நாங்க காங்கிரஸ்காரங்க. இருந்தாலும் என் மகளுக்கு பாதுகாப்பு கொடுத்த மோடி, அமித் ஷாவுக்கு நன்றி..கங்கனா தாயார்

நாங்க காங்கிரஸ்காரங்க. இருந்தாலும் என் மகளுக்கு பாதுகாப்பு கொடுத்த மோடி, அமித் ஷாவுக்கு நன்றி..கங்கனா தாயார்

நாங்க காங்கிரசில் உள்ளபோதிலும், என் மகளுக்கு பாதுகாப்பு கொடுத்த மோடி மற்றும் அமித் ஷாவுக்கு நன்றி என நடிகை கங்கனா ரனாவத் தாயார் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் மும்பையை பாகிஸ்தான் ஆதரவு காஷ்மீரோடு ஒப்பிட்டு பேசியதோடு, மகாராஷ்டிரா போலீசாரையும் விமர்சனம் செய்தார். இதனையடுத்து சிவ சேனாவும், மகாராஷ்டிரா அரசும் கங்கனாவை கடுமையாக விமர்சனம் செய்தனர். மேலும் மும்பைக்கு திரும்ப வரக்கூடாது என்பது உள்பட கங்கனா ரனாவத்துக்கு வெளிப்படையாக அச்சுறுத்தல்கள் விடப்பட்டன. இதனையடுத்து மத்திய அரசு கங்கனா ரனாவத்துக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கியது.

நாங்க காங்கிரஸ்காரங்க. இருந்தாலும் என் மகளுக்கு பாதுகாப்பு கொடுத்த மோடி, அமித் ஷாவுக்கு நன்றி..கங்கனா தாயார்
ஆஷா ரனாவத்

தனது மகளுக்கு மத்திய அரசு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கியதற்கு பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நடிகை கங்கனா ரனாவத்தின் தாயார் ஆஷா ரனாவத் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மகாராஷ்டிரா அரசு செய்தது கண்டிக்கத்தக்கது. சொற்களின் கடுமையான வார்த்தைகளில் நான் அதை கண்டிக்கிறேன். முழு இந்தியாவும் என் மகளோடு நிற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்., மக்களின் ஆசிர்வாதம் அவளுடன் இருக்கிறது. நான் அவளைப் பற்றி பெருமைப்படுகிறேன்.

நாங்க காங்கிரஸ்காரங்க. இருந்தாலும் என் மகளுக்கு பாதுகாப்பு கொடுத்த மோடி, அமித் ஷாவுக்கு நன்றி..கங்கனா தாயார்
பிரதமர் மோடி

அவள் எப்போதும் சத்தியத்துடன் நின்றாள் அதை தொடர்ந்து செய்வாள். அவளுக்கு பாதுகாப்பு வழங்கிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நன்றி கூறுகிறேன். அவளுக்கு பாதுகாப்பு வழங்கவில்லை என்றால், அவளுக்கு என்ன நேர்ந்திருக்கும் என்று யாருக்கும் தெரியாது. நாங்கள் காங்கிரசில் உள்ளபோதிலும், என்னுடைய மாமனாரும் (கங்கனாவின் தாத்தா) காங்கிரசில் இருந்தபோதும் எங்களுக்கு அமித் ஷாவின் ஆதரவு கிடைத்தது. நானும் மோடிஜிக்கு நன்றி கூறுகிறேன் என தெரிவித்தார்.