08-11-2022 இன்றைய ராசிபலன் - பணியில் தவறுகள் நேரலாம்

 
rasi palan

சுபகிருது வருடம்  I ஐப்பசி 21 | செவ்வாய்கிழமை 08-11-2022

மேஷம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று நீங்கள் கடுமையான சூழல்களை சந்திக்க நேரிடும். பொறுமையுடன் கையாளுங்கள். உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி சம நிலையுடன் இருக்க முயலுங்கள். தெய்வீகக் காரியங்கள் உங்கள் மனதிற்கு நிம்மதியையும் மன நிறைவையும் தரும். நீங்கள் உங்கள் பணியில் சில தவறுகளை செய்ய நேரலாம். பணி செய்யும் முறையை திட்டமிட்டு அமைத்துக் கொள்வது நல்லது. இன்று உங்கள் வாழ்க்கைத் துணையாரின் விருப்பப்படி நடந்து கொள்ளுங்கள். இதன் மூலம் இல்லத்தில் தேவையற்ற குழப்பங்களைத் தவிர்க்கலாம். இன்று பண வரவிற்கான வாய்ப்புகள் குறைவாக காணப்படுகின்றது. கூடுதல் செலவினங்களை நீங்கள் சந்திக்க நேரலாம்.

ரிஷபம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்றைய நாள் மகிழ்ச்சிகரமாக அமையாது. நீங்கள் கடுமையாகப் போராட நேரலாம். இன்று அசௌகரியங்கள் காணப்படலாம். துயரமான சூழ்நிலை காரணமாக நீங்கள் திருப்தியையும் மன அமைதியையும் இழப்பீர்கள். இன்று பணியில் திருப்திகரமற்ற நிலை இருக்கும். பணியிடத்தின் சூழ்நிலையும் சாதகமாக இருக்காது. நல்ல புரிந்துணர்வு இல்லாத காரணத்தால் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட நேரிடலாம். இன்று பணப்புழக்கம் குறைவாகவே இருக்கும். இழப்புகளை சமாளிக்க பெரிய முதலீட்டிற்கான முடிவை தவிர்க்கவும்.மன அழுத்தத்தின் காரணமாக தலைவலி ஏற்படலாம்.

மிதுனம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று அனைத்து விஷயங்களும் சுமுகமாக நடக்கும். உங்கள் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உங்கள் மேன்மைக்கும் முன்னேற்றத்திற்கும் நல்ல வாய்ப்பு கிடைக்கும் அற்புதமான நாள். இன்று வளர்ச்சிக்கான சிறந்த ஒரு வாய்ப்பை நீங்கள் இழக்க நேரிடலாம். திறமையுடன் பணியாற்ற உங்கள் பணிகளை திட்டமிட்டு செயலாற்றுங்கள். நீங்கள்இன்று உங்கள் துணையுடன் மேம்போக்காகவும் சுமுகமாகவும் நடந்து கொள்ள வேண்டும். வலுவான அனுகுமுறை நல்லுறவை பாதிக்கும். இன்று மோசமான நிதிநிலைமை காணப்படுகின்றது. எனவே பணத்தை கவனமாக கையாள வேண்டியது அவசியம்.

கடகம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

எதிர்காலத்தில் சாதிப்பதற்கான பெரிய கனவொன்றை இன்று காண்பீர்கள். உங்கள் இலக்கை நோக்கி உங்கள் ஆற்றலைப் பயன்படுத்துவீர்கள். மேலதிகாரிகள் உங்கள் திறமையை பாராட்டுவார்கள். உங்கள் செயலுக்கு அங்கீகாரம் கிடைக்கும். உங்களைப் பெருமையாக நினைப்பார்கள். இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடன் இனிமையான வார்த்தைகளையும் உணர்வுகளையும் பகிரந்து கொள்வீர்கள். உங்கள் எதிர்காலம் பற்றி முடிவு எடுப்பீர்கள். இன்று பண விஷயங்களில் சுதந்திரமாகவும் திருப்தியுடனும் செயல்படுவீர்கள். உபயோகமான காரியங்களுக்காக இன்று பணத்தை செலவு செய்வீர்கள்.

சிம்மம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று நீங்கள் துடிப்புள்ளவராக இயங்க மாட்டீர்கள். நீங்கள் உங்கள் செயல்களை விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் செய்ய வேண்டியது அவசியம். உங்கள் உழைப்பிற்கான பலன் இன்று கிடைக்கும். உங்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம் உங்களுக்கு திருப்தியை அளிக்கும். உங்கள் உணர்வுகளை உங்கள் வாழ்க்கைத் துணையிடம் பகிர்ந்து கொள்வதற்கு ஏற்ற நாள். உங்களுடைய சமநிலையான மற்றும் சமயோசித அனுகுமுறையே அதற்கு காரணமாக அமையும். பண வரவு தாராளமாகக் காணப்படும். உடனடி மற்றும் எதிர்கால தேவைகளுக்கான பணம் உங்களுக்கு கிடைக்கும்.

கன்னி

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று நீங்கள் அசௌகரியங்களை உணர்வீர்கள். மன அழுத்தம் ஏற்படும். பொழுது போக்கு அம்சங்களில் ஈடுபடுவதன் மூலம் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்திக் கொள்ளலாம். இன்று சவாலான சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். நீங்கள் உங்கள் பணியில் தவறுகள் செய்ய நேரலாம். மனக் குழப்பங்கள் காரணமாக தவறாக புரிந்து கொண்டு உங்கள் துணையுடன் தேவையற்ற வாக்குவாதத்தில் ஈடுபடுவீர்கள். அத்தகைய உணர்வுகளை தவிர்ப்பது நல்லது. பண இழப்புகள் ஏற்படலாம். பணத்தை கவனமாக கையாள வேண்டும்.


துலாம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று எதிர்பாராத சில நிகழ்வுகள் காரணமாக சற்று பதற்றமான நிலை காணப்படும். நீங்கள் என்ன செய்வது என்று அறியாமல் திகைக்கும் நிலை காணப்படும். இன்று வேலைகள் மலை போல் வந்து குவியும். எனவே அதற்கேற்றாற்போல் திட்டமிட்டு வேலை செய்வது நல்லது. நகைச்சுவை உணர்வுடன் இருக்க முயலுங்கள். மனதை அமைதியாக வைத்திருங்கள். உங்கள் துணையுடன் பேசும் பொழுது அவரை புரிந்து கொண்டு நல்லுறவை பராமரிக்க முயலுங்கள். இன்று நிதிநிலை கவலையை அளிக்கக் கூடியதாக இருக்கும். இன்று அதிர்ஷ்டம் குறைவான நாள். 

விருச்சிகம் 

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்றைய நாள் உங்களுக்கு முன்னேற்றகரமான நாளாக அமையும். உங்கள் இலக்கை அடைவதற்கான வழிமுறைகளை காண்பீர்கள். உங்கள் பாதையில் வரும் தடைக் கற்களை உடைத்தெறிவீர்கள். இன்று உங்கள் திறமைக்கு பாராட்டு கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகள் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். நீங்கள் இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள். இதனால் நல்ல புரிந்துணர்வும் நல்லுறவும் மேம்படும். இன்று திருப்திகரமான நிதிநிலை இருக்கும். சேமிப்பு மூலம் பணவரவு கூடும். இன்று உங்கள் ஆரோக்கியம் நல்ல முறையில் இருக்கும். 

தனுசு

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

நடப்பவை யாவும் நன்மைக்கே என்று எளிதாக எடுத்துக்கொண்டால் இன்று நற்பலன்களே கிட்டும். புதிய மனிதர்களுடன் பழகுவதற்கும் புதிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்கும் இன்று உகந்த நாள். உங்களைச் சுற்றியிருப்பவர்களிடம் நல்லுறவை வளர்த்துக் கொள்வதன் மூலம் உங்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும். நீங்கள் எந்தவிதமான எதிர்பார்ப்புமின்றி வேலை செய்வீர்கள். உங்களுடைய இந்த மனப்பான்மை காரணமாக வேலையை குறித்த நேரத்தில் முடித்துக் கொடுத்து உங்கள் மேலதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள்.நீங்கள் இன்று உங்கள் வாழ்க்கைத் துணையிடம் அமைதியாக சகஜமாகப் பழகுவீர்கள். அதனால் நல்ல புரிந்துணர்வும் நல்லுறவும் மேம்படும். இன்று பணவரவு காணப்படும். உங்கள் வங்கி இருப்பு நல்ல முறையில் பராமரிக்கப்படும்.

மகரம் 

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?


இன்று அசௌகரியங்களும் தேவையில்லாத மன வருத்தங்களும் மேலும் உங்களுக்கு கவலையை அளிக்கும். இன்று அதிக பணிகள் காரணமாக நீங்கள் பிஸியாக இருப்பீர்கள். வேலை அதிகமாக இருந்தாலும் புத்திசாலித்தனமாக சமாளிப்பீர்கள். இன்று உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு அல்லது வாக்குவாதம் ஏற்படலாம். நட்பான அனுகுமுறை தேவை. நிதியைப் பொறுத்தவரை இன்று அதிர்ஷ்டம் குறைவான நாள். பணப்பற்றாக்குறை ஏற்படலாம்.முந்தைய இரவின் தூக்கமின்மை காரணமாக மன அழுத்தமும் அதன் விளைவாக தலைவலியும் காணப்படும்.

கும்பம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?


உங்களின் குறிக்கோள்களை அடைய மிகச் சிறந்த நாளாக இந்த நாள் அமையும். பயணங்களால் வளர்ச்சி ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. செழிப்பான எதிர்காலத்திற்கு இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.இன்று மலை போல் குவியும் வேலையின் சுமை காரணமாக கவலைப்படுவீர்கள். திறமையுடன் பணியாற்ற திட்டமிட்டு செயலாற்ற வேண்டும்.மனதிற்குள் அலைமோதும் கவலைகள் காரணமாக உங்கள் துணையுடன் பேசும் போது பேச்சில் கடுமை காணப்படும். இன்று அதிர்ஷ்டம் குறைவான நாள். வரவுடன் செலவும் சேர்ந்து வருவது உங்களுக்கு கவலையை அளிக்கும்.


மீனம் 

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று நீங்கள் கவலையுடன் காணப்படுவீர்கள். மன அழுத்தமான சூழ்நிலைகளில் சமநிலை இழந்து காணப்படுவீர்கள். மனதை அமைதியுடனும் இலேசாகவும் வைத்திருக்க வெளியிடங்களுக்கு குடும்பத்துடன் செல்லுங்கள். இன்று உங்கள் வேலையில் பிஸியாக இருப்பீர்கள். பணி நிமித்தமாக பயணங்களை மேற்கொள்வீர்கள். இன்று உங்கள் துணையுடன் வெளிப்படையாகப் பேசுவீர்கள். துணையுடனான உங்கள் பேச்சு இன்று பயனுள்ள பேச்சாக அமையும். சில ஆரம்பகட்ட போராட்டங்கள் மற்றும் தடைகளுக்கு பின் பணவரவு உண்டு. நீண்ட காலம் நிலுவையிலுள்ள பணம் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.