27-07-2022 இன்றைய ராசிபலன் - உழைப்பால் உயர்வு ஏற்படும் நாள்

 
Rasi palan

சுபகிருது வருடம்  I ஆடி 11 | புதன்கிழமை | ஜூலை 27, 2022


மேஷம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்றைய நாள் ஏற்ற இறக்கங்களுடன் காணப்படும். திறம்பட அறிந்து உங்கள் செயல்களை ஆற்ற வேண்டும். தியானம் மேற்கொள்வது பயனுள்ளதாக இருக்கும். இன்று பணியில் வெற்றி காண்பீர்கள். சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும்.அதனை சரியாகப் பயன்படுத்துவதன் மூலம் பாராட்டைப் பெறுவீர்கள். உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையிலான உறவில் நல்ல பிணைப்பு காணப்படுகின்றது. இன்று வரவும் செலவும் இனைந்து காணப்படும். கூடுதல் பொறுப்புகள் காணப்படும். இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும். தேக ஆரோக்கியம் சிறப்புடன் காணப்படும். இதனால் சிறந்த ஆரோக்கியம் பராமரிக்கப்படும்.

ரிஷபம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

முன்னுரிமைப்படி செயல்களை செய்வதற்கு மனதில் தெளிவு கொள்ளுங்கள். விழிப்புணர்வுடன் செயல்களைச் செய்து வளர்ச்சி காண்பீர்கள். பணியில் புதிய வாய்ப்புகள் உற்சாகத்தை அளிக்கும். உங்கள் பணிகளை விரைந்து ஆற்றுவீர்கள். நெருங்கிய உறவினர் ஒருவரிடமிருந்து உங்களுக்கு பயனுள்ள ஆலோசனை கிடைக்கும். அது உங்கள் தாய் அல்லது தந்தையாகக் கூட இருக்கலாம். அதன் மூலம் உங்களுக்கு பலன் கிடைக்கும். நிதி விஷயங்கள் இன்று சிறப்பாக காணப்படும். உங்களால் சேமிக்க இயலும். இன்று ஆரோக்கியப் பிரச்சனை காணப்படாது. இன்றைய நாளை நீங்கள் மகிழ்ச்சியாக அனுபவிக்கலாம்.


மிதுனம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று உங்கள் திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெறுவீர்கள். சிறப்புடன் செயலாற்ற மனதில் தெளிவு தேவை. உங்கள் சக பணியாளர்களுடன் நல்லுறவு பராமரிப்பீர்கள். அவர்களிடமிருந்து தக்க சமயத்தில் ஆதரவு கிடைக்கப்பெறுவீர்கள். அதன் மூலம் வளர்ச்சி காண்பீர்கள். இன்று காதலுக்கு உகந்த நாள். உங்கள் துணையுடன் அன்பான தருணங்களை கழிப்பதன் மூலம் மன நிறைவைக் காண்பீர்கள். இன்று நிதி விஷயங்களுக்கு சாதகமான நாள். உங்கள் சேமிப்பு உயர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ள நாள்.

கடகம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று உங்கள் செயல்களில் மிகுந்த அக்கறை காட்ட மாட்டீர்கள். அதிர்ஷ்டத்தை நம்பாமல் சிறந்ததை செயலாற்ற முயலுங்கள். பணியில் திருப்திகரமான நிலை இருக்காது. உங்கள் சக பணியாளர்களுடன் சுமுகமான உறவு காணப்படாது. தேவையற்ற பேச்சுகளைத் தவிர்க்கவும். இன்று காதலுக்கு ஏற்ற நாள் அல்ல. உங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொள்ள மூடியாவிட்டால் பொறுமை இழக்காதீர்கள். இனி வரும் நாட்கள் சிறந்த நாட்களாக இருக்கும் என்று நம்புங்கள். நிதி விஷயங்களுக்கு இன்று சிறந்த நாளாக இல்லாத காரணத்தால் உங்களிடம் உள்ள பணத்தை வைத்து சமாளிக்க வேண்டும். இன்று ஆரோக்கியம் சுமாராக இருக்கும். இருமல் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது.
 

சிம்மம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

உங்கள் முடிவுகளை செயலாற்றுவதில் உறுதியாக இருப்பீர்கள், மனதில் உள்ள குழப்பத்தை நீக்கி விடுங்கள்.உங்கள் முடிவுகளை, கவனமாக திட்டமிட்டு செயலாற்றுவது நன்மை தரும். உங்கள் பணிக்கான பாராட்டைப் பெறுவீர்கள். உங்கள் செயல்திறன் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறும். இன்று நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் இருக்க வேண்டும். உங்கள் துணையை மகிழ்விக்க முயற்சி செய்யுங்கள். பணப்புழக்கம் போதிய அளவு காணப்படாது. இன்று அதிர்ஷ்டமான நிதிநிலைமை இருக்காது. அது உங்களுக்கு கவலையாக இருக்கும். மனதில் காணப்படும் உற்சாகம் காரணமாக ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள்.
 

கன்னி

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று சிறப்பான நாள். உங்களின் மனநிலையை சிறப்பாக பராமரித்து தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். உங்கள் பணியில் வெற்றி கிடைக்கும். உங்கள் சக பணியாளர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். உறவில் நல்லிணக்கம் காணப்படும். உங்கள் துணையுடன் உங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொள்வீர்கள். இன்று பண வரவு சீராக இருக்கும். பயனுள்ள வகையில் பணத்தை செலவு செய்வீர்கள். இன்று ஆரோக்கியத்தில் எந்தப் பிரச்சினையும் காணப்படாது.
 

துலாம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?


உங்களிடம் சிறந்த ஆற்றல் காணப்படும். அதற்கான நற்பெயர் பெறுவீர்கள். உங்கள் பணியில் மாறுதல்கள் நேரலாம். இன்று பணிகள் அதிகமாக இருக்கும். நீங்கள் பணியில் மும்மரமாக செயல்படுவீர்கள். உங்கள் மேலதிகாரிகளின் அங்கீகாரம் பெறுவீர்கள். இன்று காதலுக்கு உகந்த நாள். உங்களின் சிறந்த உணர்வுகளை உங்கள் துணையுடன் பகிர்ந்து கொள்வீர்கள். நிதி சம்பந்தமான பிரச்சினைகள் பாதிப்பை ஏற்படுத்தாது. நீங்கள் பணத்தை சேமிப்பீர்கள்.
 
 

விருச்சிகம் 

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று சில அசௌகரியங்கள் காணப்படும். உங்கள் ஆக்கப்பூர்வமான செயல்பாட்டை பாதிக்கும் பதட்டத்தை கைவிடுங்கள். இலக்குகளை அடைவதற்கும் வெற்றியைப் பெறுவதற்கும் முறையாக திட்டமிடவேண்டியது அவசியம். திருமண திட்டங்கள் பற்றிய உரையாடல்களை வேறு ஒரு நாளைக்கு தள்ளிப்போடுங்கள். இன்று காதலுக்கு ஏற்ற நாள் அல்ல. பணத்தை கவனமாக கையாள வேண்டும். பண இழப்பு அல்லது பணம் திருடு போகலாம். உங்கள் தாயின் உடல் நிலை பற்றி கவலைப்படுவீர்கள். அந்த வகையில் செலவுகள் ஏற்படலாம்.

தனுசு

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று சிறந்த நாளாக இருக்காது. அசௌகரியங்கள் காணப்படும். புதிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள இன்றைய நாளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். பணியில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. பணியில் உங்கள் நேர்மை பாராட்டைப் பெரும். உங்கள் துணையுடன் தேவையற்ற மோதல்கள் ஏற்படலாம். அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.  இன்று நிதிநிலைமை மகிழ்ச்சிகரமானதாக இல்லை. தேவையற்ற செலவுகளை கண்காணிக்கவும். இன்று அஜீரணம் மற்றும் வயிற்று உப்பசம் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். உண்ணும் உணவில் கவனம் கொள்ளுங்கள்.

மகரம் 

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?


இன்று வளர்ச்சி காணப்படும் நாள். உங்கள் சுய முயற்சி மூலம் கடினமாக உழைத்து வெற்றி பெறுவீர்கள். இன்று பணிகள் அதிகமாக காணப்படும். சூழ்நிலையை திறமையாக கையாண்டு சவால்களை சமாளிக்க வேண்டும். சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்காது. உங்கள் துணையுடன் நல்லுறவு கொண்டு மகிழ்வீர்கள். உங்கள் அணுகுமுறை உங்கள் பிரியமானவரின் பாராட்டைப் பெறும். நிதி வளர்ச்சி சிறப்பாக காணப்படுகின்றது. நீங்கள் கணிசமாக சேமிப்பீர்கள். கால் வலி மற்றும் தொடை வலி தவிர வேறு எந்த ஆரோக்கியப் பிரச்சினையும் இருக்காது. என்றாலும் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
 

கும்பம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?


விரக்தியான மன நிலையை தவிர்த்துவிட்டு மனதை மகிழ்ச்சியாக, அமைதியாக வைத்துக்கொள்ளுங்கள். பணியில் கூடுதல் சுமைகள் காணப்படும். பணியிடச் சூழல் மகிழ்ச்சியை அளிக்காது. இன்று காதலுக்கு உகந்த நாள் அல்ல. உங்கள் துணையுடன் மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று பண வளர்ச்சி குறைந்து காணப்படும். பணம் சேமிப்பதை கடினமாக உணர்வீர்கள். பதட்டம் மற்றும் பாதுகாப்பின்மியை தவிர்த்திடுங்கள். அது உங்கள் ஆரோக்கியத்தைக் கெடுக்கும்.
 

மீனம் 

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று விவேகத்துடன் யோசித்து செயல்பட வேண்டும். கடந்த காலத்தைப் பற்றிய யோசனையைத் தவிர்க்க வேண்டும். சாதகமற்ற சூழ்நிலையையும் சமாளித்து அதனை உங்களுக்கு சாதகமாக ஆக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் பணியில் தவறுகள் செய்ய நேரலாம். எனவே திட்டமிட்டு பணியாற்றுங்கள். அதிகரிக்கும் பணிச்சுமை காரணமாக வேறு வேலை தேடுவீர்கள். இன்று நீங்கள் காதலை எளிதாக எடுத்துக்கொள்வீர்கள். இதனால் உங்கள் துணையுடன் சுமுகமான உறவு காணப்படும். நிதிநிலைமை மகிழ்ச்சிகரமானதாக இருக்காது. கூடுதல் செலவினங்களை சந்திக்க நேரலாம்.