09-11-2022 இன்றைய ராசிபலன் - ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்படலாம்

 
Rasi palan

சுபகிருது வருடம்  I ஐப்பசி 22 | புதன்கிழமை 09-11-2022

மேஷம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். மகிழ்ச்சியற்ற மற்றும் பாதுகாப்பற்றதுமான உணர்வு சிறிதளவு காணப்படும். தளர்வாகவும் அமைதியாகவும் இருப்பது நல்லது.பலன்கள் உங்களுக்கு சாதகமாக அமைய கடின உழைப்பு வேண்டும். பணியிடத்தில் சில தவறுகள் செய்ய நேரலாம். அதனால் உங்கள் மேலதிகாரிகளின் நன் மதிப்பை இழப்பீர்கள். உங்கள் துணையுடன் தொடர்பாடலின் பொழுது பிரச்சினைகள் ஏற்படும். நல்ல மனநிலை இன்று காணப்படாது. எனவே பேசுவதை தவிர்ப்பது உங்களுக்கு நல்லது. பயனுள்ள வகையில் பணத்தை உங்களால் செலவழிக்க இயலாது. நிறைய பணம் இருந்தாலும் தேவையற்ற செலவுகளைச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
 

ரிஷபம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

உங்கள் செயல்களை பொறுமையான முறையில் கையாள வேண்டும். எதிர்மறை விளைவுகளை தவிர்க்க இசை கேட்டல், திரைப்படங்கள் பாரத்தல் போன்ற கேளிக்கை நிகழ்ச்சிகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். உங்கள் பணியில் நல்ல தரத்தை நீங்கள் பராமரிக்க இயலாது. அது உங்களுக்கு கவலையை அளிக்கும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். உங்கள் துணையுடன் சில சச்சரவுகள் ஏற்படும். சிறந்த தொடர்பாடல் மூலம் அத்தகைய சிக்கல்களை தவிர்க்க வேண்டும். அதிக செலவினங்கள் காணப்படும். 
 

மிதுனம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

உங்கள் சுய வளர்ச்சியில் தடைகள் காணப்படும். அமைதியான அணுகுமுறை மிகவும் அவசியம். தியானம் மேற்கொள்வது உங்களுக்கு மிகவும் நல்லது.உங்கள் பணி உற்சாகப்படுத்தும் வகையில்அமையாது. உங்கள் சக ஊழியர்களிடமிருந்து தேவையான ஒத்துழைப்பு கிடைக்காது. அது உங்களுக்கு கவலையை அளிக்கும். மகிழ்ச்சியான மனநிலை காணப்படாது. அதன் காரணமாக உங்கள் துணையிடம் எரிச்சலை வெளிப்படுத்துவீர்கள். அறிவுக்கு பயன்படாத விஷயங்களைப் பேசுவதை தவிரக்க வேண்டும். பணம் குறைந்த அளவில் காணப்படும். பணஇழப்புகள் நேர வாய்ப்பு உள்ளது. பணத்தை கையாளும் பொழுது கவனம் தேவை.

கடகம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

உங்கள் சுய முயற்சியின் மூலம் வெற்றி காண்பீர்கள். அதே சமயத்தில் நீங்கள் சில சமயங்களில் திருப்திகரமற்ற நிலையை உணர்வீர்கள். எனவே உயர்ந்த தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வது நல்லது. பணியில் பிரகாசிப்பீர்கள். குறித்த நேரத்தில் பணியை முடிப்பீர்கள். பணியை மிகவும் மகிழ்ச்சியுடன் செய்வீர்கள். உங்கள் துணையுடனான சந்திப்பும் பயனுள்ள பேச்சு வார்த்தைகளும் மகிழ்ச்சியை அளிக்கும். சந்திப்பின் மூலம் உங்கள் எதிர்காலத்தைப் பற்றி நன்கு திட்டமிடலாம். பணவரவு அதிகமாகக் காணப்படும். பயனுள்ள நோக்கங்களுக்காக உங்களின் பணத்தை செலவு செய்வீர்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தில் எந்தவிதமான குறைபாடுகளும் காணப்படாது.

சிம்மம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

உங்களிடத்தில் நிறைந்திருக்கும் ஆர்வம் காரணமாக செயல்களை விரைவாக செய்து முடிப்பீர்கள்.உங்கள் நலனுக்கான பயனுள்ள முடிவுகளை எடுப்பதற்கான போதுமான மன ஆற்றல் உங்களிடம் காணப்படும். உங்களிடத்தில் காணப்படும் சிறப்புத் தகுதிகள் காரணமாக உங்கள் பணியை சிறந்த முறையில் ஆற்றுவீர்கள். உங்கள் பணிக்கு அங்கீகாரம் கிடைக்கப் பெறுவீர்கள். உங்கள் மனதில் உணர்ச்சிப்பூர்வமான எண்ணங்கள் காணப்படும். அவற்றை உங்கள் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள். உங்கள் நல்லுறவு வளர்வதற்கு அது உதவும். நீங்கள் அதிக பணத்தை சேமிக்க முடியும். உங்கள் வங்கியிருப்பு அதிகரிக்கும். இது உங்களுக்கு திருப்தியை அளிக்கும்.
 

கன்னி

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

உங்கள் கவலை மற்றும் பாதுகாப்பற்ற உணர்வுகளை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும். எதிர்மறை எண்ணங்கள் கூடாது. இன்றைய நாள் சாதகமான நாளாக இருக்கும், அதிசயங்களை சாதிப்பேன் என்று நினையுங்கள். உங்கள் பணிகளை ஆற்றுவதற்கான தைரியமும் நேர்மறை ஆற்றலும் உங்களிடம் காணப்படும். நீங்கள் மேற்கொள்ளும் பணியில் ஏற்படும் தடைகளை எதிர்கொண்டு சமாளிப்பதற்கு அது உதவும். உங்கள் துணையை நம்ப வைப்பது கடினமாக உணர்வீர்கள். கருத்து வேறுபாட்டிற்கான வாய்ப்புகளும் அறிவுப்பூர்வமற்ற விவாதங்களும் காணப்படுகின்றன. குறைந்த அளவு பணமே காணப்படும். அதிக செலவினங்கள் செய்ய நேரலாம். ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது.


துலாம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

உங்கள் பொறுமை சோதிக்கப்படும். எனவே இன்றைய நாளை திட்டமிடுங்கள். பிரார்த்தனையில் ஈடுபடுத்திக்கொள்வதும் மந்திரங்களை கேட்பதும் உங்களுக்கு நல்வழிகாட்டிகளாக அமையும். உங்களுக்கு சாதகமான முறையில் நேர்மறையான பலன்கைளப் பெறுவதற்கு நீங்கள் ஒழுங்கான முறையிலே வேலை செய்ய வேண்டும். குடும்பப் பிரச்சினை ஒன்றின் காரணமாய் உங்கள் துணையுடன் மோதல் ஏற்படும். இது உங்களுக்கு கவலையை அளிக்கும். நட்பான அணுகுமுறையும் விஷயங்களை லேசாக எடுத்துக் கொள்வதும் நன்மை தரும். தேவையற்ற செலவினங்களை சந்திக்க வேண்டிய கட்டாயமிருக்கும். இது உங்களுக்கு கவலையை அளிக்கும்.

விருச்சிகம் 

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று சுதந்திரமான மனநிலையில் இருப்பீர்கள். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக அமையும். உங்கள் பணியில் சாதகமான பலன்கள் கிடைக்கும். உங்கள் திறமைகள் உங்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். இன்று காதல் வயப்பட்ட அணுகுமுறையைக் கொண்டிருப்பீர்கள். உங்கள் காதலை உங்கள் துணை நம்பத்தக்க வகையில் வெளிப்படுத்துவீர்கள். பணத்தை பொறுத்த வரை இன்பகரமான நிலை இருக்கும் முக்கியமான முதலீடுகளுக்கான முடிவுகளுக்கு இன்றைய நாளை பயன்படுத்திக்கொள்ளலாம். ஆரோக்கியம் சிறப்புடன் காணப்படும். நீங்கள் தேக ஆரோக்கியத்தை பராமரிப்பீர்கள்.
 

தனுசு

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று மறக்க முடியாத நாளாக இருக்கக் காண்பீர்கள். உங்கள் இலக்குகளை அமைத்துக் கொண்டு அதில் வெற்றி காணும் நிலை உருவாகும். பணியிடத்தில் சாதகமான சூழலே காணப்படும். நீங்கள் ஆற்றிய பணிக்காக ஊக்கத்தொகை மற்றும் சலுகைகளைப் பெறுவீர்கள். உங்களது நேர்மையான அணுகுமுறை மற்றும் நல்ல புரிந்துணர்வு மூலம் உங்கள் துணையுடன் நல்லுறவை உருவாக்கமுடியும். பணவரவு அதிகமாக இருக்கும். நிதியைப் பொறுத்த அளவில் சுதந்திரமாக இருப்பதற்கான திறனை உங்களால் வளர்த்துக் கொள்ள முடியும். நல்ல ஆரோக்கியத்தை பராமரிப்பீர்கள். நிறைய ஆற்றல் இருப்பதன் காரணத்தால் நல்ல ஆரோக்கியம் சிறந்து காணப்படும்.

மகரம் 

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். மன எழுச்சிக்கு இடம் அளிக்காதீர்கள். உங்கள் அணுகுமுறையில் தளர்வாக இருங்கள். தியானம் மேற்கொள்வது நல்லது. பணிகள் கடுமையாகவும்; அதிகமாகவும் காணப்படும். அமைதியான முறையில் பணியாற்ற சகபணியாளர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். உங்கள் துணையுடன் சில கருத்து வேறுபாடுகள் காணப்படும். உங்கள் துணையார் உங்கள் கருத்தை ஒத்துக் கொள்ள மறுப்பு தெரிவிப்பதன் காரணமாய் மகிழ்ச்சி குறையும். செலவினங்கள் அதிகமாகக் காணப்படும். வீட்டுப் புணரமைப்பிற்காக அவசியம் செலவு செய்ய வேண்டியிருக்கும். தொண்டை வலி இருக்கும்.
 

கும்பம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?


இன்று உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் வகையில் நீங்கள் செயல்களை செய்யலாம். முக்கியமான முடிவுகள் எடுப்பது இன்று நற்பலன்களைத் தரும். குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க இயலாது. உங்கள் சக பணியாளர்களிடமிருந்து போதுமான ஆதரவு கிடைக்காது. அவர்களால் சில சிக்கல்கள் ஏற்படும். இன்றைய நாள் காதலுக்கு உகந்த நாள் அல்ல. உங்கள் துணையிடம். உணர்ச்சிவசப்படுவதன் காரணமாக சில சிக்கல்கள் நேரும். இது உங்களுக்கு கவலையை அளிக்கும். குறைந்த அளவில் பணம் காணப்படும். தேவையற்ற செலவினங்களை எதிர்கொள்ள நேரும். திறமையாக பணத்தைக் கையாள வேண்டியது அவசியம்.


மீனம் 

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக அமைய நல்ல திட்டமிடலும் உறுதியும் கொண்டு செயல்பட வேண்டும். முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். பணியிடத்தில் சாதகமான சூழலே காணப்படும். குறைந்த நேரத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். இது உங்கள் மேலதிகாரிகளின் கவனத்தை ஈரக்கும். உங்களது நல்ல மனநிலை காரணமாக உங்கள் துணையுடன் நேரம் நல்லவிதமாகக் கழியும். உங்களிடம் அதிக அளவில் பணம் இருக்கும். பயனுள்ள நோக்கங்களுக்காக பணத்தை செலவு செய்வீர்கள். மகிழ்ச்சியான மனநிலை காரணமாக முழு ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள்.