பாலாசாகேப் தாக்கரேயின் தகுதியற்ற மகன்… உத்தவ் தாக்கரேவை சாடிய அசாம் அமைச்சர்

 

பாலாசாகேப் தாக்கரேயின் தகுதியற்ற மகன்… உத்தவ் தாக்கரேவை சாடிய அசாம் அமைச்சர்

பாலாசாகேப் தாக்கரேயின் தகுதியற்ற மகன் என்று அர்னாப் கோஸ்வாமி கைது விவகாரத்தில் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவை அசாம் அமைச்சர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

2 ஆண்டுகளுக்கு முந்தைய தற்கொலைக்கு தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில், ரிபப்ளிக் சேனலின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை நேற்று காலை மும்பை போலீசார் அவரது வீட்டுக்கு சென்று அதிரடியாக கைது செய்தனர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் குறிப்பாக பா.ஜ.க. தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், ஊடக சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என்று தெரிவித்தார்.

பாலாசாகேப் தாக்கரேயின் தகுதியற்ற மகன்… உத்தவ் தாக்கரேவை சாடிய அசாம் அமைச்சர்
ஹிமாந்த பிஸ்வா சர்மா

அர்னாப் கோஸ்வாமி கைது விவகாரத்தில், சிவ சேனாவின் நிறுவனர் பால் தாக்கரே மகனும், மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவை அசாம் அமைச்சர் ஹிமாந்த பிஸ்வா சர்மா கடுமையாக விமர்சனம் செய்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: உத்தவ் தாக்கரே தேசத்தின் நம்பிக்கைக்கு துரோகம் செய்து விட்டார். அவர் பாலாசாகேப் தாக்கரேவையின் முழு தகுதியற்ற மகன்.

பாலாசாகேப் தாக்கரேயின் தகுதியற்ற மகன்… உத்தவ் தாக்கரேவை சாடிய அசாம் அமைச்சர்
பரம் பிர் சிங்

அவர் தனது மறைந்த தந்தை (பால் தாக்கரே), மகாராஷ்டிரா மற்றும் நாட்டுக்கும் அவதூறு கொண்டு வந்துள்ளார்.மும்பை போலீஸ் கமிஷனர் பரம் பிர் சிங் ஒரு வலுவான அதிகாரி என்ற நான் கேள்விப்பட்டேன். ஆனால் அர்னாப் கோஸ்வாமியை கைது செய்த அவர் ஏ.கே. 47 உடன் காவலரை நியமிக்க வேண்டியிருந்தது. அதாவது அவர் முழு இந்தியாவிலும் மிகவும் கோழைத்தனமான அதிகாரி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.