காங்கிரஸ் தலைவர் கன்னத்தில் அறை விட்ட போலீஸ் உதவி கமிஷனர்! – மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

 

காங்கிரஸ் தலைவர் கன்னத்தில் அறை விட்ட போலீஸ் உதவி கமிஷனர்! – மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

நடைபாதை கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் மாவட்டத் தலைவர் கன்னத்தில் போலீஸ் உதவி கமிஷனர் அறைந்த விவரகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை அரும்பாக்கம் திருவீதியம்மன் கோவில் அருகே நடைபாதை கடைகள் காரணமாக மழைநீர் வடிகால் அமைக்கும் பணி மேற்கொள்ள முடியாத நிலை இருந்தது. இதனால் கடந்த 6ம் தேதி நடைபாதை கடைகளை அகற்றிவிட்டு, வடிகால் அமைக்கும் பணி நடந்தது. இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் தலைவர் கன்னத்தில் அறை விட்ட போலீஸ் உதவி கமிஷனர்! – மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்


கொரோனா காலத்தில் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த காங்கிரஸ் கட்சியின் சென்னை மேற்கு மாவட்ட தலைவர் வீரபாண்டியன் தலைமையில் காங்கிரசார் எதிர்ப்பு போராட்டத்தில் குதித்தனர். இதைத் தொடர்ந்து வீரபாண்டியனுடன் போலீஸ் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தை பலனளிக்காத நிலையில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் தலைவர் கன்னத்தில் அறை விட்ட போலீஸ் உதவி கமிஷனர்! – மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்


அவர்களை அகற்ற போலீசார் முயற்சி செய்தனர். அப்போது மதுரவாயல் உதவி ஆணையர் ஜெயராமனுக்கும் வீரபாண்டியனுக்கும் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், வீரபாண்டியன் கன்னத்தில் உதவி ஆணையர் ஜெயராமன் அறைந்து சட்டையைப் பிடித்து இழுத்துச் சென்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான செய்தி நாளிதழ்களில் வந்தது. இந்த செய்திகளை அடிப்படையாகக் கொண்டு மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக சென்னை சட்டம் ஒழுங்கு மேற்கு காவல் இணை ஆணையர் இரண்டு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.