கை கொடுத்த சிக்கன நடவடிக்கை…. ஏசியன் பெயிண்ட் லாபம் ரூ.852 கோடி….

 

கை கொடுத்த சிக்கன நடவடிக்கை…. ஏசியன் பெயிண்ட் லாபம் ரூ.852 கோடி….

ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் 2020 செப்டம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.851.90 கோடி ஈட்டியுள்ளது.

அலங்கார வர்த்தக துறையை சேர்ந்த ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் கடந்த செப்டம்பர் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. அந்நிறுவனம் 2020 செப்டம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.851.90 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 1.2 சதவீதம் குறைவாகும்.

கை கொடுத்த சிக்கன நடவடிக்கை…. ஏசியன் பெயிண்ட் லாபம் ரூ.852 கோடி….
ஏசியன் பெயிண்ட்ஸ்

2020 செப்டம்பர் காலாண்டில் ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் வருவாய் ரூ.5,350.2 கோடியாக சரிவடைந்துள்ளது. இது 2019 செப்டம்பர் காலாண்டைக் காட்டிலும் 5.9 சதவீதம் அதிகமாகும். ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் கடந்த செப்டம்பர் காலாண்டில் வரி செலவினமாக ரூ.293.60 கோடி மேற்கொண்டுள்ளது. 2019 செப்டம்பர் காலாண்டில் ரூ.7.2 கோடி மட்டுமே வரி செலவினமாக மேற்கொண்டு இருந்தது.

கை கொடுத்த சிக்கன நடவடிக்கை…. ஏசியன் பெயிண்ட் லாபம் ரூ.852 கோடி….
ஏசியன் பெயிண்ட்ஸ்

ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குனருமான அமித் சிங்கிள் நிறுவனத்தின் நிதி நிலை முடிவு குறித்து கூறுகையில், சிறந்த தயாரிப்பு கலவை, மூலப்பொருள் விலை நிலையாக இருந்தது, அன்னிய செலாவணி விகிதம் சாதகமாக இருந்தது, நிர்வாகத்தால் செயல்படுத்தப்பட்ட அதிக அளவிலான செலவு கட்டுப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளால் வணிகங்கள் முழுவதும் லாபம் ஈட்டப்படுகிறது என தெரிவித்தார்.