05-08-2022 இன்றைய ராசிபலன் - செலவுகள் அதிகரிக்கும்

 
Rasi palan
சுபகிருது வருடம்  I ஆடி 20 | வெள்ளி கிழமை | ஆகஸ்டு 5, 2022


மேஷம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

உங்களிடம் காணப்படும் நேர்மறையான எண்ணம் காரணமாக இன்றைய நாளை உங்களுக்கு சாதகமாக ஆக்கிக் கொள்வீர்கள். இன்று நீங்கள் எடுக்கும் முடிவுகள் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் போக்கில் இருக்கும் உறுதி காரணமாக நீங்கள் இன்று சிறப்பாக பணியாற்றுவீர்கள். உங்கள் துணையுடன் சிறந்த உணர்வுகளை பகிர்ந்து கொள்வீர்கள். உங்கள் துணையுடனான உறவில் நல்லிணக்கம் காணப்படும். இன்று அதிக பணம் சம்பாதிப்பீர்கள். கையிலுள்ள பணத்தை பயனுள்ள விஷயங்களுக்கு செலவு செய்வீர்கள்.

ரிஷபம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

நீங்கள் இன்று சற்று மந்தமாக செயல்படுவீர்கள். சுறுசுறுப்பாக இருக்க வேண்டியது அவசியம். இன்று நம்பிக்கையுடன் செயல்படுங்கள். உங்கள் பணியின்போது சில ஏமாற்றங்களையும் தடைகளையும் சந்திப்பீர்கள். உங்கள் சகபணியாளர்களுடனான தொடர்பும் சுமூகமாக இருக்காது. உங்கள் துணையுடன் சூடான வாக்குவாதங்கள் செய்ய நேரலாம் இதனை தவிர்த்து நட்பான அணுகுமுறை மேற்கொள்ளுங்கள். இன்று செலவினங்களை தவிர்க்க இயலாது. உங்கள் செலவுகளை கட்டுபடுத்துவது சிறந்தது.

 

மிதுனம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். உங்கள் செயல்களில் கவனம் தேவை. இன்று நீங்கள் பதட்டப்படுவதை தவிர்க்க வேண்டும். பணியில் உங்கள் சகபணியாளர்களால் சில தொல்லைகளை எதிர்கொள்வீர்கள். பொறுமையாக பணியை மேற்கொள்ளுங்கள். தகவல் பரிமாற்ற குறைபாடு காரணமாக உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு காணப்படும். நீங்கள் இருவரும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு வேறுபாடுகளை சரி செய்து கொள்ள வேண்டும். இன்று பணப்பற்றாக்குறை காணப்படும். இன்று அதிக செலவுகள் காணப்படும். உங்கள் தேவைகளை சமாளிக்க நீங்கள் பணம் கடன் பெறுவீர்கள். இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது.

கடகம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

உங்கள் மனதில் குழப்பம் காணப்படும். இதனால் அமைதி இழப்பீர்கள். பிரார்த்தனை மற்றும் இசை கேட்பதற்கு நேரம் ஒதுக்குவதன் மூலம் நீங்கள் ஆறுதல் பெறலாம். பணியில் சில சவால்களை சந்திக்க நேரும். உங்கள் நிறுவனத்தில் முதன்மை வகிக்க நீங்கள் திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். நீங்கள் உங்கள் துனையிடமிருந்து தனித்திருப்பது போல உணர்வீர்கள். ஆனால் இது வெறும் உணர்வு மட்டுமே. உண்மையில் உங்கள் துணை உங்களிடம் அன்பாக இருப்பார். இன்று பணவரவு குறைந்து காணப்படும். பண விஷயங்களைக் கையாளும்போது விழிப்புடன் இருக்க வேண்டும். இன்று தொண்டை வலி ஏற்பட வாய்ப்புள்ளது.  

சிம்மம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று முன்னேற்றகரமான நாளாக இருக்கும். உங்கள் முயற்சிகள் இன்று எளிதில் வெற்றி அடையும். உங்கள் நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். கடின உழைப்பின் மூலம் வெற்றி காண்பீர்கள். கடினமான பணிகளையும் எளிதாக தொழில் சார்ந்த முறையில் மேற்கொள்வீர்கள். உங்கள் துணையிடம் நீங்கள் அமைதியான அணுகுமுறை மேற்கொள்வீர்கள். இதனால் இருவரிடையே நல்ல புரிந்துணர்வு ஏற்படும். இன்று அதிக பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுவதன் மூலம் லாபம் காணலாம். இன்று தைரியமான மனநிலை காணப்படும்.

கன்னி

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று சற்று மந்தமான நாளாக இருக்கும். இன்று நம்பிக்கையுடன் சரியான போக்கில் உங்கள் செயல்களை செய்வது சிறந்தது. இன்று பணிகள் அதிகமாக காணப்படும். சக பணியாளர்களுடன் நல்லுறவு காணப்படாது. உங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்ளுங்கள். உங்கள் துணையுடன் அகந்தைப் போக்கை காண்பிப்பீர்கள். ஒருவரையொருவர் புரிந்துகொள்ள இத்தைகைய போக்கை தவிர்க்க வேண்டும். பொறுப்புகளும் செலவுகளும் அதிகமாக காணப்படுவதன் காரணமாக இன்று நிதி வளர்ச்சி சிறப்பாக இருக்காது.

துலாம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று சற்று மந்தமான நாளாக இருக்கும். உங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பதை கடினமாக உணர்வீர்கள். தியானம் அல்லது யோகா மேற்கொள்வதன் மூலம் பதட்டத்திலிருந்து விடுபடலாம். பணியைப் பொறுத்த வரை சற்று சரிவு நிலை காணப்படும். இன்று அதிக பொறுப்புகளை கையாள்வதன் காரணமாக சில வசதிகளை அனுபவிக்க உங்கள் மனதில் பாதுகாப்பின்மை உணர்வு காணப்படும். இதனை உங்கள் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள். இத்தகைய உணர்வு உறவின் நல்லிணக்கத்தை பாதிக்கும். நிதி வளர்ச்சி சுமாராக இருக்கும். ஆன்மீக விஷயங்களுக்காக செலவு செய்ய நேரலாம். 
 
விருச்சிகம் 

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று இழப்பிற்கான சாத்தியம் உள்ளது. எனவே கவனமாக இருக்க வேண்டும். ஆன்மீக ஈடுபாடு ஆறுதலையும் திருப்தியையும் அளிக்கும். இன்று நீங்கள் பணிகளை குறித்தநேரத்தில் முடிக்க இயலாது. பணிகளின் தாமதம் உங்கள் மேலதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும். உங்கள் மனதில் அகந்தைப் போக்கு காணப்படும். உறவில் நல்லிணக்கம் பேண இத்தகைய உணர்வை தவிர்க்க வேண்டும். இன்று திடீரென பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் நஷ்டம் ஏற்படாமல் இருக்க நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.
 

தனுசு

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் அனைத்து செயல்களையும் குறித்தநேரத்தில் வெற்றிகரமாக முடிப்பீர்கள். உங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். உங்கள் பணிகளை நம்பிக்கையுடன் மேற்கொள்வீர்கள். புதுமையான கருத்துக்கள் மூலம் நீங்கள் வளர்ச்சி காண்பீர்கள். உங்கள் துணையுடன் சிறந்த முறையில் தொடர்பு கொண்டிருப்பீர்கள். உங்கள் வீட்டில் நடைபெறவிருக்கும் ஒரு சுப நிகழ்ச்சி பற்றி உங்கள் துணையுடன் கலந்தாலோசிப்பீர்கள். உங்களின் நிதி சம்பந்தமான விருப்பங்கள் நிறைவேறும். இன்று அதிக பணம் சேமிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இன்று உங்களிடம் காணப்படும் மன வலிமை காரணமாக உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
 
மகரம் 

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

உங்கள் வலுவான திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள். அதன் மூலம் வெற்றி காண்பீர்கள் கடின உழைப்பு மற்றும் உறுதி மூலம் வெற்றி காண்பீர்கள். கடினமான பணிகளையும் எளிதாக மேற்கொள்வீர்கள். வேலை தொடர்பான பயணம் காணப்படுகின்றது. உங்கள் துணையிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். இதனால் இருவரிடையே நல்ல புரிந்துணர்வு காணப்படும். இன்று நிதி நிலைமை போதிய அளவு காணப்படும். உங்கள் வங்கியிருப்பு அதிகரிக்கும். நீங்கள் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடலாம். அது உங்களுக்கு லாபம் தரும். இன்று உங்களிடம் காணப்படும் புத்துணர்ச்சி காரணமாக நீங்கள் சிறந்த ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள்.

கும்பம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று சவால்கள் நிறைந்திருக்கும் என்பதால் நீங்கள் எதையும் பொறுமையாக கையாள வேண்டும். இசை மற்றும் பொழுதுபோக்கு விஷயங்களில் பங்கு கொள்வதன் மூலம் பலன் அடையலாம். உங்கள் பணிகளை மேற்கொள்ளும்போது சில போராட்டங்களை சந்திக்க நேரும். சக பணியாளர்களுடன் நல்லுறவு பராமரிப்பதிலும் சில பிரச்சினைகள் காணப்படும். உங்கள் துணையுடன் கவனமாக தொடர்பு கொள்ள வேண்டும். உங்கள் பதட்ட உணர்வை உங்கள் துணையிடம் காண்பிக்க நேரலாம். இது உறவின் நல்லிணக்கத்தை கெடுக்கும். இன்று நிதிநிலைமை சிறப்பாக இருக்காது. தேவையற்ற செலவுகள் ஏற்படும். இது உங்களுக்கு சிறிது கவலையை அளிக்கும். உங்கள் தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. 

மீனம் 

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்திலும் வெற்றி காண்பீர்கள். இன்று புதிய தொடர்புகள் மற்றும் நண்பர்கள் பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது உங்கள் பணியில் திருப்திகரமான பலன்கள் காண்பிப்பீர்கள். உங்களுக்குள் இருக்கும் திறமையை வெளிப்படுத்தி தரமாக பணியாற்றி தருவீர்கள். நீங்கள் அன்புவயப்பட்ட நிலையில் இருப்பீர்கள். இதை உங்கள் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள். இதனால் இருவரிடையே நல்லுறவு காணப்படும். இன்று அதிக பணம் பராமரிக்க இயலும். நிதி விஷயத்தில் முக்கிய முடிவுகள் எடுக்க நேரலாம்.