25-11-2022 இன்றைய ராசிபலன் - அலைச்சலால் ஆதாயம் உண்டு

 
rasi palan
சுபகிருது வருடம் 2022  I கார்த்திகை 9 |  வெள்ளிக்கிழமை 25-11-2022

மேஷம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று மன திடத்துடன் இருக்க வேண்டியது அவசியம். உங்கள் பணிகளை கையாளும்போது சில தடைகள் ஏற்படும். முக்கியமான முடிவுகளை இன்று எடுப்பதை தவிர்க்கவும். நேர்மறையான அணுகுமுறை மேற்கொள்ளவும். இன்று பணிகள் அதிகமாக காணப்படும்.இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமைய நீங்கள் சிறப்பாக திட்டமிட வேண்டும். உறவில் மகிழ்ச்சி நிலவ நீங்கள் மனம் திறந்து பேச வேண்டும். அனுசரித்து செல்வது நல்லது. நிதிநிலைமை மகிழ்சிகரமாக இருக்காது. தேவையற்ற செலவுகளை சந்திக்க நேரும்.

ரிஷபம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்றைய நாள் சீராக இருக்கும். நண்பர்களும் உடனிருப்பவர்களும் உங்கள் மீது நம்பிக்கையுடன் இருப்பார்கள். இன்று மகிழ்ச்சி நிறைந்து காணப்படும். பணியிடத்தில் சில இனிமையான ஆச்சரியங்களை சந்திப்பீர்கள். எனவே உங்கள் பணிகளை உற்சாகத்துடன் செய்வீர்கள். உங்கள் துணையுடன் நட்பான அணுகுமுறை மூலம் பிரச்சினைகளை எளிதாக தீர்க்கலாம். இருவருக்குமிடையே நல்ல புரிந்துணர்வு காணப்படும். உங்களிடம் இருக்கும் பணம் திருப்திகரமாக இருக்கும். அதை நல்ல முறையில் பயன்படுத்துவீர்கள்.
 

மிதுனம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

உங்கள் கடின முயற்சிகளின் மூலம் வெற்றி காண்பீர்கள். தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். முக்கிய முடிவுகள் நல்ல பலனைத் தரும். உங்கள் நேர்மை மற்றும் உறுதி காரணமாக உங்கள் பணிக்கு நல்ல மதிப்பு கிடைக்கும். உங்கள் துணையிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். இருவரும் பயனுள்ள ஆலோசனைகளை நடத்துவீர்கள். கடன்கள் மூலம் பண வரவு காணப்படும். அதனைக் கொண்டு உங்கள் தேவைகளை பூர்த்தி செய்துகொள்வீர்கள். இன்று மகிழ்ச்சியான ஆரோக்கியமான மனநிலையில் இருப்பீர்கள். இதனால் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்

கடகம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?


இன்று சுமாரான பலன்களே கிடைக்கும். உங்கள் செயல்களை மேற்கொள்ளும்போது சில சவால்களை சந்திக்க நேரும். இன்று சௌகரியங்கள் குறைந்து காணப்படும். பணியில் தவறுகள் நேர வாய்ப்புள்ளது. பணிகளைக் கையாளும் போது கவனம் தேவை. குடும்பதில் ஏற்படும் பிரச்சினைகள் காரணமாக உங்கள் இருவருக்கும் இடையிலான உறவின் நல்லிணக்கம் பாதிக்கப்படும். வீட்டிற்காக பணம் செலவு செய்ய நேரலாம். நிதியில் ஸ்திரத்தன்மை பராமரிக்க தேவையற்ற செலவுகளை தவிர்க்க வேண்டும். உங்கள் தாயின் உடல் நலத்திற்காக செலவு செய்ய நேரும். அவருக்கு வயிறு சம்பந்தமான உபாதை காணப்படும்.

சிம்மம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று பயணம் அதிகமாக காணப்படும். பலன்கள் தாமதமாக கிடைக்கும். எனவே திட்டமிட்டு செயலாற்றுவது சிறந்தது. இன்று பணிகள் அதிகமாக காணப்படும். எனவே பணிகளை திட்டமிட்டு ஒழுங்கான முறையில் மேற்கொள்ள வேண்டும். உங்கள் துணையுடன் தொடர்பு கொள்வதில் சிக்கல் காணப்படும். உரையாடும்போது உங்கள் வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் துணையுடன் நட்பான அணுகுமுறை வேண்டும். நிதிநிலைமை திருப்திகரமாக இருக்காது. அதிக செலவுகள் காணப்படும். அதனைக் கையாள்வதை கடினமாக உணர்வீர்கள்.

கன்னி

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று வெற்றி எளிதாக கிடைக்கும். உங்களுடைய இனிமையான சுபாவம் பிறரிடம் உங்கள் மீதான நல்லெண்ணத்தை வளர்க்கும். நீங்கள் உறுதியுடனும் நம்பிக்கையுடனும் காணப்படுவீர்கள். பணியிடத்தில் சவால்களை எளிதாகக் கையாள்வீர்கள். அனுசரித்து போகும் அணுகுமுறை உங்களை உச்சத்திற்கு அழைத்துச் செல்லும். காதல் ஜோடிகளிடம் நல்ல புரிந்துணர்வு காணப்படும். இதனால் உறவின் நல்லிணக்கம் மேம்படும். உங்களிடம் இருக்கும் பணம் உங்களுக்கு போதுமானதாக இருக்கும். பணத்தை பயனுள்ள விஷயங்களுக்கு செலவு செய்வீர்கள்.
 
 
துலாம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?


இன்று பொறுப்புகள் அதிகமாக காணப்படும். எனவே அவற்றை மேற்கொள்ளும் விதத்தில் உங்கள் செயல்களை திட்டமிதல் சிறந்தது. உணர்ச்சிவசப்படுதலை தவிர்க்க வேண்டும். வேலை விஷயமாக பயணம் செல்ல நேரும். ஆனால் அது திருப்தியை அளிக்காது. பயணத்தை தவிர்க்க முயற்சி செய்யுங்கள். கட்டுப்பாடான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும். உணர்ச்சிப் பூர்வமான விஷயங்களை கவனமாக கலந்தாலோசிக்க வேண்டும். இன்று பண வரவு குறைந்து காணப்படும். பணத்தை சேமிப்பதற்கான வாய்ப்பும் குறைவு.

 
விருச்சிகம் 

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

பயணத்தின் போது கவனமாக இருக்க வேண்டும். இசையைக் கேட்பது உங்களுக்கு ஆறுதலை அளிக்கும். பணியில் கவனம் குறைவாக காணப்படும். பணிகளை திட்டமிட்டு ஒழுங்கான முறையில் மேற்கொள்ள வேண்டும். தம்பதியரிடையே அன்பு குறைந்து காணப்படும். இது உறவில் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே நல்லுறவை ஏற்படுத்திக் கொள்வது சிறந்தது. . பண வரவு செலவு இரண்டும் காணப்படும். தேவையற்ற செலவுகளை கண்காணியுங்கள்.
 

தனுசு

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

மற்றவர்களுடன் சிறிது எச்சரிக்கையுடன் அணுக வேண்டும். உங்களுக்கு பிரியமானவர்களுடன் பேசும் போது கவனம் தேவை. இன்று எடுக்கும் முக்கிய முடிவுகள் சிறந்த பலனை அளிக்காது. இன்று பணிகள் அதிகமாக காணப்படும். இதனால் பணிகள் மேற்கொள்வதில் தாமதம் ஏற்படலாம். உறவில் மகிழ்ச்சியை பராமரிக்க உங்கள் துணையிடம் உணர்ச்சி வசப்படுதலை தவிர்க்க வேண்டும். இன்று செலவுகள் அதிகமாக இருக்கும். உங்கள் பணத்தை கையாள்வதை கடினமாக உணர்வீர்கள். கவனமாக இல்லாவிடில் பண நஷ்டம் ஏற்படும்.

மகரம் 

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று உங்கள் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள சிறந்த நாள். நீங்கள் எடுக்கும் சிறிய முயற்சிகள் கூட உங்களுக்கு சாதகமான பலன்களை அளிக்கும். நண்பர்கள் மற்றும் உடனிருப்பவர்களின் நல்லாதரவு கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். கிடைக்கும் நல்ல வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். வாழ்கையில் ஒருமுறை வரும் இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் துணையிடம் உங்கள் உணர்வுகளை நேர்மையுடன் பகிர்ந்து கொள்வீர்கள். இதனால் உறவில் அமைதியும் நல்லிணக்கமும் காணப்படும். இன்று நிதிநிலைமை வளர்ச்சிகரமாக இருக்கும். உங்கள் சேமிப்பு ஆற்றல் உயரும்.

கும்பம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?


இன்று பயணங்கள் காணப்படும். உங்களிடம் ஆற்றல் நிறைந்து காணப்படும். ஆன்மீக ஈடுபாடு மிகுந்த ஆறுதலை அளிக்கும். பணியிடத்தில் நல்ல செயல்திறனுடன் செயல்படுவீர்கள். உங்கள் திறமை உங்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். நல்ல புரிந்துணர்வு இருந்தால் தம்பதியரிடையே அமைதியும் மகிழ்ச்சியும் காணப்படும். உங்கள் துணையைப் பற்றி மகிழ்ச்சியுடன் உணர்வீர்கள். இன்று பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். இன்று உங்கள் எதிர்கால நலன் கருதி முதலீடு செய்யலாம். இன்று உங்களிடம் காணப்படும் உற்சாகம் மற்றும் உறுதி காரணமாக நீங்கள் ஆரோக்கியமாக காணப்படுவீர்கள்.


மீனம் 

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

உங்கள் திறனை அடைவதற்கு குறைந்த வாய்ப்பு காணப்படும். அனைத்து செயல்களையும் திட்டமிட்டு செய்யவும். யதார்த்தமான அணுகுமுறை மேற்கொள்ளவும். பணியில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் பணிகளைக் கவனமாக கையாளவும். நீங்கள் திட்டமிட்டு பணியாற்ற வேண்டியது அவசியம். உங்கள் மனதில் குழப்பம் காணப்படும். அதனை உங்கள் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள். அமைதியைப் பராமரிப்பது நல்லது. பண வரவு காணப்பட்டாலும் இன்று செலவும் எதிர் கொள்ள வேண்டியிருக்கும். அதிர்ஷ்டத்தை இன்று நம்ப வேண்டாம். உங்கள் கடின உழைப்பின் மூலம் பலன் கிடைக்கும். சரியான நேரத்தில் உணவு உண்ணுங்கள். அதிக நீரைப் பருகுங்கள். தலைவலி பாதிப்பு ஏற்படலாம்.