07-11-2022 இன்றைய ராசிபலன் - பயணங்களில் கவனம் தேவை

 
Rasi palan

சுபகிருது வருடம்  I ஐப்பசி 20 | திங்கட்கிழமை 07-11-2022

மேஷம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?


இன்று நீங்கள் விரும்பும் வகையில் பலன்கள் இருக்காது. இதனால் உங்கள் தன்னம்பிக்கை குறையும். எனவே இன்று எல்லா செயல்களிலும் நல்ல விளைவுகளைப் பெறுவதற்கு தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். இன்று பணிகள் அதிகமாக காணப்படும். கூடுதலாக கொடுக்கப்பட்ட வேலைகள் அதிக நேரத்தை எடுத்துக் கொள்ளும்.அது உங்களுக்கு வருத்தத்தை அளிக்கும். உறவில் நல்லிணக்கம் காணப்படாது.இன்றைய நாளை மகிழ்ச்சியான நாளாக ஆக்குவதற்கு உங்கள் துணையுடன் முறையான தொடர்பாடலை மேற்கொள்ள வேண்டும். இன்று நிதிநிலைமை சாதகமாக இல்லை. பணத்தட்டுப்பாடு ஏற்படலாம். இது உங்களுக்கு கவலையை அளிக்கும்.

ரிஷபம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று பதட்டமான சூழ்நிலை காணப்படும். அவைகளை சாமார்த்தியமாக கையாள வேண்டும். இன்று வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் பிறரிடம் நட்புணர்வுடன் பழக வேண்டும். சிறந்த பாடல்கள் கேட்பதன் மூலம் சற்று ஆறதல் பெறலாம். இன்று கவனக் குறைவு காரணமாக திறமையாக பணியாற்ற இயலாது. உங்கள் வேலையில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் துணையுடன் இலேசான மற்றும் களிப்பான தருணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.உங்கள் துணையை காயப்படுத்தும் வகையில் கவனக்குறைவான வார்த்தைகளை பேச நேரலாம்.இதனால் உறவின் நல்லிணக்கம் பாதிக்கப்படும். இன்று பணஇழப்புகள் காணப்படும். இன்று செலவுகளைத் தாண்டி பாதுகாப்பாக சேமிக்க இயலாது. இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும்.

மிதுனம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று மகிழ்ச்சியான தருணங்களை அனுபவிக்க சாதகமான நாள் மற்றும் பல நல்ல பலன்கள் கிடைக்கும் நாள். உங்களை ஆதரிக்கக்கூடிய நல்ல நண்பர்களையும் கூட்டாளிகளையும் பெறுவதற்கு நல்ல வாய்ப்புள்ள நாள். உங்கள் செயல்பாட்டின் முலம் உங்கள் திறமை வெளிப்பட்டு முன்னனியை பெறறுத் தரும்;. அதன் விளைவாக உங்களுக்கு ஊக்கத்தொகை சலுகைகள் போன்ற வகையில் பலன் கிடைக்கும். உங்களுடைய துணையிடம் அன்பான உணர்வுகளை பகிர்ந்து கொள்வீர்கள்.உங்கள் அணுகுமுறை உங்கள் துணையை மிகுந்த அளவில் மகிழ்ச்சிக்குள்ளாக்கும். பணப்புழக்கம் அதிகமாக காணப்படும். சேமிப்பிற்கு அதிகமான வாய்ப்பு உள்ளது. உங்கள் நிதிவளர்ச்சி கணிசமாக உயர்ந்து காணப்படும்.

கடகம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்றைய நாள் சுமுகமாக காணப்படும்.உங்களுடைய இலட்சியத்தை விரைவாகவும் எளிதிலும் அடைவீர்கள்.இன்று மகிழ்ச்சியான நாளாக காணப்படும்.உங்கள் வீடு புணரமைத்தலுக்கோ அல்லது புதிய வீடு வாங்குவதற்கோ இந்த நாளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். பணிச்சூழலில் வளர்ச்சி வாய்ப்பு சாதகமாக உள்ளது. நீங்கள் சவால்களை திறமையாகக் கையாள்வீர்கள். உங்கள் துணையிடம் அன்பான உணர்வுகளை பகிர்ந்து கொள்வீர்கள்.இதனால் நல்லுறவு வளரும். இன்று நிதிநிலைமை சுதந்திரமாக இருக்கும்.நீங்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள்.சேமிப்பு நல்ல பலன்களைத் தரும். இன்று ஆரோக்கியம் சிறப்புடன் காணப்படும். மகிழ்ச்சியின் காரணமாக உங்கள் ஆரோக்கியம் திடமாக இருக்கும்.
 

சிம்மம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று மிதமான பலன்களே காணப்படும்.தற்போதைய நிலைமைகளால் நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பெரியோர்களின்; ஆலோசனை உங்களுக்கு வழிகாட்ட மிகவும் உதவும். இன்று பணிச்சுமை அதிகமாக காணப்படும். திட்டமிட்டு பணிகளை ஆற்றுவதன் மூலம் நற்பலன்களைப் பெறலாம். நீங்கள் உங்கள் துணையிடம் பேசும் பொழுது விஷயங்களை எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டும். உங்கள் துணையுடன் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது.உங்கள் பேச்சில் இனிமையையும் உள்ளன்பையும் வெளிப்படுத்துங்கள். இன்று செலவினங்கள் அதிகமாக காணப்படும். போதுமான பணத்தை சேமிப்பது கடினமாகக் காணப்படும்.

கன்னி

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று மிதமான பலன்களே கிடைக்கும் நாள்.உங்களுக்கு சாதகமாக பலன்கள் அமைய நீங்கள் சிறப்பாக செயல்படவேண்டும்.ஆன்மீக காரியங்களில் ஈடுபடுதல் அது சம்பந்தமாக பயணம் மேற்கொள்தல் மெச்சத்தக்கதாக அமையும். மேற்கொண்ட பணிகள் பாதியில் நிற்கும். இன்று கூடுதல் பணிகள் சேர்வதன் காரணமாக கொடுக்கப்பட்ட பணிகள் தேங்கிக் கிடக்கும். உங்கள் துணையிடம் காதலையும் அன்பையும் வெளிப்படுத்த மாட்டீர்கள். இது அவரை காயப்படுத்தும்.மற்றும் உங்கள் நட்ததையை பற்றிய கவலையை உண்டாக்கும். இன்று நிதிநிலைமை ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். உங்கள் குடும்ப அங்கத்தினர்களின் ஆரோக்கியத்திற்காக செலவு செய்வீர்கள்.


துலாம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று சாதகமான நாளாக அமையும். இன்று எடுக்கும் முக்கிய முடிவுகள் நல்ல பலன்களைத் தரும்.எடுக்கும் முயற்சிகள் பயனுள்ளதாகவும் எளிதாகவும் இருக்கும். இன்று மகிழ்ச்சியுடன் பணியாற்றுவீர்கள்.அதனால் உங்கள் மேலதிகாரிகளிடம் நற்பெயரையும் அங்கீகாரத்தையும் பெறுவீர்கள். உங்கள் துணையுடன் நல்லுறவை பராமரிப்பீர்கள். உங்கள் தொடர்பாடல் திறமையால் அவர் இதயத்தில் இடம் பிடிப்பீர்கள். இன்று பணவரவு சிறப்பாக இருக்கும். சௌகரிங்கள் மற்றும் செழிப்பை அனுபவிக்கும் நாளாக இன்றைய நாள் அமையும். ஆரோக்கியக் குறைபாடுகள் ஏதும் இருக்காது. மகிழ்ச்சியும் சாந்தமான மனப்பான்மையும் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

விருச்சிகம் 

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று பயனுள்ள முடிவுகள் கிடைப்பதைக் காணலாம். இன்று மிகுந்த ஆற்றலும் உற்சாகமும் காணப்படும். அது உங்கள் முயற்சிகளின் வெற்றிக்கு உதவும். அனைத்து விஷயங்களிலும் வெற்றி பெறலாம். பணியில் உங்கள் திறமைகளைக் காட்டுவீர்கள். உங்கள் திறமை மற்றும் புத்திசாலித்தனம் உங்கள் செயல்பாட்டில் பிரதிபலிக்கும். உங்கள் துணையுடனான அணுகுமுறையில் அமைதியை கடைபிடிப்பீர்கள்.இதனால் உங்கள் துணையுடன் நல்லுறவு வளரும். இன்று பணவரவு மகிழ்ச்சியளிக்கத்தக்க வகையில் காணப்படும்.அது உங்கள் கடின உழைப்பிற்கான ஊக்கத்தொகை மற்றும் சலுகைகளாக இருக்கலாம்.

தனுசு

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?


இன்று மிதமான பலன்களே கிடைக்கும் இன்று உங்களிடம் சோம்பலும் உற்சாகமின்மையும் காணப்படும் அது உங்கள் வளர்ச்சியை பாதிக்கும். பணியிடச் சூழல் சுமூகமாக இருக்காது. தவறுகள் செய்ய வாய்ப்பு உள்ளது. அது உங்களது மேலதிகாரிகளின் கவனத்திற்கு செல்லும். அவர்கள் அதிருப்தியை வெளிப்படுத்துவார்கள். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள மாட்டீர்கள். திருப்தியான தருணங்கள் காணப்படும் போதிலும் அவற்றை நீங்கள் உணரமாட்டீர்கள். இன்று கூடுதல் செலவினங்கள் காணப்படும்.பயணங்களின் பொழுது பணஇழப்புகள் நேரலாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். 

மகரம் 

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்றைய தினம் குறைந்த அளவே சாதகமாக காணப்படும். உணர்ச்சிப்பூர்வமான காரியங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். உங்கள் தன்னம்பிக்கையை இழக்க நேரிடலாம். எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளுங்கள். நகைச்சுவை உணர்வுடன் எதையும் ரசிக்கத் தெரிந்தால் இன்று நல்ல பலன்களைக் காணலாம். கொடுக்கப்பட்ட பணிகளை சரியான நேரத்தில் முடிப்பதற்கான சாத்தியம் கிடையாது. அது உங்களுக்கு கவலையை உண்டாக்கும். உங்கள் சகபணியாளர்களிடமிருந்து தொல்லைகளை சந்திக்கலாம். இன்றைய நாளை மகிழ்ச்சிகரமாக ஆக்குவதற்கு வளைந்து கொடுக்கும் அணுகுமுறை அவசியம். மகிழ்ச்சியைத் தக்க வைக்க அனுசரித்து செல்ல வேண்டும். தேவையில்லாத செலவுகளால் உங்கள் கையிருப்பு வற்றிவிடும். சேமிப்பதற்கு குறைந்த வாய்ப்பே காணப்படுகிறது.

கும்பம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று உங்கள் விருப்பங்கள் பூர்த்தியடைவதற்கு சாதகமான நாள். நல்ல தருணங்களை அனுபவிப்பதற்கு உகந்த நாள். புதிய தொடர்புகள் மற்றும் பொதுக் கூட்டங்களில் பங்கெடுத்தல் போன்ற விஷயங்களுக்கு நீங்கள் இன்றைய தினத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். பணிகளை ஒழுங்குமுறையான அணுகுமுறையுடன் செய்வீர்கள். நீங்கள் பணியில் மூத்தவர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். உங்கள் துணையிடம் உங்கள் உணர்வுகளை நேரடியாக வெளிப்படுத்துவீர்கள். இதனால் உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக நேரம் கழியும். நிதிநிலைமை அபாரமாக காணப்படும். பணத்தை பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.


மீனம் 

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்றைய தினம் உங்களுக்கு சாதகமாக அமையாது. முக்கியமான முடிவுகளை இன்று எடுப்பதை தவிர்க்கவும். பிறருடன் பேசும் பொழுது பின்விளைவுகளைத் தவிர்க்க வார்த்தகைளில் கவனம் செலுத்தவும். நீங்கள் பாதுகாப்பின்மை உணர்வு கொண்டிருப்பீர்கள். பிரார்த்தனை உங்களுக்கு ஆறுதலை அளிக்கும். கூடுதல் வேலைப் பொறுப்புகள் காரணமாக கொடுக்கப்பட்ட பணிகளை சரியான நேரத்தில் முடிக்க இயலாது. சாதகமான பலன்களைப் பெறுவதற்கு நீங்கள் பணிமுறைகளை திட்டமிட வேண்டும்.உங்கள் துணையிடம் பொறுமையான அணுகுமுறை தேவை. உங்கள் உணர்வுகளை ஆக்ரோஷமாக வெளிப்படுத்த நேரலாம் அதனை தவிர்ப்பது நல்லது. அதிகரிக்கும் குடும்ப பொறுப்புகள் காரணமாக பணத்தை அதிக அளவில் செலவு செய்ய நேரலாம்.உங்கள் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு சிறு கடன்களை வாங்கலாம்.