08-01-2023 இன்றைய ராசிபலன்- வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை

 
rasipalan

சுபகிருது வருடம் 2023  I மார்கழி 24 |  ஞாயிற்றுக்கிழமை 08-01-2022

மேஷம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று சலிப்பூட்டும் நாளாக இருக்கும். என்றாலும், திட்டமிட்டு புத்திசாலித்தனத்துடன் செயலாற்றினால் உங்கள் முயற்சியில் வெற்றி நிச்சயம். பணியில் இன்னல்களை சந்திப்பீர்கள். பணியில் தவறுகள் நேர வாய்ப்புள்ளதால் நீங்கள் மேற்கொண்ட பணிகளை கவனமாக கையாள வேண்டியது அவசியம். உங்கள் துணையுடன் தேவையற்ற விவாதங்கள் ஏற்படாமலிருக்க அமைதி காக்க வேண்டும். உரையாடும் போது வார்த்தைகளில் கவனம் தேவை. இன்று நிதி வளர்ச்சி குறைந்து காணப்படும். உபரி பணத்தை முடிந்த அளவு சேமிக்க வேண்டும். இன்று ஆரோக்கியம் சுமாராக இருக்கும். என்றாலும் நீங்கள் ஆற்றலுடன் காணப்படுவீர்கள். தலைவலி மற்றும் முதுகு வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ரிஷபம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?


இன்று முனேற்றகரமான பலன்கள் கிடைக்கும். நேரத்தை பயனுள்ள விஷயங்களுக்கு பயன் படுத்துவீர்கள். உங்களின் சிறந்த தகவல் பரிமாற்றம் பிறரை காந்தம் போல கவர்ந்திழுக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும். உங்கள் பணிக்கான நற்பெயரும் அங்கீகாரமும் கிடைக்கும். உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வு காணப்படும். உங்கள் துணையை மகிழ்ச்சியாக வைத்திருப்பீர்கள். நிதியைப் பொறுத்த வரை இன்று சுதந்திரமான நிலை காணப்படும். எதிர்கால நலனுக்கான பயனுள்ள நிதி சம்பந்தமான முடிவுகளை நீங்கள் எடுக்கலாம். இன்று ஆரோக்கியம் சிறப்பாக காணப்படுகின்றது. பெரிய அளவிலான ஆரோக்கிய குறைபாடுகள் ஏதும் இருக்காது.

மிதுனம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று எதையும் இலேசாக எடுத்துக் கொள்ளவேண்டும். இன்று நீங்கள் உங்களை உற்சாகப்படுத்திக் கொள்ளவேண்டும். இன்று உங்கள் பொறுமை சோதனைக்குள்ளாகும். பணியிடச் சவால்களை சந்திக்க பொறுமை அவசியம். பணியில் வெற்றி பெறுவதற்கு அதிக முயற்சிகள் செய்ய வேண்டும். உங்கள் துணையுடனான உறவில் நல்லிணக்கத்தை பராமரிக்க அனுசரணையான போக்கு தேவை. உங்கள் துணையை நகைச்சுவையான அணுகுமுறையோடு அணுகி அவரை மகிழ்விக்க வேண்டும். இன்று வரவு செலவு இரண்டும் இணைந்து காணப்படும். இன்று செலவுகளை சமாளிப்பதை கடினமாக உணர்வீர்கள். சிறப்பாக திட்டமிட முயலுங்கள். உங்கள் தாயின் உடல் நலக் குறைபாடு ஒன்றிற்காக பணத்தை செலவு செய்ய நேரலாம். இது உங்களுக்கு வருத்தத்தை உண்டாக்கும்.
 


கடகம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும். இறைவழிபாடு, ஸ்லோகம் கூறுவது ஆன்மீக ஈடுபாடு ஆறுதலைத் தரும். இன்று அதிக பொறுப்புகளும் மன உளைச்சல்களும் இருப்பதாக உணர்வீர்கள். உங்கள் செயல் திறன் உங்களுக்கு திருப்தியை அளிக்காது. பணிச் சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருக்காது. குழப்பமான மன நிலை காரணமாக உங்கள் துணையுடன் நல்ல உறவுமுறையை பராமரிக்க மாட்டீர்கள். இதனால் இருவருக்கும் இடையிலான தகவல் பரிமாற்றம் பாதிக்கப்படும். இன்று பணப்பற்றாக்குறை காணப்படும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். பெரிய அளவிலான முதலீடுகள் செய்ய எடுக்கும் முடிவுகளை தவிர்க்கவும். செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உருவாகலாம். எண்ணெய் பதார்த்தங்கள் உட்கொள்வதை தவிர்க்கவும்.

சிம்மம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று ஆன்மீகத்தில் ஈடுபடலாம். அமைதியாக இருக்க ஒரே வழி பிரார்த்தனை ஆகும்.இன்று பணிச் சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருக்காது. உங்கள் பணிக்கு அங்கீகாரம் கிடைக்காதது போல் உணர்வீர்கள். உங்கள் துணையிடம் கடுமையாக நடந்துகொள்வீர்கள். இதனால் உறவின் மகிழ்ச்சி பாதிப்படையும். பணப் புழக்கும் குறைந்து காணப்படும். அதிகரிக்கும் செலவுகளைச் சமாளிப்பதை கடினமாக உணர்வீர்கள். தொடை மற்றும் கால் வலியால் அவதிப்படுவீர்கள். உடற்பயிற்சி உங்களை திடமாக வைத்திருக்க உதவும்.


கன்னி

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று பரபரப்பாக காணப்படுவீர்கள். உங்கள் வளர்ச்சி கண்டு மகிழ்வீர்கள். உங்கள் நலனை மேம்படுத்தும் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பணியிடத்தில் சாதகமான பலன்கள் கிடைக்கும். உங்கள் சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். உங்கள் செயல் திறன் அதிகரித்துக் கொள்வதற்கான புதிய வழிகள் கிடைக்கப் பெறுவீர்கள். உங்கள் துணையுடனான அன்புப் பிணைப்பு வலுப்பெறும் வகையில் அன்பை வெளிப்டுத்துவீர்கள். நீங்கள் இருவரும் மகிழ்ச்சியான இனிமையான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். நிதி நிலைமை திருப்தி அளிக்கும். நீண்ட கால நிலுவை தொகைகள் உங்கள் கைக்கு வந்து சேரும். இன்று ஆரோக்கியம் சிறப்புடன் காணப்படும். தேக ஆரோக்கியத்தை சிறப்பாக பராமரிப்பீர்கள்.
 
துலாம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

திட்டமிட்ட முறையான அணுகுமுறை மூலம் இன்றைய நாளை மதிப்பு மிக்கதாக்குவீர்கள். உங்கள் சிறந்த தகவல் பரிமாற்ற திறன் மூலம் சிறந்ததை சாதிப்பீர்கள். உங்கள் முயற்சியில் வெற்றி பெற புத்திசாலித் தனத்தை பயன்படுத்துங்கள். உங்கள் கீழ் பணிபுரிபவர்களுடன் நல்லுறவு காணப்படும். உங்கள் நேர்மையான அணுகுமுறை உங்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். உங்கள் துனையுடன் மகிழ்ச்சி, இனிமை, நகைச்சுவை என உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வீர்கள். இதனால் இருவருக்கும் இடையே அன்பு அதிகரிக்கும். இன்று நிதி வளர்ச்சி மகிழ்ச்சிகரமாக இருக்கும். சிறிய அளவிலான கடன்கள் வாங்கி உங்கள் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். உங்களிடம் காணப்படும் வலிமை மற்றும் சுறுசுறுப்பு காரணமாக இன்று சிறந்த ஆரோக்கியம் காணப்படும்.


விருச்சிகம் 

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று தேவையற்ற மனக் கவலைகள் காணப்படும். அதனை தவிர்க்கவும். நேர்மையான எண்ணங்களை மேற்கொள்ளுங்கள். நீங்கள் பணியில் தவறுகள் செய்ய நேரலாம். இது ஏற்படாமல் இருக்க கவனம் தேவை. மனக் குழப்பங்கள் அதிகம் காணப்படுவதால் அதனை உங்கள் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள். மகிழ்ச்சியை தக்க வைத்துக்கொள்ள நீங்கள் உங்கள் மனதை அமைதியாக வைத்திருக்க வேண்டும். இன்று நிதிவளர்ச்சிக்கு உகந்த நாள் அல்ல. சில இழப்புகள் காரணமாக ஏமாற்றத்தை சந்திப்பீர்கள். இன்று சிறந்த ஆரோக்கியத்தை பராமரிப்பது கடினம். கால் வலி ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.

தனுசு

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று அமைதியும் கட்டுப்பாடும் தேவை. முடிவுகள் எடுப்பதற்கு முன் ஒன்றிற்கு இரண்டு முறை யோசிக்கவும். பிரார்த்தனை மற்றும் நல்ல இசை மனதிற்கு ஆறுதலும் திருப்தியும் அளிக்கும். பணியிடத்தில் கூடுதல் பொறுப்பு காரணமாக பணியில் மும்மரமாக காணப்படுவீர்கள். பணியிடத்தில் அசௌகரியம் காணப்படும். உங்கள் துணையிடம் அகந்தை போக்கை தவிர்க்க வேண்டும். இதனால் உறவு வலுப்படும். உங்கள் துணையுடன் அனுசரித்து போக வேண்டும். இன்று பண வரவிற்கு உகந்த நாள் அல்ல. பொறுப்புகள் அதிகமாக இருப்பதன் காரணமாக இன்று பணப்பற்றாக்குறை காணப்படும். இது உங்களுக்கு வருத்ததை அளிக்கும். சளி சம்பந்தமான பிரச்சினைகள் காணப்படும். குளிர்ச்சியான உணவுகளைத் தவிர்க்கவும்.


மகரம் 

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?


இன்று முன்னேற்றகரமான பலன்கள் கிடைக்கும். முக்கியமான முடிவுகள் எடுக்கலாம். சமயோசிதமாக செயலல்ற்றினால் இன்று உற்சாகமாக இருக்கலாம். உங்கள் சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். உங்கள் மேலதிகாரியிடமிருந்து எதிர்பாராத ஆதரவு கிடைக்கும். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். இதனால் இருவர்க்கும் இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். நிதிநிலைமை திருப்திகரமாக இருக்கும். உங்கள் சேமிக்கும் ஆற்றல் அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறந்து காணப்படும். மனம் மற்றும் உடல் ஆரோக்கியம் சிறப்புடன் இருக்கும்.

கும்பம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?


இன்று உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். லாபங்கள் அதிகரிக்கும். புத்திசாலிதனத்தை பயன்படுத்தினால் வெற்றி நிச்சயம். உங்களின் நம்பகமான சிறந்த பணி காரணமாக நற்பெயர் அதிகரிக்கும். உங்கள் திறமைகள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். இருவரிடையே காணப்படும் பிணைப்பும் அன்பை பகிர்ந்து கொள்ளும் தன்மை காரணமாக உங்கள் துணையுடனான உறவில் நல்லிணக்கமும் மகிழ்ச்சியும் காணப்படும். இன்று பணப்புழக்கம் சிறப்பாக காணப்படுகின்றது. லாபகராமான முதலீட்டிற்கான முயற்சி உங்களுக்கு நல்ல பலனைத் தரும். இன்று தேக ஆரோக்கியம் சிறந்து காணப்படும். இன்று இன்பமாக இருப்பதன் காரணமாக ஆரோக்கியம் சிறந்து காணப்படும்.

 
மீனம் 

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று உற்சாகமான சூழ்நிலை காணப்படும். என்றாலும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். சரியாக திட்டமிட்டால் நற்பலன்களைக் காணலாம். பணியிடத்தில் உங்கள் சக பணியாளர்களுடன் பிரச்சினைகள் உண்டாகும். பொறுமையுடன் இருந்தால் அதனை சமாளித்து உங்கள் பணிகளை ஆற்றலாம். தகவல் பரிமாற்றத்தில் இருக்கும் குறைபாடு காரணமாக உங்கள் துணையுடன் கருத்து வேற்றுமை காணப்படும். நல்ல புரிந்துணர்வு ஏற்பட வேறுபாடு பிரச்சனைகளை தீர்க்க வேண்டும். இன்று நிதிநிலைமை மகிழ்ச்சிகரமானதாக இருக்காது. பணப்பற்றாக்குறை காணப்படும். உங்கள் தேவைக்காக கடன் வாங்க நேரலாம். அதிகரிக்கும் செலவுகள் உங்களுக்கு வருத்தத்தை அளிக்கும். மன உளைச்சல் காரணமாக கால் வலி ஏற்படலாம். தியானப் பயிற்சி ஆரோக்கியத்தை சிறப்புடன் வைத்திருக்க உதவும்.