புத்தாண்டை முன்னிட்டு ஆதரவாளர்களை சந்திக்கிறார் சசிகலா!

 
sasikala sasikala

புத்தாண்டு தினத்தன்று சசிகலா தனது ஆதரவாளர்களை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக சசிகலா தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள் நாளை புத்தாண்டு தினத்தை முன்னிட்டு காலை 11 மணிக்கு சென்னை தி.நகர் இல்லத்தில் கழகத் தொண்டர்களை நேரில் சந்திக்கிறார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள் மீது கழகத்தொண்டர்கள் வைத்திருக்கும் அளவற்ற அன்பிற்கும், மரியாதைக்கும் எந்த பரிசுப் பொருட்களும் இணையாகாது.
எனவே, புரட்சித்தாய் சின்னம்மா அவர்களை சந்திக்க வரும் கழகத்தொண்டர்கள் பூங்கொத்து, சால்வை, சாமி படங்கள், புத்தகங்கள் உள்ளிட்ட எந்தவித பரிசுப் பொருட்கள் அளிப்பதையும் தவிர்க்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.