14-05-2022 இன்றைய ராசிபலன்- திடீர் பயணங்கள் மகிழ்ச்சி அளிக்கும்

 
Rasi palan

சுபகிருது வருடம்  I சித்திரை 31 | சனிக்கிழமை | மே 14, 2022


மேஷம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்றைய நாள் சிறப்பான நாள். நீங்கள் உங்கள் செயல்களை குறித்த நேரத்திற்குள்ளோ அல்லது அதற்கு முன்போ முடிப்பீர்கள். உங்கள் புத்திசாலித்தனத்தை மேம்படுத்த நீங்கள் சாதகமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பணியிடத்தில் உங்களுக்குள் மறைந்திருக்கும் திறமைகளை பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் திருப்தி கிடைக்கும், தரமான பணிகளை குறித்தநேரத்தில் முடித்துக் கொடுக்க இயலும். புதிய முதலீடுகளில் பங்கேற்பது போன்ற முக்கிய முடிவுகளை இன்று நீங்கள் எடுக்கலாம். பணத்தை பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள். உங்கள் பொறுப்புகளை சிறப்பாக செய்வீர்கள். இன்று ஆரோக்கியமாக இருப்பீர்கள். நல்ல உணவுமுறை ஆரோக்கியத்தை சிறப்பாக தக்க வைக்கும். கால் வலி வர வாய்ப்புள்ளதால் லேசான உடற்பயிற்சி மேற்கொள்ளவும்.

ரிஷபம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

நீங்கள் இன்று வெளியிடங்களுக்கு செல்வீர்கள். அது உங்களுக்கு உதவியாகவும் ஆறுதலாகவும் இருக்கும். நீங்கள் இன்று கவனத்துடன் பணியாற்றுவீர்கள். உங்களை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் பணியாற்றுவீர்கள். இதனால் பணியில் தவறுகள் ஏற்படுவது குறையும். இன்று அதிகம் செலவாக வாய்ப்புள்ளதால் பண விஷயத்தில் கவனம் தேவை. எந்த விஷயத்திற்கு எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்று சாதுர்யமாக முடிவெடுங்கள். உணவில் கவனம் தேவை. குளிர்ச்சியான உணவை உட்கொண்டால் தொண்டை வலி ஏற்படும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
 
மிதுனம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று மனதில் தெளிவு வேண்டும். வருவதை எதிர்கொள்ளுங்கள். ஆன்மீக நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஆறுத அளிக்கும். இன்று வேலைகள் கூடுதலாக இருந்தாலும் நீங்கள் சமார்த்தியமாக செயல்படுவீர்கள். பணிகளை குறித்தநேரத்தில் முடிப்பீர்கள். இன்று சிறப்பான நாளாக இருக்கும். இன்று சிறிது உணர்ச்சிவசப்படுவீர்கள். யதார்த்தமான அணுகுமுறை தேவை. பணத்தை எவ்வாறு கையாள்வதென்று அறிந்து கொள்ள வேண்டும். இதன் மூலம் செலவை கட்டுப்படுத்தி சேமிப்பை அதிகரிக்க இயலும். உங்கள் குழந்தைகள் ஆரோக்கியமாய் இருக்க பணம் செலவு செய்ய நேரும். 

கடகம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

நேர மேலாண்மை திறன் மூலம் இன்று வெற்றி காண்பீர்கள். சிறப்பாக திட்டமிட்டால் இன்று அனைத்தும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். வேலை அதிகமாக இருப்பதாக உணர்வீர்கள். உங்கள் இருவரிடையே நல்ல பிணைப்பு ஏற்பட உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பேசும் போது உங்கள் வார்த்தைகளில் கவனம் தேவை. இன்று பண வரவு அதிகமாக இருக்காது. என்றாலும் பணத்தை சிறப்பாக கையாண்டால் தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்த இயலும்.
 

சிம்மம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று முன்னேற்றகரமான நாளாக இருக்கும். முறையாக திட்டமிடுவதன் மூலம் வளர்ச்சி காணலாம். இன்று ஆற்றலும் உறுதியும் உங்களிடம் நிறைந்திருக்கும். நீங்கள் முக்கிய முடிவுகளை எடுக்கலாம். இன்று உங்கள் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உங்களிடம் நம்பிக்கையான அணுகுமுறை காணப்படும். அது உங்கள் பணியில் வெளிப்படும். பணம் சம்பாதிக்கும் திறமை மேம்படும். இதன் மூலம் சுதந்திரமான நிதி நிலைமையும் சுய சார்பும் காணலாம். இன்று உங்களிடம் நேர்மறை எண்ணம் காணப்படும். அது உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

கன்னி

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று ஆன்மீக ஈடுபாடு சிறந்த பலனைத் தரும். யோகா மற்றும் தியானம் மூலமும் பலன் பெறலாம். இதனால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இன்று பணிகள அதிகம் இருப்பதாக உணர்வீர்கள். சிறந்த யுக்திகளைக் கையாண்டு கவனமுடன் பணியாற்றினால் இன்றைய செயல்களை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியும். இன்று செலவுகள் அதிகமாக இருக்கும். செலவுகளை முடிந்த அளவில் கட்டுப்படுத்தி கையிலிருக்கும் பணத்தில் சமாளிப்பது சிறந்தது.

துலாம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?


உங்கள் இலக்குகளை அடைவதில் தடைகள் காணப்பட்டாலும் உங்கள் மன தைரியம் மற்றும் உறுதி மூலம் வெற்றி பெறுவீர்கள். பாதைகள் கடினமாக இருந்தாலும் பலன்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். அமைதியாக இருங்கள். வெற்றி நிச்சயம். உங்கள் கடின உழைப்பு இன்று உங்களை வெற்றி பெற்ற மனிதனாக்கும். அதிர்ஷ்டத்தை நம்பாமல் உழைப்பை நம்புங்கள். இன்று வேலை அதிகமாக காணப்படும். அதனை நீங்கள் சிறப்பான திட்டத்துடனும் உறுதியுடனும் எதிர்கொள்வீர்கள். சாதரணமாக செய்யும் செலவைக் காட்டிலும் இன்று செலவுகள் அதிகமாக இருக்கும். முடிந்த அளவு செலவைக் குறைக்க வேண்டும். அது சிறிய அளவு என்றாலும் பயனுள்ளதாக இருக்கும்

விருச்சிகம் 

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று உங்களிடம் ஆன்மீக விழிப்புணர்வு காணப்படும். இதன் மூலம் அமைதியும் உங்கள் எண்ணத்தில் தெளிவும் காணப்படும். உங்கள் வெற்றிக்கு இதுவே முதல் காரணமாக அமையும். இன்றைய நாளை சிறப்பாக்குங்கள். உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முயலுங்கள். அன்றாடப் பணிகளைக் கூட இன்று கவனமுடன் கையாள வேண்டும். பணிகள் சிறிது அதிகமாக இருக்கும் என்பதால் நீங்கள் சிறிது பதட்டத்துடன் காணப்படுவீர்கள். பதட்டப்படாமல் அமைதியாக இருக்க வேண்டியது அவசியம். இன்று அதிக பொறுப்புகள் காரணமாக செலவுகள் அதிகமாக இருக்கும். இதனை உங்களால் சமாளிக்க இயலும் என்பதால் கவலை வேண்டாம். உங்கள் வரவு மற்றும் செலவை கண்காணியுங்கள். அனைத்தும் சிறப்பாக நடக்கும்.

தனுசு

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இறை வழிபாடும் ஆன்மீக ஈடுபாடும் இன்று உங்களுக்கு வரமாக அமையும். சுய முன்னேற்றத்திற்கான பாதையில் செல்லுங்கள். உங்களுக்கு மாற்றங்கள் ஏற்படும். நீங்கள் விரும்பியதைஅடைய தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டியது அவசியம். இன்று மிகவும் முன்னேற்றகரமான நாள். இன்று புதிய பணிகளுக்கான வாய்ப்புகள் கிடைக்கும். இது உங்களுக்கு உற்சாகத்தை அளிக்கும். இன்று நிதிநிலைமை வளர்ச்சிகரமாக இருக்கும். இன்று உங்களிடம் அதிக பணம் காணப்படும். உங்களுக்கு நீண்ட கால பயன் தரும் விஷயத்திற்கு இன்று பணம் செலவு செய்வீர்கள். இன்று முழு ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள்.


மகரம் 

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று மிகவும் உற்சாகமான மகிழ்ச்சியான நாள். இன்று உங்கள் மனதில் திருப்தி நிறைந்திருக்கும். பணியிடச் சூழல் இனிமையாக இருக்கும். புதிய வாய்ப்புகள் மகிழ்ச்சியை அளிக்கும். உங்கள் மகிழ்ச்சி காரணமாக நீங்கள் பல மடங்கு திறனுடன் பணியாற்றுவீர்கள். இன்று நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். இன்று பணம் அதிகமாக சம்பாதிப்பீர்கள். உங்கள் சம்பாத்தியமும் சேமிப்பும் இன்று ஏறுமுகமாக இருக்கும். மகிழ்ச்சி என்பது நம்முள் பிறப்பது என்பதை நினைவில் கொள்ளுங்கள். எந்த விஷயத்திற்கும் பதட்டப்படாதீர்கள். அதனை கடைபிடித்தால் நீங்கள் ஆரோக்கியமாக இருப்பீர்கள்.

கும்பம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

உங்களைச் சுற்றியுள்ளவர்களோடு ஒத்துச் செல்லுங்கள். இன்று ஏழை மற்றும் தேவைப்படுவோருக்கு உணவு அல்லது பணம் அளியுங்கள். இன்றைய நாளை கழிக்க ஏதாவது ஒரு பொழுதுபோக்கு விஷயங்களில் ஈடுபடுங்கள். பணியிடத்தில் உங்கள் பொறுமை சோதனைக்குள்ளாகும். அமைதியாக பணிகளை மேற்கொள்ளுங்கள்.இதன் மூலம் பிறரின் நன்மதிப்பை பெறுவீர்கள். இன்று பணத்தை சேமிக்க வேண்டியது முதன்மையானது. கவலையற்ற எதிர்காலத்திற்கு பணத்தை கையாளும் திறமை தேவை. முடிந்த அளவு அமைதியாக இருங்கள். 

மீனம் 

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

நீங்கள் இன்று உணர்ச்சிப்பூர்வமான அணுகுமுறை மேற்கொள்வீர்கள். விரைந்து முடிவெடுக்காதீர்கள். சூழ்நிலைக்கு தக்கவாறு நடந்து கொள்ளுங்கள். ஆன்மீகத்தில் நாட்டம் கொள்வதன் மூலம் விஷயங்களை எளிதாகக் கையாளலாம். இன்று பணிகள் அதிகமாக இருப்பதாக உணர்வீர்கள். அதனை மனதில் கொண்டு வருத்திக்கொள்ளதீர்கள். விரைவாகவும் எளிதாகவும் பணியாற்றுவதைப் பற்றி சிந்திக்க முயலுங்கள். பண விஷயத்தில் பொறுமை தேவை சரியான நேரத்தில் உங்களுக்கு பணம் கிடைக்கும். பண விஷயத்தைப் பற்றி கவலைப்படுவதனால் எந்தப் பலனும் இல்லை.