10-01-2023 இன்றைய ராசிபலன்- வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது

 
Rasi palan

சுபகிருது வருடம் 2023  I மார்கழி 26 |  செவ்வாய்கிழமை 10-01-2022

மேஷம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று வெற்றிபெற தொடர் முயற்சி எடுக்க வேண்டும். இன்று செயல்களை நம்பிக்கையுடன் ஆற்றுங்கள். பதட்டத்தை கட்டுப்படுத்துங்கள். ஆன்மீக ஈடுபாடு உங்களை சுறுசுறுப்பாக வைக்கும். உங்கள் பணிகளை நீங்கள் எளிதில் ஆற்ற இயலாது. கீழ் பணிபுரிபவர்களால் பிரச்சினை ஏற்படும். பணிச்சுமை அதிகமாக இருக்கும். உணர்ச்சிகளை கட்டுபடுத்த கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு காணப்படும். புரிந்துணர்வு இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கலாம். இன்று கூடுதல் செலவினங்கள் காணப்படும். பண இழப்பிற்கான வாய்ப்பும் உள்ளது. உங்கள் ஆரோக்கியம் குறைந்து காணப்படும். 

ரிஷபம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று வெற்றியைக் காண பொறுமையாக இருக்க வேண்டும். செய்யும் செயலில் உறுதி இருந்தால் வெற்றி நிச்சயம். பதட்டமாக இருப்பதாக உணர்வீர்கள். உறுதி மற்றும் தைரியம் மூலம் வெற்றி காண்பீர்கள். உங்கள் துணையுடன் அமைதியின்மையைக் காண்பீர்கள். புரிந்துனர்வின்மையே இதற்கு காரணம். அவர் கருத்துக்கும் இடம் அளித்தால் ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொள்ளலாம். இன்று செழிப்பான நாளாக காணப்படாது. அதிர்ஷ்டத்தை விட கடின உழைப்பை நம்புங்கள். பணப்புழக்கம் மகிழ்ச்சிகரமானதாக இருக்காது. இன்று ஆரோக்கியம் சுமாராக இருக்கும். தோல் எரிச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது.

மிதுனம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

குடும்பத்திற்காக பணம் செலவு செய்வீர்கள். இது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். இன்று நம்பிக்கையுடன் இருங்கள். சிறந்த வளர்ச்சி சாத்தியம். உங்கள் பணியில் வளர்ச்சி காணப்படும்.பணியில் வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. உங்கள் துணையுடன் நல்லுறவை பராமரிப்பீர்கள். உங்கள் இருவரிடையே நல்ல புரிந்துணர்வு காணப்படும். நிதிநிலைமை சிறப்பாக காணப்படும். இன்று உங்களிடம் அதிக பணம் காணப்படும். அதனை சிறந்த முறையில் செலவு செய்வீர்கள்.அமைதியாக இருந்தால் ஆரோக்கியமாக இருக்கலாம்.நீங்கள் அதிக உற்சாகத்துடன் இருப்பீர்கள்.


கடகம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று மகிழ்சிகரமான நாளாக இருக்காது. நீங்கள் அதிக முயற்சி எடுக்க வேண்டும் உங்களிடத்தில் இன்று தெளிவு இருக்காது அதனால் தவறான முடிவுகள் எடுக்க வாய்ப்பு உள்ளது. நீங்கள் இன்று பணியில் மும்மரமாக இருப்பீர்கள். உங்கள் பணிகளை திட்டமிட்டு ஆற்றுங்கள். நீங்கள் உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருக்க அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். பண வரவு சுமாராக காணப்படும். பணத்தை கவனமாக கையாள வேண்டும்.சளி இருமல் போன்ற பாதிப்பு இருக்கும். குளிர்ச்சியான உணவுகளை உட்கொள்வதை தவிர்க்கவும்.

சிம்மம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

ஆன்மீக ஈடுபாடு மூலம் நீங்கள் ஆறுதல் பெறலாம். பிரார்த்தனை மற்றும் தியானம் மகிழ்ச்சி அளிக்கும். மனதில் உற்சாகமாகவும் முகத்தில் புன்னகையுடனும் இருங்கள். இன்று பணிச்சுமை அதிகமாக இருக்கும். திட்டமிட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.பனியின் போது கவனம் சிதறாமல் இருக்க மனதை ஒருமித்து பணியாற்றுங்கள். மனதில் தோன்றும் குழப்பங்கள் காரணமாக உறவில் அதிருப்தி காண்பீர்கள். நீங்கள் உங்கள் துணையுடன் மனம் திறந்து பேச வேண்டும். இன்று வரவு செலவு இரண்டும் காணப்படும். பணத்தை கவனமுடன் கையாளவும். இன்று மனதில் குழப்பம் காணப்படும். சூடு சம்பந்தமான பிரச்சினைகள் காணப்படும்.


கன்னி

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று பொறுமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். மக்களின் நன்மதிப்பை பெற வேண்டும். தைரியத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். நீங்கள் பணியில் தவறுகள் செய்ய நேரலாம். எளிதாகப் பணியாற்ற மனதை நல்ல நிலையில் வைத்திருக்க வேண்டும். உங்கள் துணையுடன் தேவையற்ற மோதல்கள் காணப்படும். நீங்கள் சகஜமாக இருக்க வேண்டும். பண வரவிற்கு இது உகந்த நாள் அல்ல. பணத்தை கவனமாக செலவு செய்ய வேண்டும். பண இழப்பிற்கான வாய்ப்பும் உள்ளது. உணவை சரியான நேரத்தில் உண்ண வேண்டும். அதிகமாக நீரைப் பருக வேண்டும். நடைப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

 
துலாம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று வெற்றிக்கு உகந்த நாள். விரைவாக செயலாற்ற உங்களிடம் உறுதியும் தைரியமும் காணப்படும். உங்கள் ஆற்றலை வெளிக்கொணரும் திறமை உங்களிடம் காணப்படும். பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். நீங்கள் தொழில் சார்ந்த அணுகுமுறையை மேற்கொள்வீர்கள். உங்கள் துணையிடம் இனிமையான போக்கு கொண்டு இனிமையான வார்த்தைகளைப் பேசுங்கள். இதனால் உங்கள் முகத்தில் புன்னகையும் உற்சாகமும் காணப்படும். இன்று நிதிநிலை உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். உங்கள் மனதில் நம்பிக்கை காணப்படும்.இன்று நலமாக இருப்பீர்கள். திடமான ஆரோக்கியம் கொண்டிருப்பீர்கள்.


விருச்சிகம் 

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று சிறப்பான நாளாக இருக்கும். நீங்கள் மிகுந்த தன்னம்பிக்கையுடன் உங்கள் செயல்களைச் செய்வீர்கள். உங்கள் நண்பர்கள் மற்றும் நெருங்கிய தொடர்பு உடையவர்களிடம் நல்ல உறவை பராமரிப்பீர்கள். உங்கள் சக ஊழியர்களின் ஆதரவு உங்களை கடினமாக உழைக்க வைக்கும். உங்கள் மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். இன்று இனிமையான நாளாக இருக்கும். உங்கள் துணையுடன் நட்பாக பழகுவீர்கள். இன்று பணம் அதிக அளவில் கிடைக்கும். அதிர்ஷம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் சேமிப்பு அதிகரிக்கும். நம்பிக்கையான உணர்வுகள் காணப்படும். இந்த அணுகுமுறை உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

தனுசு

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று சுமாரான பலன்கள் கிடைக்கும் நாள். நீங்கள் அமைதியாகவும் பொறுமையாகவும் இருக்க வேண்டும். சகஜமான அணுகுமுறை வேண்டும். இன்று பணிகள் அதிகமாக காணப்படும். எனவே பணிகளை கவனமாகக் கையாள வேண்டும். அறிவார்ந்த திட்டங்கள் மூலம் இது சாத்தியம். உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு காணப்படும். புரிந்துனர்வின்மையே இதற்கு காரணம். பொறுமையாக இருங்கள். இன்று வரவை விட செலவு அதிகமாக இருக்கும். பணப்பற்றாக்குறை காணப்படும். பணத்தின் தேவை இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். உடற்பயிற்சி மூலம் உங்களை ஆரோக்கியமாக வைத்திருங்கள்.


மகரம் 

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?


இன்று செயல்கள் உங்கள் விருப்பம் போல நடக்காது. நேர்மறை எண்ணம் கொண்டு செயல்படுவது நல்லது. தன்னம்பிக்கையோடு உங்கள் இலக்கில் கவனம் செலுத்த வேண்டும். தனிமையாக இருப்பது போன்று உணர்வீர்கள். ஆனால் இதுவும் கடந்து போகும். இன்று பணிகள் அதிகமாக காணப்படும். உங்கள் பணிகளை திட்டமிட்டால் குறித்த நேரத்தில் முடிக்கலாம். நீங்கள் கவனமுடன் இருக்க வேண்டும். உங்கள் துணையுடன் சில விரும்பத்தகாத தருணங்களைக் காண்பீர்கள். உங்கள் பிரியமானவரின் வார்த்தைகளைக் கேட்பது நல்லது. செலவுகள் அதிகமாக காணப்படும். பணத்தை தக்க வைத்துக்கொள்ளும் வாய்ப்பு குறைவு. இன்று ஆரோக்கியம் சுமாராக இருக்கும். இன்று தலைவலி காணப்படும். இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும். 

கும்பம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?


இன்று சாதகமான நாளாக அமையும். உங்கள் வாழ்விற்கான பயனுள்ள முடிவுகளை எடுக்க உகந்த நாள். உங்கள் உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். நீங்கள் பணியில் பிரகாசிப்பீர்கள். பணிகளை நீங்கள் கையாளும் திறன் மூலம் நீங்கள் உங்கள் மேலதிகாரிகளின் கவனத்தை கவர்வீர்கள். இன்றைய நாள் உங்கள் துணையுடன் மறக்க முடியாத நாளாக இருக்கும். இருவரும் புதிய விருந்தினரின் வருகைக்கு காத்திருப்பீர்கள். பணப்புழக்கம் அதிகமாக காணப்படும். சில பயனுள்ள முதலீடுகளை நீங்கள் தேர்வு செய்யலாம்.இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ஆற்றலும் உற்சாகமும் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.


மீனம் 

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று வெற்றி கிடைக்கும் நாள். நீங்கள் இன்று தைரியமாக இருப்பீர்கள். உங்கள் முயற்சி நல்ல பலன்களை அளிக்கும். பயணங்களுக்கான வாய்ப்பு உள்ளது. உங்கள் பணியில் வெற்றி பெறுவீர்கள். இன்று உங்கள் ஆற்றலை நீங்கள் உணரும் நாள். இன்று அதிக தன்னம்பிக்கை காணப்படும்.உங்கள் துணையின் நன்மதிப்பை பெற இன்று உகந்த நாள். உங்கள் இருவருக்கும் இது சிறப்பான நாள். இன்று பணபுழக்கம் திருப்திகரமாக இருக்கும். உங்களின் கடின உழைப்பிற்கு ஊக்கத்தொகை மற்றும் சலுகைகள் பெறுவீர்கள். நீங்கள் இன்று புத்துணர்ச்சியுடனும் உறுதியுடனும் காணப்படுவீர்கள்.