29-07-2022 இன்றைய ராசிபலன் - செலவுகள் உண்டாகும் நாள்

 
Rasi palan

சுபகிருது வருடம்  I ஆடி 13 | வெள்ளிகிழமை | ஜூலை 28, 2022


மேஷம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று மிதமான பலன்களே கிடைக்கும். இருப்பினும் மேற்கொண்டு செல்வதற்கு சில உந்துதல்கள் தேவைப்படுகின்றது. இன்று உங்கள் பொறுமை சோதனைக்குள்ளாகும். பணியிடத்தில் பொறுமை தேவை. பலன்கள் உங்களுக்கு சாதகமாக அமைய கடினமாக உழைக்க வேண்டும். நல்லுறவை ஏற்படுத்த துணையுடன் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். இந்த அணுகுமுறை மகிழ்ச்சியயை ஏற்படுத்தும். நிதி வளர்ச்சி குறைந்து காணப்படும். உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய சிறிய அளவில் கடன்கள் வாங்கலாம்.

ரிஷபம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று நிலுவையில் உள்ள பணிகளை செய்வதற்கு உந்துதல் கிடைக்கும். உங்கள் முயற்சி மூலம் இன்றைய நாளை வளமாக்கலாம். நீங்கள் செய்யும் பணி உங்களுக்கு திருப்தி அளிக்கும். உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் துணையை நீங்கள் வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்வதன் மூலம் அவரை நன்கு புரிந்துகொள்வீர்கள். இன்று அதிக பணம் காணப்படும். உங்கள் வங்கியிருப்பு அதிகரிக்கும்.


மிதுனம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்றைய நாள் மிதமான பலன்களைத் தரும். யதார்த்தமான அணுகுமுறை மூலம் நீங்கள் நல்ல பலன்களைக் காணலாம். எதிர்மறை எண்ணங்களை கைவிடுங்கள். பணியிடத்தில் சிறு பிரச்சினைகள் ஏற்படலாம். இதனை சமாளிக்க நீங்கள் திட்டமிட வேண்டும். சிறப்பான முறையில் தகவல்களைப் பரிமாற்ற வேண்டும். உறவில் நல்லிணக்கத்தைப் பேண எந்தச் சூழ்நிலையிலும் உணர்ச்சிவசப்படாதீர்கள். இன்று பணப்புழக்கம் போதிய அளவில் காணப்படாது. உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய நீங்கள் கடன் வாங்க வேண்டியிருக்கும்.

கடகம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

ஆன்மீக செயல்களுக்கு நேரம் ஒதுக்குங்கள். இதனால் நற்பலன்கள் கிடைக்கும். எளிதில் உணர்சிவசப்படுவீர்கள். இதனை தவிர்த்துவிடுங்கள். இன்று முக்கியமான முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம். பணியில் கவனம் செலுத்துங்கள். கவனச் சிதறலால் தவறுகள் ஏற்படும். உறவின் நல்லிணக்கத்தை தக்க வைக்க அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். இல்லையெனில் மகிழ்ச்சி கெட வாய்ப்புள்ளது. இன்று செலவுகள் அதிகமாக காணப்படும். உங்கள் ஆடம்பர செலவுகளை விட்டுக்கொடுக்க வேண்டும்.

சிம்மம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று வெற்றி பெறுவதற்கு யதார்த்தமான அணுகுமுறை தேவை. முக்கியமான முடிவுகள் எடுப்பதை இன்று தவிர்க்க வேண்டும். உங்கள் பணிகளை எளிதாக ஆற்ற இயலாது. பணிகளைக் கையாளும்போது தவறுகள் நேராத வண்ணம் கவனம் தேவை. உங்கள் துணையை நீங்கள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். இந்த அணுகுமுறையால் மகிழ்ச்சி கிடைக்கும். இன்று நிதிநிலைமை சிறப்பாக இருக்காது. பணத்தை தக்க வைத்துக்கொள்ளும் வகை அறிய வேண்டும்.

கன்னி

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று உற்சாகமான நாள். இன்றைய நாளை திருப்தியுடன் கொண்டாடி மகிழ்வீர்கள். பணிச்சூழல் ஆக்கப்பூர்வமான பலன்களைத் தரும். உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன. உங்களின் சகஜமான அணுகுமுறை மூலம் உங்கள் துணையிடம் அன்பை பகிர்ந்து கொள்வீர்கள். இன்று பண வரவு காணப்படுகின்றது. பணத்தை சேமிக்கும் நல்ல சூழ்நிலை காணப்படுகின்றது. நீங்கள் உங்களை வருத்திக் கொள்ளாமல் இருந்தால் இன்று ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

துலாம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?


இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். புதிய நண்பர்கள் மற்றும் புதிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். பணிகளை எளிதாக முடிப்பீர்கள். சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் பணிக்கு நல்ல கருத்துக் கணிப்பு கிடைக்கும். உங்கள் துணையுடன் நேர்மையான அணுகுமுறை கொண்டிருப்பீர்கள். இதனால் உறவு வலுப்படும். பணம் அதிக அளவில் காணப்படும். பயனுள்ள வகையில் பணத்தை செலவு செய்வீர்கள்.
 
 

விருச்சிகம் 

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

உங்கள் செயல்களை ஆற்றும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும் நம்பிக்கை இழக்கக் கூடாது. பணியிடத்தில் நல்ல பலன்களைப் பெற அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். சிறந்த பணி நடைமுறைகளை உருவாக்கி உங்கள் திறமைகளை நீங்கள் பயன்படுத்தலாம். உங்கள் துணையைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யவேண்டும். உங்கள் துணையிடம் சகஜமான அணுகுமுறை மேற்கொள்ளுங்கள். இன்று நிதி வளர்ச்சி அவ்வளவு சிறப்பாக காணப்படாது. பணத்தை கவனமாகக் கையாள வேண்டும்.

தனுசு

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று சுமாரான நாள். இன்று தைரியம் குறைந்து காணப்படும். உறுதியுடன் இருக்க வேண்டியது அவசியம். பணியிடத்தில் பதட்டமான நிலை காணப்படும். பணிச்சுமையை சமாளிக்க சிறப்புடன் பணியாற்ற வேண்டும். உங்கள் துணையுடன் நல்லுறவைப் பராமரிக்க விஷயங்களை எளிதாக எடுத்துக் கொள்ளுங்கள். உங்களின் இந்த அணுகுமுறை உங்கள் துணையை மகிழ்விக்கும். இன்று நிதி வளர்ச்சி மகிழ்ச்சிகரமானதாக இல்லை. உங்கள்ளல் முடிந்த அளவு சேமிக்க வேண்டும்.

மகரம் 

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

உங்கள் முயற்சியில் வெற்றி பெற உகந்த நாள். உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள். இன்று நற்பலன்கள் கிடைக்கும். பணியிடத்தில் வெற்றி கிடைக்கும். உங்கள் திறமைக்கு மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். உங்கள் துணையுடன் திருப்திகரமான உறவு காணப்படும். இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்வீர்கள். பணப்புழக்கம் சிறப்பாக காணப்படும். உங்கள் வங்கியிருப்பு அதிகரிக்கும். பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு லாபம் காண்பீர்கள்.
 

கும்பம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?


இன்றைய நாள் சாதகமான நாள். இன்று கூடுதல் பலன்கள் கிடைக்கும். முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு திட்டமிடலாம். பணியிடத்தில் முன்னேற்றம் காணப்படும். உங்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். உங்கள் நேர்மையான அணுகுமுறை மற்றும் கட்டுப்பாடு மூலம் உங்கள் துணையுடன் நல்லுறவு பராமரிபீர்கள். இன்று பண வரவு அதிகமாக காணப்படும். பணத்தை பயனுள்ள வழியில் செலவு செய்வீர்கள்.  

மீனம் 

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்றைய நாள் சுமாராக இருக்கும். கவனக் குறைவாக இருந்தால் சில சிறந்த வாய்ப்புகளை இழக்க நேரலாம். எனவே நகைச்சுவையுடன் கூடிய அணுகுமுறை திருப்தியை அளிக்கும். உங்கள் கீழ் பணி புரிபவர்களால் சில தொல்லைகளை சந்திக்க நேரும். பணிச்சுமை அதிகமாக காணப்படும். பணிகளை கவனமுடன் கையாள வேண்டும். நட்பான அணுகுமுறை மேற்கொள்வதன் மூலம் இருவரும் அன்பான உணர்வுகளை பகிர்ந்து கொள்ளலாம். நல்லுறவிற்கு இது மிகவும் அவசியம். பணப்புழக்கம் மகிழ்ச்சிகரமானதாக இருக்காது. அதிகரிக்கும் செலவுகள் கவலையை உண்டாக்கும்.