எல்லோரும் இந்த நாளுக்காக ஆவலுடன் காத்திருந்தனர்.. ஏழைகளுக்கு இலவசமாக கொடுங்க.. இதுவும் காங்கிரஸ்தான்

எல்லோரும் இந்த நாளுக்காக ஆவலுடன் காத்திருந்தனர்.. ஏழைகளுக்கு இலவசமாக கொடுங்க.. இதுவும் காங்கிரஸ்தான்

கொரோனா வைரஸ் தடுப்பூசி தொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் மாறுப்பட்ட கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டது குறித்து பேசுகையில், எல்லோரும் இந்த நாளுக்காக ஆவலுடன் காத்திருந்தனர். இறுதியாக தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தது. அனைவருக்கும் தடுப்பூசி போட ஒன்று முதல் ஒன்றரை ஆண்டு வரை ஆகும். அதுவரை கோவிட் தொடர்பான நெறிமுறைகளை நாம் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.

எல்லோரும் இந்த நாளுக்காக ஆவலுடன் காத்திருந்தனர்.. ஏழைகளுக்கு இலவசமாக கொடுங்க.. இதுவும் காங்கிரஸ்தான்
பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்

பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் நேற்று முன்தினம் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், பஞ்சாப் மாநில ஏழை மக்களுக்கு இலவசமாக கோவிட்-19 தடுப்பூசி வழங்கக்கோரியிருந்தார். மேலும், 2.04 லட்சம் டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசி கிடைத்ததை குறிப்பிட்டு, மாநிலத்தில் உள்ள மாநில மற்றும் மத்திய அரசின் சுகாதாரப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி கிடைக்க செய்ததற்கு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து இருந்தார்.

எல்லோரும் இந்த நாளுக்காக ஆவலுடன் காத்திருந்தனர்.. ஏழைகளுக்கு இலவசமாக கொடுங்க.. இதுவும் காங்கிரஸ்தான்
மனிஷ் திவாரி

காங்கிரஸ் முதல்வர்கள் கோவிட்-19 தடுப்பூசி தொடர்பாக நேர்மறையாக பேச, மறுபக்கம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மனிஷ் திவாரி, தடுப்பூசி நம்பகமானது, பாதுகாப்பானது மற்றம் அதன் செயல்திறன் கேள்விக்கு அப்பாற்றப்பட்டது என்றால் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆட்சியாளர்கள் யாரும் ஏன் முன்வரவில்லை என்று கேள்வி எழுப்பி இருந்தார். மேலும் டிவிட்டரில், நார்வேயில் பைசர் தடுப்பூசியை போட்டு கொண்ட 23 முதியவர்கள் இறந்த செய்தி தொடர்பான லிங்கை பதிவிட்டு, நான் வெளிப்படுத்திய கவலைகள் உண்மையானவை மற்றும் கற்பனை செய்யப்படவில்லை என்று மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு பதில் கொடுத்து இருந்தார்.