உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சி… கொட்டும் மழையிலும் அயராது பணியாற்றிய உதவி கமிஷனர்!

 

உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சி… கொட்டும் மழையிலும் அயராது பணியாற்றிய உதவி கமிஷனர்!

கனமழையும் பொருட்படுத்தாமல் மழையில் நனைந்தபடியே உதவி கமிஷனர் சத்தியமூர்த்தி டிராபிக்கை சரி செய்தது மக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளது.

தமிழகம் மழைக்காலம் தொடங்கிவிட்டாலே டிராபிக் போலீசாரின் பாடு திண்டாட்டம் தான். விபத்துகளை தடுப்பதற்காக மழையில் நனைந்தபடி டிராபிக் போலீசார் அயராது பணியாற்றும் பல வீடியோக்கள் வைரலாகி இருக்கின்றன. அந்த வகையில், ஆவடி சட்டம்- ஒழுங்கு உதவி கமிஷனர் சத்தியமூர்த்தி கொட்டும் மழையிலும் மக்களுக்காக பணியாற்றியது கவனத்தை ஈர்த்துள்ளது.

உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சி… கொட்டும் மழையிலும் அயராது பணியாற்றிய உதவி கமிஷனர்!

அவடி ஜேபி எஸ்டேட் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் நேற்று மாலை வருகை தந்தார். இதனால் அங்கு கூட்டம் அதிகமாக இருந்த நிலையில் ஆவடி பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதுமட்டுமில்லாமல் அங்கு மழைநீர் கால்வாய் அமைக்கும் பணியும் நடைபெறுவதால் வாகனங்கள் எதிரும் புதிருமாக சென்றுகொண்டிருந்தன. விபத்தை தடுக்க கனமழையும் பொருட்படுத்தாமல் சத்தியமூர்த்தி மழையில் நனைந்தபடியே டிராஃபிக்கை சரி செய்தார்.

இதைக்கண்டு நெகிழ்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் சிலர் உதவி கமிஷனர் சத்தியமூர்த்தியின் அயராத பணியை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ட்ராபிக்கை சரி செய்யும் போது சத்தியமூர்த்தியின் செல்போன் சேதமடைந்ததோடு அவரது கைக்கடிகாரம் காணாமல் போனது என்பது குறிப்பிடத்தக்கது.