குரு பகவானை அதிபதியாக கொண்ட நட்சத்திரம் – பூரட்டாதி நட்சத்திர பொதுப் பலன்கள்

 

குரு பகவானை அதிபதியாக கொண்ட நட்சத்திரம் – பூரட்டாதி நட்சத்திர பொதுப் பலன்கள்

குரு பகவானை அதிபதியாக கொண்ட நட்சத்திரம் பூரட்டாதி ஆகும்.

குரு பகவானை அதிபதியாக கொண்ட நட்சத்திரம் பூரட்டாதி ஆகும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எப்போதும் தொலைநோக்குச் சிந்தனை அதிகமாக இருக்கும். தன்னிலை தவறாமல் உணர்ச்சிகளை அடக்கி, முதிர்ச்சியாக வெளிப்படுத்தும் திறன் கொண்டவர்கள். எல்லாம் தெரிந்திருந்தாலும் அலட்டிக் கொள்ள மாட்டார்கள். தங்களுடைய கருத்து மட்டுமே சரி என்று வாதம் செய்யாமல், மற்றவர்களின் கருத்துக்கும் மதிப்பு கொடுப்பார்கள். பிறர் நலனில் அக்கறை கொள்பவராக பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இருப்பார்கள். இவர்களிடத்தில் முன்கோபம் இருந்தாலும், குணமும் இருக்கும்.

astrology

எப்போதும் தானுண்டு, தன் வேலையுண்டு என்று இருப்பார்கள். சமூக ஆர்வலராகவும், எல்லா துறையையும் தெரிந்து வைத்திருக்கும் வல்லமை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் குடும்பத்தில் ஆர்வம் இல்லாமல் துறவறம், ஆன்மிகம், தத்துவம் ஆகியவற்றில் ஈடுபாடுள்ளவர் என சிற்றம்பல சேகரம் நூல் கூறுகிறது.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் கொள்கை, கோட்பாடுகளில் இருந்து தவறமாட்டார்கள். தங்கள் சொத்தை யாருக்கும் கொடுக்க மாட்டார்கள். அதேபோல பிறருடைய சொத்துக்கும் ஆசைப்பட மாட்டார்கள். பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் கல்வியாளர், விஞ்ஞானி, பேராசிரியர், ஆசிரியர் ஆகிய பணிகளில் இருப்பார்கள். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறு வயதிலேயே நிறைய அனுபவங்களையும் கசப்புணர்வுகளையும் சந்தித்திருப்பார்கள். அதிகமாக யோசிப்பவர்களாகவும், யாருக்கும் தொந்தரவு தராதவர்களாகவும், சமூகத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவக் கூடியவர்களாகவும் இருப்பார்கள்.