11-07-2022 Today's Horoscope - Spending will increase

 
Rasi palan

சுபகிருது வருடம்  I ஆனி 26 | திங்கட்கிழமை | ஜூலை 11, 2022


மேஷம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று நீங்கள் எளிதான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும். உரையாடும் போது வார்த்தைகளில் கவனம் தேவை. இனிமையான வார்த்தைகள் நல்ல பலனைத் தரும்.இன்று புதிய பணி வாய்ப்புகளை இழக்கும் அதிர்ஷ்டமற்ற நிலை காணப்படும். இன்று ஏமாற்றமான சூழ்நிலைகளை சந்திக்க நேரும். இதனால் உங்கள் மன உறுதியை இழந்து விடாதீர்கள். உங்கள் துணையுடன் சச்சரவு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் சூடான விவாதங்கள் ஏற்படலாம். இது மகிழ்ச்சியைக் குறைக்கும். இன்று பண வரவிற்கான வாய்ப்பு குறைவு. பண இழப்பு ஏற்படும் என்பதால் பணத்தை கவனமாக கையாள வேண்டியது அவசியம்.

ரிஷபம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?


இன்று உங்களிடம் தைரியமான உறுதியான அணுகுமுறை காணப்படும். உங்கள் இலக்குகளில் வளர்ச்சியும் வெற்றியும் அடைவீர்கள். பணிகளை குறித்தநேரத்தில் முடிப்பதற்கான சாத்தியம் உள்ளது. உங்கள் செயல்திறனில் நல்ல தரத்தை பராமரிக்க இயலும். உங்கள் மகிழ்ச்சியான உணர்வுகளை உங்கள் துணையிடம் வெளிபடுத்துவீர்கள்.இருவரும் மகிழ்ச்சியான தருணங்களை இணைந்து கொண்டாடுவீர்கள். அதிக பண வரவு காரணமாக உங்கள் வங்கியிருப்பு அதிகரிக்கும். உங்கள் பணத்தை பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.
 


மிதுனம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

 
இன்று நீங்கள் நம்பிக்கையுடன் உங்கள் செயல்களை மேற்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. புதிய நண்பர்களைப் பெறுவீர்கள். அவர்களின் ஆதரவு கிடைக்கும். உங்கள் பணிகளை எளிதாக செய்து முடிப்பீர்கள்.உங்கள் செயல்திறன் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும். உங்களுக்கு பாராட்டு கிடைக்கும். நேர்மையான அணுகுமுறை மூலம் உங்கள் துணையுடன் சுமூகமான உறவை பராமரிப்பீர்கள். இன்று பண வரவு அதிகமாக காணப்படும். அதனை பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.

கடகம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று சவாலான சூழ்நிலைகள் காணப்படும். அதனால் வெறுமையை உணர்வீர்கள். உறுதியான போக்கை மேற்கொள்வதன் மூலம் நீங்கள் பிரச்சினைகளை சமாளிக்க முடியும். உங்கள் கடின உழைப்பிற்கு தகுத்த பலன்கள் கிடைக்காது. இதற்குஉங்கள் பணிகளை சிறப்பாக திட்டமிடாததே காரணம். உணர்ச்சி வசப்படுவதன் மூலம் உறவின் நல்லிணக்கம் பாதிக்கப்படும். இதனை உங்கள் துனையிடத்தில் வெளிப்படுத்துவீர்கள். இன்று லாபம் நஷ்டம் இரண்டும் சேர்ந்து காணப்படும். பணப்புழக்கம் குறைவாக காணப்படும். பண இழப்புகளை தவிர்க்க நீங்கள் பணத்தை கவனமாகக் கையாள வேண்டும். பதட்டம் காரணமாக ஆரோக்கியம் பாதிக்கப்படும் .

சிம்மம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று பதட்டமான சூழ்நிலை காணப்படும்.. ஆன்மீக ஈடுபாட்டின் மூலம் இந்தச் சூழலைக் திறமையாகக் கையாள முடியும். பணிகளை குறித்தநேரத்தில் முடிக்க இயலாது. பயனுள்ள யுத்திகளைக் கையாண்டு கவனமாக பணியாற்றினால் பணிகள் சுமூகமாக நடக்கும். உங்கள் துணையிடம் அகந்தைப் போக்கை தவிர்ப்பது நல்லது. இதனால் உறவின் நல்லிணக்கத்தைக் கெடுக்கும் கவனமற்ற வார்த்தைகளை தவிர்க்கலாம். இன்று வரவும் செலவும் இணைந்து காணப்படும். பணத்தை கையாளும் போது கவனம் தேவை.

கன்னி

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று நீங்கள் சிறந்த மன ஆற்றலுடனும் காடுப்பட்டுடனும் காணப்படும் சிறந்த நாள். இன்று பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுவதன் மூலம் அமைதி பெறுவீர்கள். இன்று பணிகளை குறித்தநேரத்தில் முடிக்கும் சூழல் காணப்படும். பணிகளை விரும்பி எளிதாக ஆற்றுவீர்கள். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். இருவரிடையே பரபஸ்பர மதிப்பு உயரும். பணப்புழக்கம் இன்று சிறப்பாக இருக்கும். உங்கள் பணத்தை பயனுள்ள விஷயங்களுக்கு பயன்படுத்துவீர்கள்.

துலாம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று நீங்கள் நம்பிக்கையுடன் இருந்தால் உங்கள் இலக்குகளில் வெற்றி அடையலாம்.பதட்டம் மற்றும் பாதுகாப்பின்மை உணர்வை கட்டுப்படுத்தி நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். உங்கள் பணியில் சில தடைகள் காணப்படும். உறுதியுடன் இருந்தால் தடைகளை சமாளித்து சிறப்பாக செயலாற்றலாம். தகவல் பரிமாற்ற பிரச்சினையும் கருத்து வேறுபாடும் காணப்படும். அமைதியாக இருப்பது மிகவும் உதவிகரமாக இருக்கும். பணப்புழக்கம் போதுமானதாக இருக்காது. இந்து கூடுதல் செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.


விருச்சிகம் 

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

அமைதியாக இருப்பதன் மூலம் முறையான முடிவுகளை எடுக்க இயலும். பிரார்த்தனை மேற்கொள்வதன் மூலம் பதட்டமின்றி சமநிலையில் இருக்கலாம். இன்று பணிகள் அதிகமாக காணப்படும். இதனால் பணியில் தவறுகள் நேரலாம். எனினும் கவனமாகப் பணியாற்றினால் இன்று சிறப்பாக இருக்கும். இன்று உங்கள் துணையிடம் நட்பான அணுகுமுறை பராமரிப்பது நல்லது. இதனால் உறவில் மகிழ்ச்சியும் நல்லிணக்கமும் காணப்படும். பணப்புழக்கம் போதிய அளவு காணப்படாது. அதிகரிக்கும் பொறுப்புகளை சமாளிப்பது கடினமாக உணர்வீர்கள்.
 

தனுசு

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று பதட்டமும் கவனமின்மையும் காணப்படும். இதனை சமாளிக்க அமைதியை மேற்கொள்ள வேண்டும். இன்று சகஜமான அணுகுமுறையுடன் உங்கள் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். பணியிடத்தில் பதட்டம் காரணமாக தாமதமாக பணிகள் நடைபெறும். பணிகளைக் கையாளும் போது பொறுமையான அணுகுமுறை தேவை. உங்கள் துணையின் விருப்பபடி நடந்து கொள்வதும் நட்பான அணுகுமுறை கொள்வதும் இருவரும் மகிழ்ச்சியுடன் இருக்க உதவும். பணப்புழக்கம் குறைந்து காணப்படும் . அதிகரிக்கும் செலவுகள் உங்களுக்கு கவலையை அளிக்கும். 


மகரம் 

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?


உங்கள் மன உறுதி காரணமாக நீங்கள் வெற்றி பெறலாம். இன்று சிறந்த முன்னேற்றம் கண்டு மகிழ்வீர்கள். உங்கள் திறமைகள் வெளிப்படும். அது உங்கள் செயல்திறனில் பிரதிபலிக்கும். உங்கள் சக பணியாளர்களுக்கு நீங்கள் ஒரு எடுத்துக்காட்டாக இருப்பீர்கள். இனிமையான வார்த்தைகளும் நல்ல புரிந்துணர்வும் உங்கள் துணையை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும். இன்று போதிய அளவு பணம் காணப்படும். உங்கள் சேமிப்பு ஆற்றல் அதிகரிக்கும்.  

கும்பம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று ஸ்திரமான. இலக்குகளை வெல்லக்கூடிய இனிமையான தருணங்களை சந்திக்கும் நாள். இன்று முக்கிய முடிவுகளை எடுக்கலாம். பணியிடத்தில் வெற்றிகரமான பலன்கள் கிடைக்கும். புதிய பணி வாய்ப்புகள் கிடைக்கும். இது உங்களுக்கு திருப்தியை அளிக்கும். உங்கள் துணையிடம் நேர்மையாக இருப்பதன் மூலம் நல்லுறவு வளரும். இருவரிடையே பரஸ்பர புரிந்துணர்வு ஏற்படும். பண வரவு மகிழ்ச்சியை அளிக்கும். உங்கள் கடின உழைப்பின் காரணமாக நீங்கள் ஊக்கத்தொகை வகையில் பணம் பெறுவீர்கள்.

மீனம் 

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்றைய நாள் உங்கள் எதிர்பார்ப்பின் படி இருக்காது. எதிர்மறையான பலன்கள் ஏமாற்றத்தை தரும். எந்த முடிவையும் எடுப்பதற்கு முன் ஒன்றிற்கு இரண்டு தடவை யோசிக்க வேண்டும். எதிர்மறை எண்ணங்களையும் பாதுகாப்பின்மை உணர்வையும் தவிர்த்தல் வேண்டும். பணிகள் அதிகமாக காணப்படும். பணிகளை குறித்தநேரத்தில் முடிக்க திட்டமிட்டு செயலாற்ற வேண்டும். உங்கள் துணையுடன் சிறந்த புரிந்துணர்வை பராமரிக்க இயலாது. உங்களின் எரிச்சல் உணர்வை உங்கள் துணையிடம் வெளிபடுத்துவீர்கள். இதனால் உறவின் நல்லிணக்கம் பாதிக்கும். பண வரவு குறைந்து காணப்படும். அதிக செலவுகள் காரணமாக சேமிப்பது கடினமாக இருக்கும்.