பீகார் வெற்றி கொடுத்த தெம்பு… அடுத்து மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலிலும் போட்டி… அசாதுதீன் ஓவைசி அதிரடி

 

பீகார் வெற்றி கொடுத்த தெம்பு… அடுத்து மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலிலும் போட்டி… அசாதுதீன் ஓவைசி அதிரடி

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் 5 தொகுதிகளில் வெற்றி கொடுத்த தெம்பில், அடுத்து மேற்கு வங்கம், உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தல்களிலும் போட்டியிட இருப்பதாக ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்தார்.

அசாதுதீன் ஓவைசி தலைமையிலான ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி பீகார் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட போவதாக தெரிவித்த உடனேயே, பா.ஜ.க.வுக்கு எதிரான சிறுபான்மையினர் (இஸ்லாமியர்கள்) வாக்குகளை பிரிக்கவே அந்த கட்சி போட்டியிடுகிறது என்று விமர்சிக்கப்பட்டது. மேலும், பா.ஜ.க.வின் உத்தரவுப்படி அசாதுதீன் ஓவைசி கட்சி பீகார் தேர்தலில் போட்டியிடுகிறது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

பீகார் வெற்றி கொடுத்த தெம்பு… அடுத்து மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலிலும் போட்டி… அசாதுதீன் ஓவைசி அதிரடி
அசாதுதீன் ஓவைசி

ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி, முன்னாள் மத்திய அமைச்சர் தேவேந்திர பிரசாத் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி ஜனதா தளம், சமாஜ்வாடி மற்றும் ஜன்வாடி உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து பீகார் சட்டப்பேரவை தேர்தலில் களம் இறங்கியது. முஸ்லீம்கள் அதிகம் உள்ள சீமான்சல் பகுதி சட்டப்பேரவை தொகுதிகளில் ஏ.ஐ.எம்.ஏ.எம். கட்சி வேட்பாளர்களை நிறுத்தியது. 5 தொகுதிகளில் வெற்றியும் பெற்றது. ஏ.ஐ.எம்.ஏ.எம். கட்சி தேர்தலில் போட்டியிட்டது மெகா கூட்டணிக்கு பாதகமாகவும், பா.ஜ.க. கூட்டணிக்கு சாதகமாகவும் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது.

பீகார் வெற்றி கொடுத்த தெம்பு… அடுத்து மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலிலும் போட்டி… அசாதுதீன் ஓவைசி அதிரடி
காங்கிரஸ்

இந்த சூழ்நிலையில் ஏ.ஐ.எம்.ஏ.எம். கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி செய்தியாளர்கள் சந்தித்து பேசினார். அப்போது ஏ.ஐ.எம்.ஏ.எம். கட்சி வேறு எந்த மாநிலங்களிலும் போட்டியிடுமா என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு ஓவைசி, சொந்தமாக போட்டியிட உரிமை உள்ள ஒரு அரசியல் கட்சியை நடத்தி வருகிறேன். நாங்கள் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று நீங்கள் சொல்கிறீர்கள். நீங்கள் (காங்கிரஸ்) சென்று சிவ சேனாவின் மடியில் (மகாராஷ்டிராவில்) அமர்ந்தீர்கள். நீங்கள் ஏன் போட்டியிடுகிறீர்கள் என்று யாராவது கேட்டால். நான் மேற்கு வங்கம், உத்தர பிரதேசத்திலும் போட்டியிடுவேன். நாட்டில் ஒவ்வொரு தேர்தலிலும் போட்டியிடுவேன். தேர்தலில் போட்டியிட நான் யாரிடமும் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை என்று பதிலளித்தார்.