15-07-2022 இன்றைய ராசிபலன் - வெற்றிக்கு வித்திடும் நாள்; மகிழ்ச்சி கூடும்

 
rasi palan

சுபகிருது வருடம்  I ஆனி 30 | வெள்ளிகிழமை | ஜூலை 15, 2022


மேஷம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று சற்று மந்தமான நாளாக இருக்கு.இன்று நீங்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். உங்கள் கடின உழைப்பின் மூலமே பணியில் வெற்றி பெற முடியும். உங்கள் பணிகளை முடிப்பதில் தாமதங்கள் காணப்படும். இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும். இன்று உங்கள் கட்டுப்பாட்டை இழப்பீர்கள். அதனை உங்கள் துணையிடம் வெளிபடுதுவீர்கள். பொறுமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்ள வேண்டும். பணப்புழக்கம் போதுமானதாக இருக்காது. உங்கள் சேமிப்பு ஆற்றல் அதிகரிக்கும் வாய்ப்பு குறைந்து காணப்படும்.

ரிஷபம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?


இன்று சாதகமான நாளாக இருக்காது. இன்று அமைதியாக மகிழ்ச்சியாக இருப்பது நல்லது. நீங்கள் சிறிது அனுசரித்து நேரத்தை சாதுர்யமாக நிர்வகித்து நடந்து கொள்ள வேண்டும். பணியில் சில தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. தரமான பணிகளை வழங்க கவனமுடன் பணியாற்ற வேண்டும். உங்கள் துணையுடனான இணக்கத்தன்மை இழக்க நேரலாம். நீங்கள் உங்கள் துணையுடன் சுமூகமாக நடந்து கொள்ள வேண்டும். இன்று நிதிநிலைமை சிறப்பாக இருக்காது. இன்று அதிக பணம் செலவு செய்ய நேரும். இதனால் உங்களின் திருப்தி நிலை பாதிக்கப்படும்.
 
 
மிதுனம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று உங்களுக்கு மிகவும் சாதகமான நாளாக இருக்காது. அமைதியாக இருக்க வேண்டியது அவசியம். சம்பவங்களை ஏற்றுக் கொண்டு சாதுர்யமாக நிர்வகிக்க வேண்டும். பணியில் சில தவறுகள் நேரலாம். கவனமுடன் பணியாற்றவும். உங்கள் துணையுடன் சர்ச்சைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. தேவையற்ற வாக்குவாதங்கள் ஏறபடலாம். கவனமுடன் செயல்பட்டு இவைகளை தவிர்க்கவும். இன்று பண இழப்பிற்கான வாய்ப்பு உள்ளது. பணத்தை சாதுர்யமாக கையாள்வது சிறந்தது. இன்று சிறிது பதட்டத்துடன் காணப்படுவீர்கள்.  

கடகம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று முழுமையான நாளாக இருக்கும். உங்கள் இலக்குகளை முடித்து திருப்தி அடைவீர்கள். உங்கள் முயற்சிகள் நல்ல பலனளிக்கும். உன்னதமான திறமை மூலம் உங்கள் பணிகளை குறித்தநேரத்தில் முடிப்பீர்கள்.பணி வளர்ச்சி குறித்த உற்சாகம் உங்களிடம் காணப்படும். உங்கள் துணையுடன் திருப்தியான நிலை காணப்படும். உங்கள் துணையுடன் வெளிப்படையாக அணுகுவதன் மூலம் உறவின் நல்லிணக்கத்தை பராமரிக்க இயலும். பணம் போதிய அளவைவிட அதிகமாக காணப்படும். உங்கள் வங்கியிருப்பு உயரும்.
 
 

சிம்மம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று ஆக்கப்பூர்வமான நாளாக அமையும். நண்பர்களின் ஆதரவும் உதவியும் கிடைக்கும். நீங்கள் உற்சாகமாக இருப்பீர்கள். உங்கள் பணியில் மகிழ்ச்சிகரமான பலன்கள் கிடைக்கும். உங்கள் சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். பொதுவாக திருப்தி காணப்படும். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் வாழ்வில் புது அத்தியாயம் தொடங்கியது போல உணர்வீர்கள். புது மனிதர்களை சந்திப்பீர்கள். பணப்புழக்கம் அதிகமாக காணப்படும். இன்று நீங்கள் சம்பாதித்த பணத்தை சொத்தாக மாற்றிக் கொள்வீர்கள்.

கன்னி

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று மிகவும் மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும்.ஆன்மீக யாத்திரைக்கு இன்றைய நாளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் சுய விழிப்புணர்வு ஏற்படும். பணியிடத்தில் மிதமான வளர்ச்சி காணப்படும். பணிகள் அதிகமாக காணப்படும். அதற்கு உங்கள் நேரம் செலவாகும். உங்கள் சக பணியாளர்களுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் துணையிடம் பேசுவதில் தயக்கம் காணப்படும். எனவே உங்கள் துணையிடம் வெளிப்படையாகவும் நட்பான முறையிலும் பழக வேண்டும். இன்று வரவு செலவு இரண்டும் இணைந்து காணப்படும். இன்று வங்கியில் சேமிப்பை பராமரிக்க இயலாது.
 

துலாம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

பல தடைகளை சந்தித்த பின் நீங்கள் திருப்தி காண்பீர்கள். என்றாலும் பாதுகாப்பின்மை உணர்வு காரணமாக உங்களுக்கு கவலை ஏற்படும். பணிச்சுமை அதிகமாக இருக்கும். அதிக சவால்கள் காணப்படும். பணி சம்பந்தமான பயணம் காணப்படும். உங்கள் துணையிடம் குறைந்த அளவு திருப்தி உணர்வீர்கள். குறைந்த புரிந்துணர்வு காரணமாக உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு காணப்படும். எப்பொழுது பணம் வரும் எப்பொழுது பணம் செல்லும் என்று உங்களால் கணிக்க இயலாது. இத்தகைய சூழ்நிலை காணப்படும். இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும். இன்று நீங்கள் பதட்டம் மற்றும் பாதுகாப்பின்மை உணர்வுடன் இருப்பீர்கள். இதனால் உங்கள் ஆரோக்கியம் பாதிக்கப்படும். எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்ளுங்கள்.


விருச்சிகம் 

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.நண்பர்களின் உதவியும் ஆதரவும் கிடைக்கும். அது உங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். நீங்கள் எதையோ சாதித்தது போன்று உணர்வீர்கள். பணியிடத்தில் நீங்கள் தனி முன்னேற்றம் காண்பீர்கள். நீங்கள் உங்கள் ஆற்றலை முழுமையாக பயன்படுத்துவீர்கள். அதே சமயத்தில் உங்கள் உண்மையான மதிப்பை உணர்வீர்கள். நீங்கள் இன்று காதலின் சுகத்தை அனுபவிப்பீர்கள். உங்கள் வார்த்தைகள் உங்கள் துணையை மகிழ்விக்கும். நீங்கள் ஏழாவது சுவர்க்கத்தில் இருப்பது போல உணர்வீர்கள். உங்கள் கையிலிருக்கும் பணம் திருப்திகரமாக இருக்கும். பணப் பொழிவு அதிகமாக இருக்கும். நீங்கள் உங்கள் சேமிப்பு நிலையை உயர்த்திக் கொள்வீர்கள்.
 

தனுசு

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று சவாலான சூழ்நிலையில் வாழ வேண்டியிருக்கும். உங்களின் நேர்மறையான கண்ணோட்டம் வெற்றி பெற உதவும். உங்கள் பணியில் மந்த நிலை காணப்படும். சில சமயங்களில் பொறுமை இழப்பீர்கள். உங்கள் பணியில் கவனம் செலுத்த வேண்டும். குடும்பத்தில் காணப்படும் பிரச்சினை ஒன்றை உங்கள் துணையுடன் பகிர்ந்து கொள்ள விரும்புவீர்கள். ஆனால் இதில் உங்களுக்கு திருப்தி குறைந்து காணப்படும். வீட்டின் புனரமைப்பிற்காக பணம் செலவு செய்வீர்கள். இதனால் செலவுகள் அதிகரிக்கும்.உங்களின் நெருங்கிய உறவுகளுக்காக பணம் செலவு செய்வீர்கள். 


மகரம் 

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

நீங்கள் யதார்த்தமாகவும் தொழில் சார்ந்த அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும். உங்கள் பணிகளை மேற்கொள்வதில் சில தடைகள் காணப்படும். உங்கள் நாளை கவனமாக திட்டமிட வேண்டும். உங்கள் பணிகளை மேற்கொள்ள கூடுதல் முயற்சி தேவை. உங்கள் பணிகளை ஆற்ற கவனமாக திட்டமிட வேண்டும். நீங்கள் மாறுபடும் மன நிலையுடன் உங்கள் துணையை அணுகுவீர்கள். இதனை தவிர்த்து நட்பான அணுகுமுறை மேற்கொள்ளுங்கள். போதிய அளவு பணம் காணப்படாது. இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும். தேவையற்ற விஷயங்களுக்காக பணம் செலவு செய்வீர்கள்.
 

கும்பம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?


இன்று நீங்கள் பொறுமை காக்க வேண்டும். இன்று நீங்கள் திட்டமிட வேண்டும். இல்லையெனில் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் அணுகுமுறையில் உறுதி தேவை. பணியிடச் சூழல் சுமூகமாக காணப்படாது. உங்கள் பணிகளை முடிப்பதில் தாமதம் காணப்படும். இது உங்களுக்கு கவலையை அளிக்கும். உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு காணப்படும். மகிழ்ச்சி நிலவ இருவரும் ஒருவரையொருவர் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். இன்று பண இழப்பு காணப்படுகின்றது. இது தவிர்க்க முடியாதது. பயணத்தின் போது இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
 

மீனம் 

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?


இன்று வெற்றி காண்பதற்கு சிறந்த நாள். உங்களிடம் விரைந்து செயலாற்றும் உறுதியும் தைரியமும் காணப்படும். உங்களின் சரியான திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் உங்களிடம் காணப்படும். உங்கள் பணிகளை குறித்தநேரத்தில் முடிக்க செயலாற்றுவீர்கள். நீங்கள் தொழில் சார்ந்த அணுகுமுறை மேற்கொள்வீர்கள். இது உங்களுக்கு மிகுந்த பலனளிக்கும். உங்கள் துணையுடன் சிறப்பாக நேரத்தை கொண்டாடி மகிழ்வீர்கள். உங்கள் துணையுடன் இனிமையாகப் பேசுவதற்கான சாத்தியம் உள்ளது. இன்று நீங்கள் உங்கள் நிதிநிலையை முழுமையாக கட்டுப்படுத்துவீர்கள். நேர்மறையான மன நிலையுடன் சிறந்த நிதி கட்டுப்பாடு மேற்கொள்வீர்கள்.