2021 தினப்பலன் – சவாலான நாளாக இருக்கும்!

பிலவ வருடம் I ஆடி 4 I செவ்வாய்க்கிழமை I ஜூலை 20, 2021

இன்றைய ராசிபலன்

20-7-2021 தினப்பலன் – சவாலான நாளாக இருக்கும்!

மேஷம்

நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டிய நாள். எந்த ஒரு காரியத்தையும் மிகவும் எச்சரிக்கையாக கையாள்வது நல்லது. முக்கிய முடிவுகளை இன்றைய தினம் எடுக்க வேண்டாம். வேலை சூழல் கடினமாக இருக்கும். கவனக் குறைவு காரணமாக வேலையில் தவறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. செலவுகள் அதிகரிக்கும்.

20-7-2021 தினப்பலன் – சவாலான நாளாக இருக்கும்!

ரிஷபம்

கடின உழைப்பை வெளிப்படுத்தினால் இன்றைய தினம் நிச்சயம் வெற்றிகரமான நாளாக இருக்கும். இலக்குகளை நிர்ணயித்து அதன் அடிப்படையில் செயல்படுவது நல்லது. வேலை சூழல் சாதகமாக இருக்கும். வேலை காரணமாக வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம். குடும்பத்தில் இனிய சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்புள்ளது. பணத்தை சேமிக்கலாம்.

20-7-2021 தினப்பலன் – சவாலான நாளாக இருக்கும்!

மிதுனம்

வெற்றிகரமான நாளாக இருக்கும். பேச்சுத் திறமையால் சாதிப்பீர்கள். வேலை சூழல் திருப்திகரமாக இருக்கும். உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். உயர் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் அன்பு அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவருடன் மனம் விட்டு பேசுவது மகிழ்ச்சியை அளிக்கும். நிதி நிலை சுமாராக இருக்கும். தேவைகள் நிறைவேறும்.

20-7-2021 தினப்பலன் – சவாலான நாளாக இருக்கும்!

கடகம்

சுமாரான நாளாக இருக்கும். ஆன்மிக காரியங்களில் மனதை செலுத்துவது அமைதியைப் பெற்றுத் தரும். வேலை சூழல் கடினமாக இருக்கும். உடன் பணி புரிபவர்களுடன் நட்புறவு பாராட்டுவது நல்லது. குடும்பத்தில் மாறுபட்ட மனநிலை நிலவும். கணவன் மனைவி இடையே உறவு பாதிக்கப்படலாம். பணப்பற்றாக்குறை அதிகரிக்கும். கடன் வாங்கும் சூழல் ஏற்படலாம்.

20-7-2021 தினப்பலன் – சவாலான நாளாக இருக்கும்!

சிம்மம்

ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும். இன்றைய தினம் அனுகூலமானதாக அமைய மனதை அமைதியாக வைத்திருப்பது அவசியம். வேலை பளு அதிகரிக்கும். வழக்கமான வேலையைக் கூட செய்ய முடியாமல் திணறும் நிலை இருக்கும். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே மனம் விட்டு பேசுவது நல்லது. பணப் புழக்கம் குறைந்து காணப்படும்.

20-7-2021 தினப்பலன் – சவாலான நாளாக இருக்கும்!

கன்னி

மகிழ்ச்சியான நாளாக இருக்கும். எண்ணங்கள் நிறைவேறும். வேலை, தொழில் சூழல் உற்சாகம் அளிக்கும் வகையில் இருக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் அன்பு அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

20-7-2021 தினப்பலன் – சவாலான நாளாக இருக்கும்!

துலாம்

தடைகள், சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நாளாக இருக்கும். சூழலுக்கு ஏற்ப அணுகுமுறையில் மாற்றம் செய்வது பலன் அளிக்கும். வேலை பளு அதிகரிக்கும். உடன் பணி புரிபவர்களுடன் மோதல் போக்கு நிலவும். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். அமைதியாக இருப்பதன் மூலம் வாழ்க்கைத் துணையுடன் நல்லுறவைப் பேணலாம். நிதி நிலை சுமாராக இருக்கும்.

20-7-2021 தினப்பலன் – சவாலான நாளாக இருக்கும்!

விருச்சிகம்

ஓரளவுக்கு அமைதியான நாளாக இருக்கும்.  யாருக்கும் எதிராக செயல்பட வேண்டாம். நடுநிலையோடு இருப்பது நல்லது. வேலை சூழல் திருப்திகரமாக இருக்கும். உயர் அதிகாரியின் அங்கீகாரத்தைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். பண வரவுக்கு ஓரளவுக்கு வாய்ப்புள்ளது. செலவுகளும் அதிகரிக்கும்.

20-7-2021 தினப்பலன் – சவாலான நாளாக இருக்கும்!

தனுசு

சுமாரான நாளாக இருக்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேறாது. ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவது அமைதியைத் தரும். வேலை சூழல் கடினமாக இருக்கும். புதிய  பொறுப்புக்கள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. பண இழப்பு ஏற்படலாம்.

20-7-2021 தினப்பலன் – சவாலான நாளாக இருக்கும்!

மகரம்

அமைதியான நாளாக இருக்கும். திருப்திகரமான செயல்கள் நடைபெறும். வேலையில் உற்சாகமான சூழல் இருக்கும். வேலையை சுறுசுறுப்பாக முடிப்பீர்கள். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அனுசரணையான போக்கு நிலவும். கணவன் மனைவி இடையே புரிதல், மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

20-7-2021 தினப்பலன் – சவாலான நாளாக இருக்கும்!

கும்பம்

உற்சாகமான நாளாக இருக்கும். விருப்பங்கள் நிறைவேறும் நாளாக இருக்கும். வேலை சூழல் வளர்ச்சியானதாக இருக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் புரிந்துணர்வு காணப்படும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். பயனுள்ள காரியங்களை செய்வீர்கள்.

20-7-2021 தினப்பலன் – சவாலான நாளாக இருக்கும்!

மீனம்

கவனமாக இருக்க வேண்டிய நாள். அணுகுமுறையில் மாற்றம் செய்துகொள்வது நல்லது. வேலை சூழல் சாதகமாக இருக்காது. கவனக் குறைவு காரணமாக வேலையில் தவறுகள் நேரலாம். இதனால் உடன் பணி புரிபவர்கள், உயர் அதிகாரியின் கோபத்துக்கு ஆளாக நேரிடலாம். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். வாயில் இருந்து வரும் வார்த்தைகள் குடும்பத்தினரைக் காயப்படுத்தலாம். நிதி நிலை சுமாராக இருக்கும். பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது.