அரசு நிதியுதவி பெறும் மதரஸாக்களை பொது கல்வி நிறுவனங்களாக மாற்ற மசோதா தாக்கல் செய்த பா.ஜ.க. அரசு

 

அரசு நிதியுதவி பெறும் மதரஸாக்களை பொது கல்வி நிறுவனங்களாக மாற்ற மசோதா தாக்கல் செய்த பா.ஜ.க. அரசு

அசாம் சட்டப்பேரவையில், அசாம் திரும்ப பெறும் மசோதாவை (2000) பா.ஜ.க. அரசு தாக்கல் செய்தது. இது அரசின் நிதியுதவி பெறும் அனைத்து மதரஸாக்களும் பொதுக் கல்வி நிறுவனங்களாக மாற்ற வழி செய்யும்.

அசாமில் முதல்வர் சர்பானந்தா சோனாவால் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. அரசு பணத்தில் மத கல்வியை அனுமதிக்க முடியாது ஆகையால் அரசு நடத்தும் அனைத்து மதரஸாக்களையும் மூட உள்ளதாக கடந்த அக்டோபர் மாதத்தில் அம்மாநில அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறியிருந்தார். தற்போது அதனை செயலிலும் காட்டி விட்டது பா.ஜ.க. அரசு. அசாம் சட்டப்பேரவையின் 3 நாள் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.

அரசு நிதியுதவி பெறும் மதரஸாக்களை பொது கல்வி நிறுவனங்களாக மாற்ற மசோதா தாக்கல் செய்த பா.ஜ.க. அரசு
ஹிமந்தா பிஸ்வா சர்மா

அசாம் சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று அம்மாநில கல்வித் துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, அசாம் திரும்ப பெறும் மசோதாவை (2000) சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதா தற்போது நடப்பில் உள்ள அசாம் மதரஸா கல்வி சட்டம் 1995, அசாம் மதரஸா கல்வி சட்டம் 2018 ஆகிய இரண்டு சட்டங்களையும் ரத்து செய்ய முன்மொழிகிறது. இந்த மதோசா தொடர்பாக ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறியதாவது: நாங்கள் ஒரு மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளோம்.

அரசு நிதியுதவி பெறும் மதரஸாக்களை பொது கல்வி நிறுவனங்களாக மாற்ற மசோதா தாக்கல் செய்த பா.ஜ.க. அரசு
மதரஸா மாணவர்கள்

இதன்மூலம் அரசு நடத்தும் அனைத்து மதரஸாக்களும் பொதுக் கல்வி நிறுவனங்களாக மாற்றப்படும். எதிர்காலத்தில் மாநில அரசு எந்த மதரஸாவையும் நிறுவாது (தொடங்காது). கல்வி முறையில் உண்மையான மதச்சார்பற்ற பாடத்திட்டத்தை கொண்டு வருவதற்காக இந்த மசோதாவை அறிமுகப்படுத்தியதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த மசோதாவை காங்கிரசும், அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியும் எதிர்த்தன. ஆனால் இந்த மசோதா நிறைவேற்றப்பட வேண்டும். அது நிறைவேற்றப்படும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.