14-07-2022 இன்றைய ராசிபலன் - பணியில் கவனம் தேவை

 
Rasi palan

சுபகிருது வருடம்  I ஆனி 29| வியாழன் கிழமை | ஜூலை 14, 2022


மேஷம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும் நாள்.உங்கள் வளர்ச்சி நோக்கி முன்னேறுவீர்கள். இன்று புதிய தொடர்புகள் மற்றும் நண்பர்களைப் பெறுவீர்கள். பணியில் வெற்றிகரமான பலன்கள் கிடைக்கும். நீங்கள் கூடுதல் முயற்சி செய்து சிறந்த செயல்திறனை அளிப்பீர்கள். உங்களின் சிறந்த தவகல் தொடர்பு திறமை மூலம் பல நன்மைகள் கிடைக்கும். உங்கள் துணையிடம் திருப்தி காணப்படும். அவருடன் வெளியிடங்களுக்கு சென்று வருவீர்கள். தொழில் செய்பவர்கள் நற்பலன் காணும் அதிர்ஷ்டமான நேரம். புதிய தொழில் தொடர்புகள் பெறலாம். அதன் மூலம் அதிக பணம் பெற இயலும்.
 

ரிஷபம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?


இன்று நீங்கள் சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க நேரலாம். உங்கள் இலக்குகளை அடைய மிகவும் பொறுமை வேண்டும். நம்பிக்கையுடன் இருந்தால் நல்ல வளர்ச்சி காணலாம். உங்கள் முன் இருக்கும் சவாலான பணிகளை முடிக்க கடினமாக உழைக்க வேண்டும். திட்டமிட்டு பணிபுரிவதன் மூலம் உங்கள் பணிகளை திறமையாக முடிக்கலாம். உங்கள் துணையுடன் அன்பை பகிர்ந்துகொள்வதற்கு சாதகமான நாள் அல்ல. சுமூகமான உறவு அமைய நீங்கள் அனுசரித்து நன்கு புரிந்துணர்வுடன் நடத்தல் வேண்டும். இன்று பணப்புழக்கம் போதிய அளவு இருக்காது. பண இழப்பிற்கான வாய்ப்பு உள்ளது. இது உங்களுக்கு கவலை அளிக்கும்.
 
மிதுனம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று நல்ல பலன்கள் காண்பதற்கு சாதகமான நாள் அல்ல. இன்று நீங்கள் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். கடுமையான சூழ்நிலையை புத்திசாலித் தனமாக கையாள வேண்டும். சிறந்த விளைவுகளை ஏற்படுத்தும் செயல்களில் அமைதி காண வேண்டும். உங்கள் பணிகளில் தவறுகள் நேரலாம். அதிக கவனம் செலுத்துவதன் மூலம் நீங்கள் சிறப்பாக செயலாற்றலாம். உங்கள் துணையுடன் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று ஏற்படும் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். பண இழப்பு காணப்படுகின்றது. உங்கள் நிதிநிலையைக் கையாளும்போது நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.

கடகம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று ஆக்கப்பூர்வமான பலன்கள் கிடைக்கும். அது உங்களுக்கு உற்சாகத்தை அளிக்கும். உங்கள் நண்பர்களின் ஆதரவும் அதன் மூலம் நன்மையும் பெறுவீர்கள். உங்கள் செயல்திறனில் சிறந்த வளர்ச்சி காணப்படும். சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். பொதுவாக திருப்தியான நிலை காணப்படும். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். உங்கள் முன் மகிழ்சியான வாழக்கை உள்ளதாக நினைத்து மகிழ்வீர்கள். புதிய மனிதர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை அளிக்கும். இன்று பண வரவு சிறப்பாக இருக்கும். கையிலுள்ள உபரிப் பணத்தைக் கொண்டு நீங்கள் பயனுள்ள சொத்தை வாங்குவீர்கள். நீங்கள் சிறந்த தேக ஆரோக்கியத்தை பராமரிப்பீர்கள். இன்று உங்களிடம் ஆற்றலும் உறுதியும் நிறைந்து காணப்படும்.
 

சிம்மம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று சாதகமான பலன்கள் கிடைக்காது. பதட்ட உணர்வு காணப்படும்.பாதுகாப்பின்மை உணர்வு காணப்படும். இந்த உணர்வுகளை நீங்கள் சமாளிக்க வேண்டும்.நல்ல பலன் காண நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். நீங்கள் நம்பிக்கையுடனும் மன உறுதியுடனும் செயலாற்ற வேண்டியது அவசியம். இதன் மூலம் எதிர்கொள்ளும் தடைகளை ஜெயிக்க முடியும். கருத்து வேறுபபாடு காரணமாக தவறான புரிந்துணர்வு காணப்படும். உங்கள் துணையின் கருத்துக்களை புரிந்து கொண்டு இருவரும் பரஸ்பரம் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டியது அவசியம். பண வரவிற்கு இன்று சாத்தியமில்லை. கூடுதல் செலவுகள் காணப்படும். இது உங்களுக்கு கவலை அளிக்கும்.

கன்னி

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று நீங்கள் உற்சாகமான ஆற்றலுடன் காணப்படுவீர்கள். நீங்கள் குறைந்த எதிர்பார்ப்புடன் கடினமாக உழைப்பீர்கள். இதனால் நற்பலன்கள் ஏற்படும். பிரார்த்தனை மேற்கொள்வதன் மூலம் நீங்கள் அமைதியாக இருக்க முடியும். இன்று பணியில் மந்தத் தன்மை காணப்படும். உங்கள் செயல்களைக் கையாளும்போது பொறுமை இழப்பீர்கள். கவனமுடன் இருந்தால் சிறப்பாக செயலாற்ற இயலும். குடும்பப் பிரச்சினை ஒன்றின் காரணமாக உங்கள் துணையுடன் அதிருப்தி காணப்படும். இருவரும் கலந்தாலோசிக்க வேண்டியது அவசியம். உங்கள் வீட்டின் புனரமைப்பிற்காக பணம் செலவு செய்வீர்கள். இதனால் செலவுகள் அதிகமாகும். உங்களின் நெருங்கிய சொந்தங்களுக்காக பணம் செலவு செய்வீர்கள்.

துலாம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று பலன்கள் கலந்து காணப்படும். அதிர்ஷ்டம் குறைந்து காணப்படும். இன்றைய செயல்களைக் கையாள நீங்கள் பொறுமையாகவும் அமைதியாகவும் இருக்க வேண்டியது அவசியம். உங்கள இலக்குகளை அடைய கடினமாக உழைக்க வேண்டும். அது உங்கள் சுய முயற்சியை சார்ந்துள்ளது. இன்று அதிகப் பணிகள் காணப்படும். நற்பலன்களை அடைய உங்கள் பணிகளை திட்டமிட்டு ஒழுங்கமைக்க வேண்டியது முக்கியம். குடும்ப பிரச்சினை ஒன்றின் காரணமாக உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு காணப்படும். நல்ல புரிந்துணர்வு ஏற்பட இந்தப் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள வேண்டும். பணப்புழக்கம் இன்று குறைந்து காணப்படும். அதிகரிக்கும் பொறுப்புகள் காரணமாக உங்கள் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள இயலாது. இன்று மகிழ்சிகரமான நாளாக இருக்காது.


விருச்சிகம் 

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று உங்கள் முயற்சிகளில் வெற்றிகரமான பலன்கள் கிடைக்கும். உங்கள் இலக்குகளை அடைய புத்திசாலித்தனமாக முயல்வீர்கள். இது உங்களின் வளர்ச்சிக்கு உதவும். உங்கள் பணியைப் பொறுத்தவரை பணியிடத்தில் திருப்திகரமான நிலை இருக்கும். நீங்கள் தரமான வகையில் பணிகளை முடித்துத் தருவீர்கள். இதனால் உங்கள் மேலதிகாரிகளிடம் நற்பெயர் பெறுவீர்கள். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். இதனால் இருவரிடையே நல்ல புரிந்துணர்வு மேம்படும். இன்று பண வரவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். கையில் உபரிப் பணம் காணப்பட்டு மகிழ்ச்சியாக இருப்பீர்கள். ஆன்மீக காரியங்களுக்காக பணம் செலவு செய்வீர்கள். இது உங்களுக்கு திருப்தி அளிக்கும்.
 

தனுசு

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?


இன்று பதட்டமான சூழ்நிலை காணப்படும். இசை கேட்பது அல்லது திரைப்படம் பார்த்தல் போன்ற நிகழ்சிகளின் மூலம் நீங்கள் இன்றைய நாளை சிறப்பக கையாண்டு மகிழ்ச்சியாக இருக்கலாம். முக்கிய முடிவுகள் எடுப்பதை இன்று தவிர்க்கவும். இன்று அதிகப் பணிகள் காணப்படும். எனவே உங்கள் பணியில் தாமதங்கள் காணப்படும். கருத்து வேறுபாடு காரணமாக உங்கள் துணையுடன் தவறான புரிந்துணர்வு காணப்படும். இரவரும் எதிரெதிர் கருத்து கொண்டிருப்பீர்கள். இதனால் தவறான புரிந்துணர்வு காணப்படும். தேவையற்ற செலவுகள் கவலையை அளிக்கும். அதிக பணம் சேமிக்கும் வாய்ப்பு குறைவாக இருக்கும்.


மகரம் 

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று நீங்கள் பிறருடன் பழகும் போது கவனமாகப் பழக வேண்டும். சிறிதளவு பரிச்சயமானவர்களிடம் இன்று தவறான புரிந்துணர்வு ஏற்படும். தேவையற்ற விளைவுகளை தவிர்க்க நீங்கள் உங்கள் வார்த்தைகளில் கவனம் செலுத்த வேண்டும். பணியிடச் சூழல் மகிழ்ச்சிகரமாக இருக்காது. நல்ல பலன்களைக் காண நீங்கள் முறையாக திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். நீங்கள் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருப்பீர்கள். இதனை உங்கள் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள். இதனால் இருவரிடையேயான உறவுமுறை பாதிக்கும். எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொண்டு மனம் திறந்து பேசுவதன் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்கலாம். இன்று தேவையற்ற செலவுகள் காணப்படும். அதிக பணம் சம்பாதிப்பதும் குறைவாக இருக்கும்.

கும்பம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?


இன்று உணர்ச்சி வசப்படுவதை விட யதார்த்தமாக இருப்பதற்கான சூழ்நிலை காணப்படும். இன்றைய சவால்களை சந்திக்க நீங்கள் அமைதியாக நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் வெளியிடங்களுக்கு சென்று வருவதன் மூலம் நீங்கள் மன அமைதி பெறலாம். உங்கள் செயல்திறனை மேம்படுத்த நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பணியில் தவறுகளை தவிர்க்க வேண்டும். சக பணியார்களிடமிருந்து தொல்லைகளை எதிர் கொள்ள நேரும். நீங்கள் உங்கள் துணையிடம் உணர்ச்சி வசப்படுவீர்கள். இதனால் உறவின் நல்லிணக்கம் பாதிக்கப்படும். இன்று தேவையற்ற செலவுகள் காணப்படும். எனவே செலவுகளை கட்டுபடுத்த வேண்டும்.

மீனம் 

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?


இன்று வளர்ச்சி காண்பதற்கு மிகவும் உகந்த நாள். இன்று வாழ்க்கையின் உண்மைகளை அறிந்து கொள்வதற்கான நேரம். இது மகிழ்ச்சி தரும் கற்றல் அனுபவமாக இருக்கும். பணியில் சிறந்த வளர்ச்சி காணப்படும். உங்கள் அனைத்துப் பணிகளிலும் திருப்தி காண்பீர்கள். உங்கள் துணையிடம் இனிமையான வார்த்தைகளை பகிர்ந்து கொள்வீர்கள். இதனால் உறவில் நல்ல புரிந்துணர்வை பராமரிக்க இயலும். இன்று அதிகப் பணம் காணப்படும். கையிலுள்ள பணத்தை பயனுள்ள நோக்கங்களுக்காக செலவு செய்வீர்கள். இன்று நீங்கள் அமைதியான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் சிறந்த ஆரோக்கியத்தை பராமரிக்கலாம்.