2-2-2021 தினப்பலன் – இந்த 3 ராசிக்கு முன்னேற்றமான நாளாக இருக்கும்!

 

2-2-2021 தினப்பலன் – இந்த 3 ராசிக்கு முன்னேற்றமான நாளாக இருக்கும்!

சார்வரி வருடம் I தை 20 I செவ்வாய்கிழமை I பிப்ரவரி 2, 2021

2-2-2021 தினப்பலன் – இந்த 3 ராசிக்கு முன்னேற்றமான நாளாக இருக்கும்!

இன்றைய ராசி பலன்!

2-2-2021 தினப்பலன் – இந்த 3 ராசிக்கு முன்னேற்றமான நாளாக இருக்கும்!

மேஷம்

முன்னேற்றமான நாளாக இன்றைய தினம் இருக்கும். எதிர்பாராத இடத்தில் இருந்து எல்லாம் மகிழ்ச்சியான தகவல் வரும். வேலையில் புதிய ஆற்றலுடன் ஈடுபட்டுத் திட்டமிட்ட நேரத்துக்குள் முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் – மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பண வரவுக்கு அதிக வாய்ப்பு உள்ளது. பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.

2-2-2021 தினப்பலன் – இந்த 3 ராசிக்கு முன்னேற்றமான நாளாக இருக்கும்!

ரிஷபம்

எதிர்பார்த்த அளவுக்கு பலன்கள் கிடைக்காது. மனதில் பதற்றம், அவநம்பிக்கை அதிகரிக்கும். இன்று முக்கிய முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம். வேலையில் தடைகள் ஏற்பட்டு விலகும். உடன் பணி புரிபவர்கள், உயர் அதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாவீர்கள். குடும்பத்தில் அமைதி குலையும். கணவன் – மனைவி இடையே நல்லிணக்கம் குறையும். நிதி நிலை திருப்திகரமாக இல்லை. வீண் செலவு ஏற்படலாம் என்பதால் பண விஷயத்தில் கவனத்துடன் இருக்கவும்.

2-2-2021 தினப்பலன் – இந்த 3 ராசிக்கு முன்னேற்றமான நாளாக இருக்கும்!

மிதுனம்

உற்சாகம் குறைந்த நாளாக இருக்கும். மகிழ்ச்சி குறைந்து காணப்படும். வேலை பளு அதிகரிக்கும். இதன் காரணமாக குறித்த நேரத்தில் வேலையை முடிக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தில் அமைதி குறையும். கணவன் மனைவி இடையே மோதல்கள் ஏற்படலாம். நிதி நிலை திருப்திகரமாக இல்லை. வீண் செலவு அதிகரிக்கும் என்பதால் கவனத்துடன் நடந்துகொள்வது நல்லது.

2-2-2021 தினப்பலன் – இந்த 3 ராசிக்கு முன்னேற்றமான நாளாக இருக்கும்!

கடகம்

மகிழ்ச்சியான நாளாக இன்றைய தினம் இருக்கும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். முக்கிய முடிவுகள் எடுக்க இன்றைய தினம் சரியான நாளாக இருக்கும். வேலையில் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும்.

2-2-2021 தினப்பலன் – இந்த 3 ராசிக்கு முன்னேற்றமான நாளாக இருக்கும்!

சிம்மம்

அமைதி குன்றி காணப்படும். கவனக் குறைவு, பதற்றமான மனநிலை ஏற்படும். இதன் காரணமாக உங்களுக்கான வேலையைக் கூட முடிக்க முடியாமல் திணறுவீர்கள். சிறு சிறு தவறுங்கள் கூட ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே நல்லுறவு ஏற்படும். நிதி நிலை ஓரளவுக்குச் சாதகமாக இருக்கும். இருப்பினும் செலவு அதிகரிக்கும்.

2-2-2021 தினப்பலன் – இந்த 3 ராசிக்கு முன்னேற்றமான நாளாக இருக்கும்!

கன்னி

இறுக்கமான நாளாக இன்றைய தினம் இருக்கும். மனதில் அவநம்பிக்கை அதிகரிக்கும். மன அழுத்தம் காரணமாக வேலையை முடிக்க முடியாமல் திணறுவீர்கள். வேலை சூழல் சாதகமாக இல்லை. உயர் அதிகாரியின் கோபத்துக்கு ஆளாக நேரிடலாம். கவனத்துடன் செயல்படுவதன் மூலம் இவை அனைத்தையும் தவிர்க்க முடியும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே அன்பு குறையும். பண வரவு இல்லை. செலவு அதிகரிக்கும்.

2-2-2021 தினப்பலன் – இந்த 3 ராசிக்கு முன்னேற்றமான நாளாக இருக்கும்!

துலாம்

உணர்ச்சிகரமான நாளாக இன்றைய தினம் இருக்கும். இன்றைய தினம் சாதகமாக அமைவதோ அல்லது பாதகமாக மாறுவதோ அனைத்தும் உங்கள் கையில்தான் உள்ளது. கடுமையாக திட்டமிட்டு உழைப்பதன் மூலம் சாதகமான பலனைப் பெற முடியும். வேலை பளு அதிகரிக்கும். மனதில் கவலை ஏற்படும். குடும்பத்தில் சுமுகமான உறவு நீடிக்கும். நிதிநிலை திருப்திகரமாக இல்லை.

2-2-2021 தினப்பலன் – இந்த 3 ராசிக்கு முன்னேற்றமான நாளாக இருக்கும்!

விருச்சிகம்

முன்னேற்றமான நாளாக இன்றைய தினம் இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். மன உறுதியுடன் அனைத்தையும் எதிர்கொள்வீர்கள். வேலையைத் திட்டமிட்டபடி விரைந்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே காதல் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நிதி நிலை சாதகமாக இருக்கும்.

2-2-2021 தினப்பலன் – இந்த 3 ராசிக்கு முன்னேற்றமான நாளாக இருக்கும்!

தனுசு

நம்பிக்கை மிக்க நாளாக இருக்கும். மன உறுதியோடு அனைத்தையும் எதிர்கொள்வீர்கள். எதிர்பார்த்துக் காத்திருந்த பலன் வந்து சேரும். புத்துணர்வோடு வேலையில் ஈடுபடுவீர்கள். உங்கள் திறமைக்கு, உழைப்பு ஏற்ற பாராட்டு கிடைக்கும். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். சிலருக்கு பண வரவுக்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. நிதி விவகாரத்தில் அதிர்ஷ்டமான நாளாகவே அமையும்.

2-2-2021 தினப்பலன் – இந்த 3 ராசிக்கு முன்னேற்றமான நாளாக இருக்கும்!

மகரம்

ஏற்ற இறக்கம் என எதுவும் இல்லாத அமைதியான நாளாக இன்றைய தினம் இருக்கும். மனம் சலனமின்றி காணப்படும். வேலையில் விழிப்புணர்வுடன் ஈடுபடுவதன் மூலம் உடன் பணி புரிபவர்கள் கோபத்தைத் தவிர்க்க முடியும். குடும்பத்தில் அமைதி குறையும். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. நிதி நிலை திருப்திகரமாக இல்லை. கையிருப்பு கரையலாம் கவனம் தேவை.

2-2-2021 தினப்பலன் – இந்த 3 ராசிக்கு முன்னேற்றமான நாளாக இருக்கும்!

கும்பம்

மந்தமான நாளாக இன்றைய தினம் இருக்கும். மனதில் உற்சாகம், தைரியம் குறைந்து காணப்படும். வேலை பளு அதிகரிக்கும். தொழிலில் எதிர்பார்த்த வியாபாரம் இருக்காது. குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்பட வாய்ப்பு அதிகம். வாக்குவாதங்களைத் தவிர்ப்பதன் மூலம் பிரச்னையைத் தடுக்கலாம். பண வரவு இல்லை. செலவு அதிகரிக்கும்.

2-2-2021 தினப்பலன் – இந்த 3 ராசிக்கு முன்னேற்றமான நாளாக இருக்கும்!

மீனம்

முன்னேற்றமான நாளாக இன்றைய தினம் இருக்கும். புதிய வாய்ப்புகள் உங்கள் வீட்டுக் கதவைத் தட்டும். வேலையில் முன்னேற்றம் காணப்படும். திட்டமிட்ட நேரத்தில் பணியை முடிப்பீர்கள். கணவன் மனைவி இடையே உறவு சுமுகமாக இருக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு பண வரவுக்கான வாய்ப்பு அதிகம். குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.