06-11-2022 இன்றைய ராசிபலன் - தேவையற்ற செலவுகள் ஏற்படும் நாள்

 
rasi palan

சுபகிருது வருடம்  I ஐப்பசி 19 | ஞாயிற்றுக்கிழமை 06-11-2022

மேஷம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?


இன்று மந்தமான நாளாக இருக்கும். கடினமான சவால்களை எதிர்கொள்ள நேரலாம். இறை வழிபாடு வெற்றி அளிக்கும். இன்று அதிகப்படியான பணிகள் காணப்படும். நீங்கள் சவாலான சூழ்நிலைகளையும் சந்திக்க நேரலாம். உங்கள் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதம் காணப்படும். நல்லுறவு பராமரிக்க நீங்கள் பொறுமையை மேற்கொள்ள வேண்டும். பணப்புழக்கம் போதுமானதாக காணப்படாது.தவிர்க்க முடியாத மருத்துவ செலவுகள் காணப்படும். தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளால் பாதிப்பு ஏற்படும். காரமான மற்றும் இனிப்பான உணவு வகைகளை தவிர்க்கவும்.

ரிஷபம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று உங்களுக்கு சாதகமான நாள். உங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி இன்றைய நாளை வெற்றிகரமாக ஆக்கலாம். உங்கள் கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும்.நன் மதிப்பு பெருகும். உங்கள் பணிகளில் வெற்றி காண இயலும். என்றாலும் நீங்கள் மேற்கொள்ளும் பணிகளில் சில ஆரம்ப கால தடைகள் காணப்படும். இது உங்கள் மேலதிகாரிகளின் கவனத்திற்கு செல்லும். அனுசரித்து போவதன் மூலம் குடும்பத்தில் நல்லிணக்கம் காணலாம். பெரியவர்களின் ஆலோசனை பின்பற்றுவது நல்லது. உங்கள் தேவைகளை சமாளிக்க போதிய அளவு பணம் கிடைக்கும். என்றாலும் உங்கள் குடும்ப காக பணம் செலவு செய்ய நேரும்.இன்று ஆரோக்கியம் பொதுவாக சிறப்பாக இருக்கும். என்றாலும் கண் எரிச்சல் ஏற்பட வாய்ப்புள்ளதால் கண்களில் கவனம் தேவை.

மிதுனம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று வளமான நாளாக இருக்கும். உங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். இன்று பல முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பணியிடத்தில் உங்கள் திறமைகளை நிரூபிப்பீர்கள். உங்கள் முயற்சிகளுக்கு நீங்கள் பாராட்டு பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி காணப்படும். உங்கள் உடன்பிறந்தோர் மற்றும் குடும்பத்தின் பிற உறுப்பினர்களிடம் நல்ல புரிந்துணர்வு காணப்படும். நிதிநிலைமை மகிழ்ச்சிகரமாக இருக்கும். நீங்கள் சிறந்த சேமிப்பை பராமரிப்பீர்கள். இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ஆரோக்கியமான வாழ்விற்கான சூழ்நிலை காணப்படும்.

கடகம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

வெளியிடங்களுக்கு செல்வதன் மூலம் உங்கள் கவனத்தை திசை திருப்புங்கள். உங்கள் செயல்களில் உணர்ச்சிப்பூர்வமாக இருப்பதை விட யதார்த்தமாக செயல்படுவது நல்லது. இன்றைய சூழ்நிலையை நீங்கள் அமைதியாக கையாள வேண்டும். நீங்கள் சேவை மனப்பான்மையோடு பணி புரிவதால் உங்களின் முன்ஜாக்கிரதை உணர்வு உங்களுக்கு சாதகமாக இருக்கும். என்றாலும் நீங்கள் உங்களை மேம்படுத்திக் கொண்டு தவறுகளை குறைத்துக் கொள்ள வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் நல்லுறவு பராமரிப்பதில் சற்று கடினம் காணப்படும். சிறந்த அணுகுமுறை மூலம் சிறந்த குடும்ப மதிப்பை பெறலாம். செலவுகள் அதிகமாக காணப்படும். தேவையற்ற செலவுகள் ஏற்படும். எனவே செலவழிக்கும் பழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும்.

சிம்மம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று அமைதியான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும். இன்று சில பதட்டமான சூழ்நிலை காணப்படும். குல தெய்வ வழிபாடு மேற்கொள்ளுங்கள். உங்கள் பணிகளை மேற்கொள்ளும்போது ஏமாற்றங்களும் தடைகளும் காணப்படும். சக பணியாளர்களுடனான தொடர்பு பயனுள்ளதாக அமையாது. நெருங்கிய குடும்ப உறுப்பினர்களிடம் மோதல்கள் காணப்படும். உங்கள் துணையுடன் பழகும் போது அமைதியை மேற்கொள்ளவும். நீங்கள் செலவுகளை தவிர்க்க இயலாது. கவனமுடன் செலவு செய்வது சிறந்தது.

கன்னி

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று உங்களுக்கு மிகவும் சிறப்பான நாள். நீங்கள் எந்தச் செயல் செய்தாலும் அதில் வெற்றி பெறுவீர்கள். புதிய மனிதர்களை சந்தித்து அவர்களின் நட்பை பெறுவீர்கள். இன்று முழுவதும் நீங்கள் உற்சாகமாக இருப்பீர்கள். உங்கள் பணியில் திருப்தியான பலன்களை நீங்கள் காணலாம். உங்கள் பணிகள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். உங்கள் அன்பை வெளிப்படுத்த இது உகந்த நாள். நீங்கள் உங்கள் துணையிடம் உங்கள் உணர்வுகளையும் உணர்சிகளையும் வெளிப்படுத்துவீர்கள். இன்று சுதந்திரமான நிதி நிலைமை காணப்படும். நீங்கள் சிறிது பணம் சேமிப்பீர்கள்.


துலாம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்றைய நாள் சிறப்பாக இருக்கும். இன்று எடுக்கும் முக்கிய முடிவுகள் நல்ல பலன்களை அளிக்கும். இன்று எழும் எந்த சூழ்நிலையையும் சந்திக்கும் உறுதி மற்றும் தைரியம் உங்களிடம் காணப்படும். உங்கள் சக பணியாளர்களுடன் நல்லுறவை பராமரிப்பீர்கள். நீங்கள் செய்யும் பணிக்காக நற்பெயர் பெறுவீர்கள். உங்கள் துணையுடனான சொல்லிலும் செயலிலும் இனிமை உணர்வை வெளிபடுதுவீர்கள்.. இது உறவின் மதிப்பை உயர்த்தும். நிதியில் ஸ்திரத்தன்மை காணப்படும். நீங்கள் சிறிது பணம் சேமிப்பீர்கள்.


விருச்சிகம் 

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று நீங்கள் விவேகத்துடன் சிந்தித்து செயல்பட வேண்டும். அதிகமாக யோசிப்பதை தவிர்க்க வேண்டும். பாதகமான சூழ்நிலைகள் ஏற்படும் எனபதால் உங்கள் செயல்களை கவனமாகச் செய்ய வேண்டும். பணியிடத்தில் கூடுதல் பொறுப்புகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். பணியிடச் சூழல் மகிழ்ச்சிகரமாக இருக்காது. காதலின் நடவடிக்கைகளை லேசாக எடுத்துக் கொள்ள வேண்டும். உங்கள் துணையுடனான உறவு நல்லுறவாக இருக்க இது மிகவும் அவசியம். இன்று கையில் போதிய அளவு பணம் காணப்படாது. இன்று கூடுதல் செலவுகள் செய்ய நேரும். அதிகமாக உணர்ச்சி வசப்படுவதையும் பாதுகாப்பின்மை உணர்வையும் தவிர்க்க வேண்டும். இந்த உணர்வுகள் சிறந்த ஆரோக்கியத்தை பாதிக்கும்.
 

தனுசு

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?


இன்று மந்தமான நாளாக இருக்கும். நீங்கள் எளிதில் உணர்ச்சி வசப்படுவீர்கள். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். பணியிடத்தில் வளர்ச்சி குறைந்து காணப்படும். நீங்கள் பணி மாற்றம் விரும்புவீர்கள். இதனால் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். நீங்கள் உங்கள துணையுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவீர்கள். இத்தகைய உணர்வை நீங்கள் தவிர்த்து மகிழ்ச்சியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பணப்புழக்கம் மகிழ்ச்சிகரமாக காணப்படாது. கூடுதலான தேவையற்ற செலவுகள் காணப்படும். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்திற்காக பணம் செலவு செய்ய நேரலாம். இது உங்களுக்கு கவலை அளிக்கும்.

மகரம் 

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று உங்களுக்கு துடிப்பான நாளாக இருக்கும். நீங்கள் நம்பிக்கை உணர்வுடன் காணப்படுவீர்கள். நீங்கள் சமநிலையோடு நடந்து கொள்வீர்கள்.இது உங்களுக்கு வெற்றியை பெற்றுத் தரும். உங்களின் பணிக்கான பாராட்டைப் பெறுவீர்கள். உங்கள் செயல்திறன் மேலதிகாரினளின் கவனத்தை ஈர்க்கும். நீங்கள் உங்கள் துணையுடன் சில உணர்வுகளை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைவீர்கள். உறவில் நல்லிணக்கம் காணப்படும். பண வரவு சீராக இருக்கும். நீங்கள் பணத்தை பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள். இன்று பெரிய அளவிலான ஆரோக்கியப் பிரச்சினை ஏதும் இருக்காது. பொதுவாக இன்று நீங்கள் உற்சாகத்துடன் இருப்பீர்கள். இதனால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கும்பம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று அதிக எதிர்பார்ப்புடன் இருக்காதீர்கள். இன்று சில சௌகரியங்களை இழக்க நேரும். புதிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும் பொது விழாக்களில் கலந்து கொள்வதும் உங்களுக்கு நல்ல பலனளிக்கும். முறையாக திட்டமிட்டு பணியாற்ற இன்றைய நாளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இன்று வெற்றி பெறுவதற்கு திட்டமிட வேண்டியது அவசியம். இன்று காதல் விவகாரங்களுக்கு உகந்த நாள் அல்ல. உங்கள் துணையுடன் தேவையில்லாத சண்டை ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று நீங்கள் பணத்தை வீணாக்குவீர்கள். பணத்தை சேமிக்க இயலாது. தேவையற்ற செலவுகள் காணப்படும்.


மீனம் 

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று சற்று மந்தமான நாளாக இருக்கும். இன்று அமைதி தேவையெனில் தைரியம் உறுதி மற்றும் நம்பிக்கை அவசியம். இன்று உங்களுக்கு அதிக பணிகள் காணப்படும். பணியில் நீங்கள் மும்மரமாக இருப்பீர்கள். பணிகளை மேற்கொள்ளும்போது தவறுகள் நேர வாய்ப்புள்ளது. இது உங்களுக்கு கவலை அளிக்கும். குடும்பத்தில் நல்லுறவு பராமரிக்க அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். இன்று பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் பணத்தில் கவனம் தேவை. பதட்டம் காரணமாக செரிமானம் மற்றும் தலைவலி பிரச்சினை காணப்படும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.