வேலை பளுவால் மனஉளைச்சல்… கண்டுகொள்ளாத கணவன்… விரக்தியில் உயிரைவிட்ட மனைவி!- சென்னையில் சோகம்

சென்னையில் அலுவலக பணி தொடர்பாக கணவர் உதவி செய்ய மறுத்ததால் ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்து புது மணப்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை, விருகம்பாக்கம், ஆற்காட்டில் உள்ள ஜெய்ன் ஆஷ்ர்யா அப்பார்ட்மென்ட்டில் வசித்து வந்தவர் பிரியதர்ஷினி ( 29). இவரது கணவர் ஹரி கணேஷ் (29). அம்பத்துாரில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக உள்ளார். பிரியதர்ஷினி நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இருவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஊட்டியைச் சேர்ந்த இருவரும் சென்னையில் தங்கி பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பிரியதர்ஷினி திடீரென தனது அறையில் துப்பட்டாவில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தகவல் கிடைத்ததும் கேகே நகர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஓமந்தூரார் அரசினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காவல்துறையில் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தற்கொலைக்கான காரணங்கள் தெரியவந்தன. பிரியதர்ஷினி, தற்போது கொரோனா ஊரடங்கு என்பதால் வீட்டில் இருந்தபடியே அலுவலகப் பணிகளை கவனித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு பிரியதர்ஷினி பணிபுரியும்போது கணவர் ஹரிகணேஷிடம் அலுவலக பணி தொடர்பாக உதவி கேட்டதாக தெரியவருகிறது. ஆனால் ஹரிகணேஷ் அதற்கு மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த பிரியதர்சினி தனி அறைக்கு உறங்கச் சென்றார். நேற்று காலை நீண்ட நேரமாகியும் பிரியதர்சினியின் அறை திறக்கப்படாததால் சந்தேகமடைந்த ஹரிகணேஷ் கதவை உடைத்து பார்த்த போது பிரியதர்சினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

மேலும் பிரியதர்ஷினி வேலை பளு காரணமாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும் அதற்காக அவர் சில மாதங்களாக சிகிச்சை எடுத்து வருவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கே.கே.நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி ஒருவருடத்தில் புதுமணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொரோனா காலத்தில் பல தனியார் நிறுவனங்கள் தனது பணியாளர்களை வேலை இருந்து பணி நீக்கம் செய்து வருகிறது. இதனால் வேதனையில் பல பேர் தங்கள் உயிரை மாய்த்து கொண்டு வருகின்றனர். இன்னொரு புறம் அலுவலகம் கொடுக்கும் டார்ச்சரால் இப்படி உயிரிழப்பு ஏற்படுகிறது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

Most Popular

இந்தியாவில் 24 மணிநேரத்தில் 52,509 பேருக்கு கொரோனா : 857 பேர் பலி!

இதுவரை உலகம் முழுவதும் 1 கோடியே 86 லட்சத்து 91 ஆயிரத்து 659 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால் 7 லட்சத்து 03 ஆயிரத்து 371 பேர் பலியாகி...

அயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்ட டெல்லியில் இருந்து புறப்பட்டார் பிரதமர் மோடி

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார். அயோத்தியில் ராமர் கோவில் அடிக்கல்நாட்டு விழா இன்று நடக்கிறது. இதில் மொத்தம் 200 பேருக்கு பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வேறு யாரும்...

கன்னியாகுமரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,533 ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,063பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த...

வேலூரில் மேலும் 206 பேருக்கு கொரோனா : பாதிப்பு எண்ணிக்கை 6,805 ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,063பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த...