29-04-2022 இன்றைய ராசிபலன்- பயணத்தின்போது கவனம் தேவை

 
rasi palan

சுபகிருது வருடம்  I சித்திரை 16 |  வெள்ளிக்கிழமை I ஏப்ரல் 29, 2022


மேஷம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று கடினமான சூழ்நிலைகளை சந்திக்க நேரலாம். நீங்கள் இதில் முழு ஆற்றலையும் செலுத்த வேண்டியிருக்கும். பொழுதுபோக்கிற்கென சிறிது நேரமே ஒதுக்க வேண்டியிருக்கும். நீங்கள் இன்று அமைதியாக இருக்கவேண்டும். நீங்கள் கூடுதல் பொறுப்புகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் காணப்படும். இது உங்களுக்கு வருத்தம் அளிக்கும். மேலும் நீங்கள் பணிகளை கவனமாக கையாள வேண்டியிருக்கும். உங்களின் அஜாக்கிரதை காரணமாக இன்று பண இழப்பிற்கான வாய்ப்பு உள்ளது.
 

ரிஷபம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று நீங்கள் சௌகரியமாக உணர்வீர்கள். இனிமையான வார்த்தைகள் மூலம் நீங்கள் பலனடைவீர்கள். இதனால் உங்கள் தன்னம்பிக்கை வளரும். பணிகளை குறித்தநேரத்தில் முடிக்க சாத்தியமாகலாம். நீங்கள் உங்கள் மன உறுதியால் பணிகளை குறித்தநேரத்தில் முடிப்பீர்கள். 5உங்கள் துணையுடன் நேர்மையான நம்பிக்கையான உறவு கொண்டிருபீர்கள். இன்று மிகுந்த மகிழ்ச்சியும் திருப்தியும் காணப்படும். இன்று நிதியில் ஸ்திரத்தன்மை காணப்படும். உங்கள் சொத்து அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. முக்கிய முதலீடுகளில் பங்கு கொள்வதன் மூலம் லாபம் பெறலாம். இன்று உங்கள் தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தில் எந்தப் பிரச்சினையும் இருக்காது. 


மிதுனம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று உங்கள் மனதில் தெளிவு காணப்படும். இதனால் உங்கள் செயல்களை திறமையாக ஆற்றுவீர்கள். பொருத்தமான செயல்களை செய்து உங்கள் நிலையை மேம்படுத்துவீர்கள். இனிமையான வார்த்தைகள் உங்களுக்கு பல நல்ல பலன்களை அளிக்கும். பணியிடத்தில் வெற்றிகரமான பலன்கள் கிடைக்கும். உங்கள் கடின உழைப்பிற்கு பதவி உயர்வு கிடைக்கும். உங்கள் துணையுடன் வெளிப்படையாக கருத்துக்களை பகிர்ந்து கொள்வீர்கள். உங்கள் குடும்ப வளர்ச்சி பற்றிய ஆலோசனை நடத்துவீர்கள். இன்று நிதிநிலைமை மகிழ்ச்சிகரமாக இருக்கும். லாபம் தரும் முதலீட்டிற்கானபயனுள்ள திட்டங்களில் பங்கு கொள்ள இன்றைய நாளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.


கடகம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று பதட்டமான சூழ்நிலை காணப்படும். எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்வதன் மூலம் அமைதியை உணர்வீர்கள். கூடுதல் பொறுப்புகள் உங்களுக்கு கவலை அளிக்கும். இரவில் தூக்கமின்மை காணப்படும். நீங்கள் சிறந்த பலனைக் காண மிகக் கடினமாக உழைக்க வேண்டும். உங்கள் பணியில் வெற்றி பெற நீங்கள் சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டும். இந்த அனுபவம் திருப்தி அளிக்கும். இன்று நிதிநிலைமை மகிழ்ச்சிகரமாக இருக்காது. அதிகரிக்கும் பொறுப்புகள் காரணமாக இன்றைய தேவைகளை பூர்த்தி செய்வது கடினமாக காணப்படும்.

சிம்மம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று அதிருப்தியான நிலை காணப்படும். அனுசரணையான போக்கு உங்களுக்கு வெற்றியை பெற்றுத் தரும். சிறந்த பலன் காண உங்கள் தன்னம்பிக்கையை அதிகரித்துக் கொள்ள வேண்டும். உங்கள் எதிர்காலத்திற்காக நீங்கள் திட்டமிட வேண்டும். சக பணியாளர்களுடன் நல்லுறவு பராமரிக்க நீங்கள் முயற்சி எடுக்க வேண்டும். பணியில் கவனமாக இருப்பதன் மூலம் தவறுகள் நேராமல் தவிர்க்கலாம். தவறுகள் செய்ய வாய்ப்புள்ளதால் கவனமாக பணியாற்றவும். பயணத்தின் போது பண இழப்பிற்கான வாய்ப்பு உள்ளது. இதனை தவிர்க்க பணத்தை கவனமாகக் கையாள வேண்டும்..

கன்னி

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?


இன்று உங்களுக்கு சாதகமான நாள். பல வாய்ப்புகள் உங்களுக்கு வெற்றியை பெற்றுத் தரும். நேரத்தை நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். இன்றைய நாளின் பலன்கள் உங்களுக்கு திருப்தி அளிக்கும். நீங்கள் பொறுப்புடனும் சிரத்தையுடனும் பணியாற்றுவீர்கள். உங்கள் முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். கடினமான பணிகளை எளிதாக மேற்கொள்வீர்கள். இன்று நிதிநிலைமை சீராக இருக்கும். பணத்தை நீங்கள் பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள், இன்று உங்களிடம் சிறந்த ஆரோக்கியம் காணப்படும். உங்களிடம் ஆற்றல் நிறைந்து காணப்படும்.

துலாம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்றைய நிகழ்வுகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். கடினமான பணிகளையும் எளிதாக முடிப்பீர்கள். உங்கள் செயல்களில் கவனமாக இருக்க வேண்டும். இன்று நீங்கள் முக்கிய முடிவுகள் எடுக்கலாம். பணியிடச் சூழல் மகிழ்ச்சிகரமாக இருக்கும். நீங்கள் சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள். மொத்ததில் உங்கள் செயல்திறனில் திருப்தி காணப்படும். நிதிநிலைமை உங்களுக்கு சாதகமாகவும் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள போதுமானதாகவும் இருக்கும். உங்களால் சேமிப்பு நிலையை உயர்த்த இயலும். உங்களின் தைரியமான மனநிலை காரணமாக இன்று உங்களின் ஆரோக்கியம் சிறப்ப்பாக இருக்கும்..


விருச்சிகம் 

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று செயல்கள் சீராக நடக்க சாதகமாக இருக்காது. இன்று அதிக பொறுப்புகள் காணப்படும். இது உங்களுக்கு கவலை அளிக்கும். உங்களை மகிழ்ச்சியாக வைத்திருங்கள். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். இன்று உங்கள் பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க இயலாது. கூடுதல் பணிகள் காரணமாக திட்டமிட்டபடி பணிகளை செய்வது கடினமாக இருக்கும். இன்று பணப்புழக்கம் குறைந்து காணப்படும். உங்களுக்கு கூடுதல் செலவுகள் ஏற்படும். எனவே பணத்தை கவனமாகக் கையாள வேண்டும். ஆரோக்கியம் சிறப்பாக காணப்படாது


தனுசு

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று சாதகமான பலன்கள் கிடைக்காது. நீங்கள் சமநிலை இழப்பீர்கள். நற்பலன்கள் காண எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்ள வேண்டும். முக்கிய முடிவுகள் இன்று சிறந்த பலன் அளிக்காது. இன்று அதிகப் பணிகள் காணப்படும். பணிகள் சலிப்பூட்டுவதாக இருக்கும். நீங்கள் சிறந்த பணி மாற்றம் விரும்புவீர்கள். அது இன்று சாத்தியமில்லை, இன்று அதிக செலவுகள் செய்ய நேரலாம். இது உங்களுக்கு கூடுதல் சுமையாக இருக்கும். இது உங்களுக்கு வருத்தத்தை அளிக்கும். இன்று கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. ஆன்மீக ஈடுபாட்டின் மூலம் நீங்கள் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கலாம்

மகரம் 

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும். முக்கிய இலக்குகளை அடைய திட்டமிடலாம். நீங்கள் எதிர்பார்த்ததை விட இன்று அதிகம் கிடைக்கும். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள். பணியிடத்தில் அதிக வாய்ப்புகள் காணப்படும். நீங்கள் பணிகளை திறமையாகவும் விரைவாகவும் ஆற்றுவீர்கள். உங்கள் அணுகுமுறையில் உறுதி காணப்படும். உங்களின் சேமிப்பு ஆற்றல் சிறந்த முறையில் அதிகரிக்கும். லாபம் தரும் புதிய முதலீடுகளில் நீங்கள் பங்கு பெறலாம். 


கும்பம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று சாதகமான பலன்கள் கிடைக்காது. அஜாக்கிரதை மற்றும் கவனமின்மை காரணமாக உங்களுக்கு வளர்ச்சி அளிக்கும் சில மதிப்பு மிக்க வாய்ப்புகளை இழப்பீர்கள். பணியிடத்தில் வெற்றிகள் அதிக அளவில் காணப்படாது. இதனால் பணிகள் தேங்கிக் கிடைக்கும். என்றாலும் திட்டமிட்டு பணியாற்றினால் பணிகளை குறித்தநேரத்தில் முடிக்கலாம். இன்று வீணான செலவுகள் காணப்படும். உங்கள் செலவுகளை கட்டுபடுத்த இயலாது. சிக்கனம் கடைபிடிக்க வேண்டும். இன்று ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்காது. 


மீனம் 

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று மகிழ்சிகரமான நாளாக இருக்காது. பதட்டமான சூழ்நிலை கவலை அளிக்கும். நீங்கள் சில தடைகளை சந்திப்பீர்கள். அது உங்கள் வளர்ச்சியை பாதிக்கும். சிறந்த வளர்ச்சி காண திட்டமிட்டு செயல்பட வேண்டும். மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் உங்கள் மேலதிகாரியுடன் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். அதிகப் பணிகளால் மகிழ்ச்சி குறையும். உங்கள் பணிகளை திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும். குடும்ப பிரச்சினை சிலவற்றின் காரணமாக உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். இன்று நிதிக் கட்டுப்பாடு காணப்படும். இன்று கூடுதல் செலவுகள் செய்ய நேரும். அதிகரிக்கும் பொறுப்புகள் காரணமாக செலவுகள் அதிகாரிக்கும்.