12-07-2022 இன்றைய ராசிபலன் - விருந்தினர்களின் திடீர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்

 
rasi palan

சுபகிருது வருடம்  I ஆனி 27 | செவ்வாய்கிழமை | ஜூலை 12, 2022


மேஷம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று ஆன்மீக செயல்களில் ஈடுபடுவதற்கு சாதகமான நாள். அது உங்களுக்கு ஆறுதல் அளிக்கும். வளர்ச்சியை அளிக்கும். இன்றைய நாளை சிறந்ததாக ஆக்க புதிய வழிகளைக் காண்பீர்கள். உணர்ச்சிவசப்படுவதை தவிர்க்கவும். உங்கள் அன்றாட பணிகளை மேற்கொள்ளும் போது கவனம் தேவை. இன்று அதிக பணிகள் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. உங்களிடம் அகந்தைப் போக்கு காணப்படும். அதனை உங்கள் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள். உங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும்.இதன் மூலம் உறவு வலுப்படும். இன்று கூடுதல் செலவுகள் காணப்படும். பணப்பற்றாக்குறையை சந்திப்பீர்கள். இதனால் வருத்தமான மனநிலை காணப்படும்.
 

ரிஷபம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?


இன்று விரும்பும் பலன்கள் கிடைக்காது. இன்றைய சவால்களை கையாள அனுசரணையான அணுகுமுறை தேவை. தன்னம்பிகை குறைந்து காணப்படும். அதனை உருவாக்கிக் கொள்ளும் வழி காண வேண்டும். கடினமான பணிகள் காணப்படும். அதனால் நேரம் செலவாகும். கவலையை உண்டாக்கும். பணியிடத்தில் சவாலான சூழ்நிலை காணப்படும். உங்கள் துணையுடன் இணக்கமான உறவு காணப்படாது. ஒருவருக்கொருவர் மனம் திறந்து பேசுவதன் மூலம் இன்றைய நாளை இனி மையாக்கலாம். இன்று பண வரவு ஏற்படும் அதிர்ஷ்டம் காணப்படாது. பணப்பற்றாக்குறை காணப்படும். இது உங்களுக்கு கவலையை அளிக்கும்.
 

மிதுனம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் திட்டங்களை செயலாற்ற நீங்கள் விரைந்து முடிவெடுப்பீர்கள். உங்கள் தன்னம்பிக்கையை மேம்படுத்த முயற்சி செய்வீர்கள். பணியிடத்தில் நற்பெயர் பெறுவீர்கள். பல வாய்ப்புகள் காணப்படும். அது உங்களுக்கு திருப்தியை அளிக்கும். உங்கள் துணையுடன் உற்சாகமான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். உங்கள் துணையுடன் வெளியிடங்களுக்கு சென்று வருவீர்கள். இன்று பணவரவு அதிகமாக இருக்கும். உங்கள் வங்கியிருப்பை அதிகரிக்கச் செய்யும் நிலையில் இருப்பீர்கள்.

கடகம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?


இன்று நம்பிக்கையான நாள். உங்கள் இலக்குகளை எளிதில் அடைவீர்கள். பயனுள்ள திட்டங்களை தீட்டுவீர்கள். அதன் மூலம் நன்மை விளையும். இன்று பனியின் மூலம் பல சாதகமான பலன்கள் பெறுவீர்கள். கூடுதல் பணவரவு ஊக்கத் தொகை அல்லது சலுகை வகையில் கிடைக்கும். உங்கள் துணையுடன் நண்பர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். இதனால் மகிழ்ச்சி நிலவும். இன்று அதிர்ஷ்டகரமான நிதிநிலை காணப்படும். உங்கள் சேமிக்கும் ஆற்றல் உயரும்.

சிம்மம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று பதட்டமான சூழ்நிலை காணப்படும்.. ஆன்மீக ஈடுபாட்டின் மூலம் இந்தச் சூழலைக் திறமையாகக் கையாள முடியும். பணிகளை குறித்தநேரத்தில் முடிக்க இயலாது. பயனுள்ள யுத்திகளைக் கையாண்டு கவனமாக பணியாற்றினால் பணிகள் சுமூகமாக நடக்கும். உங்கள் துணையிடம் அகந்தைப் போக்கை தவிர்ப்பது நல்லது. இதனால் உறவின் நல்லிணக்கத்தைக் கெடுக்கும் கவனமற்ற வார்த்தைகளை தவிர்க்கலாம். இன்று வரவும் செலவும் இணைந்து காணப்படும். பணத்தை கையாளும் போது கவனம் தேவை.

கன்னி

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?


இன்று உங்கள் அன்றாட செயல்களை கவனமாக கையாள வேண்டும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். இன்று சஞ்சலமான உணர்வுகளால் பாதிக்கப் படுவீர்கள். ஆன்மீக நடவடிக்கைகள் அமைதி மற்றும் ஆறுதலை அளிக்கும். அதிகப் பணிகள் காரணமாக இன்று நீங்கள் பணிகளை சரியான நேரத்தில் முடிக்க இயலாது. உங்கள் துணையிடம் உணர்ச்சிப் பூர்வமாக நடந்து கொள்வீர்கள். நல்லுறவு ஏற்பட இத்தகைய உணர்வை தவிர்த்தல் நல்லது. உங்கள் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள போதிய பணம் காணப்படாது. கூடுதல் செலவுகள் மற்றும் தேவையற்ற செலவுகள் ஏற்படும்.

துலாம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று நம்பிக்கையான, நன்மை தரும் நாள். இன்று பல நன்மைகள் விளையும். நீங்கள் சிறப்பாக திட்டமிட்டு முக்கிய முடிவுகள் எடுக்கலாம். பணியிடத்தில் நல்ல வளர்ச்சி காண்பீர்கள். உங்கள் மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். இன்று உங்கள் துணையுடன் வெளியில் சென்று மகிழ்வீர்கள். இதனால் இருவரிடையே மகிழ்ச்சி நிலவும். மூத்தவர்களின் மூலம் பணவரவு பரிசாக கிடைக்கப் பெறுவீர்கள். இது உங்களுக்கு திருப்தியை அளிக்கும்.


விருச்சிகம் 

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று உங்கள் இலக்குகளில் சிறந்த வெற்றி காண இயலாது. இன்று நீங்கள் புதிய விஷயங்களை கற்க விரும்புவீர்கள். ஆனால் சில காரணங்களால் பலன்கள் உங்களுக்கு சாதகமாக இருக்காது. உங்கள் செயல்களில் பொறுமையை கையாளுங்கள். பணியிடச் சூழல் சாதகமாக இருக்காது. பணிகள் நிலுவையில் இருக்கும். இது உங்களுக்கு கவலை அளிக்கும். பணியில் மந்த நிலை காணப்படும். நீங்கள் அமைதியிழந்து உங்கள் துணையிடம் கோப உணர்வை வெளிப்படுத்துவீர்கள். இதனால் கருத்து வேறுபாடு ஏற்படும். பண வரவிற்கு இது சாதகமான நாள் அல்ல. உங்கள் குழந்தைகளுக்காக நீங்கள் பணம் செலவு செய்வீர்கள். பதட்டம் காரணமாக நீங்கள் அமைதியின்றி காணப்படுவீர்கள்.  

தனுசு

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?


உங்கள் திறமைகளை சோதிக்கும் சூழ்நிலை உருவாகும் என்பதால் பொறுமையாக இருக்க வேண்டும். உங்கள் முன்னேற்றத்தில் மந்த நிலை காணப்படும். அதிகமாக சிந்திக்காமல் தெளிவான மன நிலையுடன் இருங்கள். இன்று பணிகள் சலிப்பைத் தரும் வகையில் இருக்கும். அதிக பணிகள் காரணமாக சில பணிகள் நிலுவையில் இருக்கும். திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். உங்கள் துணையிடம் உணர்ச்சி வசப்படுவீர்கள். இதனால் இருவருக்கிடையேயான புரிந்துணர்வு பாதிக்கப்படும்.நீங்கள் அமைதியான நட்பான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும். இன்று பண இழப்பு காணப்படுகின்றது. உங்களின் பிரியமான ஒருவரின் ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய நேரும்.
 


மகரம் 

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று உங்களுக்கு சில அசௌகரியங்கள் காணப்படும். விளைவுகள் உங்களுக்கு சாதகமாக அமைய நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டும்.உங்கள் தந்தையுடன் கருத்து வேறுபாடு காணப்படும். ஆன்மீக ஈடுபாடு அமைதியை அளிக்கும். உங்கள் பணிகளை ஒழுங்கமைத்து பணியாற்ற சிறப்பாக திட்டமிட வேண்டும். நீங்கள் சிறந்த பலன் பெற இன்று கவனமுடன் பணியாற்ற வேண்டும். நீங்கள் உங்கள் துணையிடம் உணர்ச்சிகரமாக நடந்துகொள்வீர்கள். இந்தப் போக்கு உறவின் புரிந்துணர்வை பாதிக்கும். உங்கள் கடின உழைப்பிற்கு ஊக்கத்தொகை அல்லது சலுகை வகையில் பணம் கிடைக்கும். என்றாலும் சேமிக்கும் ஆற்றல் குறைந்து காணப்படும். அதிக வேலை காரணமாக பதட்டமும் மூட்டுகளில் வலியும் ஏற்படலாம்.  
 

கும்பம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?


இன்று வளர்ச்சிக்கு சாதகமான நாள். எதிர்பாராதவிதமாக நன்மை கிடைக்கும். இது உங்களுக்கு திருப்தியையும் மகிழ்ச்சியையும் அளிக்கும். விருந்தினர்களின் திடீர் வருகையால் மகிழ்ச்சியடைவீர்கள். பணியிடத்தில் உற்சாகமான வாய்ப்புகள் காத்திருக்கும். பணியிடச் சூழல் இனிமையாக இருப்பதாக உணர்வீர்கள். உங்கள் பணியில் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்களின் உற்சாகமான வார்த்தைகள் உங்கள் துணையை மகிழ்விக்கும். இருவரும் மறக்க முடியாத தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். இன்று நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். நீங்கள் கனிசமான தொகையை சேமிப்பீர்கள்.

மீனம் 

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?


இன்று துடிப்பான நாளாக இருக்கும். இன்று நம்பிக்கையான அணுகுமுறை மேற்கொள்வீர்கள். எதிர்காலம் பற்றிய முக்கிய முடிவுகள் எடுக்க இன்று உகந்த நாள். பணியிடத்தில் வளர்ச்சி சுமூகமாக இருக்கும். பணியிடச் சூழல் சாதகமாக இருக்கும். இது உங்களுக்கு திருப்தியை அளிக்கும். உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வை பகிர்ந்து கொள்வீர்கள். இதனால் உறவில் மகிழ்ச்சியும் நல்லிணக்கமும் காணப்படும். உங்கள் தேவைகளை எளிதாக நிறைவேற்றுவீர்கள். அதிக பணம் சேமிக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் பாதுகாப்பாக உணர்வீர்கள். உங்களிடம் காணப்படும் ஆற்றல் மற்றும் உறுதி காரணமாகஇன்று ஸ்திரமான முன்னேற்றகரமான ஆரோக்கியம் காணப்படும்.