ஒரு சமூகம் மட்டுமே அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்ற பொய்யின் அடிப்படையில் இந்துத்துவா கட்டமைக்கப்பட்டுள்ளது… ஓவைசி

ஒரு சமூகம் மட்டுமே அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்ற பொய்யின் அடிப்படையில் இந்துத்துவா கட்டமைக்கப்பட்டுள்ளது… ஓவைசி

ஒரு சமூகத்துக்கு மட்டுமே அனைத்து அரசியல் அதிகாரமும் இருக்க வேண்டும் என்ற பொய்யின் அடிப்படையில் இந்துத்துவாக கட்டமைக்கப்பட்டுள்ளது என்று அசாதுதீன் ஓவைசி கருத்து தெரிவித்துள்ளார்.

அனைத்து இந்திய மஜிஸ் இ இத்தேஹாதுல் முஸ்லீமின் (AIMIM) கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி, மனதில் பட்ட கருத்துக்களை வெளிப்படையாக சொல்லும் அரசியல்வாதிகளில் ஒருவர் ஓவைசி. கடந்த சில தினங்களுக்கு முன் ஆன்லைன் ஊடகம் ஒன்றில், பா.ஜ.க. ஓவைசியை விரும்பவில்லை, பா.ஜ.க.வுக்கு ஓவைசி அவசியம் இல்லை என்று தலைப்பில் ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது.

ஒரு சமூகம் மட்டுமே அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்ற பொய்யின் அடிப்படையில் இந்துத்துவா கட்டமைக்கப்பட்டுள்ளது… ஓவைசி
பா.ஜ.க.

அந்த கட்டுரை தொடர்பாக ஓவைசி டிவிட்டரில், ஒரு சமூகத்துக்கு மட்டுமே அனைத்து அரசியல் அதிகாரமும் இருக்க வேண்டும் என்ற பொய்யின் அடிப்படையில் இந்துத்துவா கட்டமைக்கப்பட்டுள்ளது. அரசியலில் முஸ்லிம்கள் பங்கேற்க எந்த உரிமையும் இருக்கக் கூடாது. நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் நாங்கள் இருப்பது இந்துத்துவா சங்கத்துக்கு எதிரான செயலாகும். நாம் ஒரு நாள் இருப்பதை நிறுத்தி விட்டால் கொண்டாடப்படும் என்று பதிவு செய்து இருந்தார்.

ஒரு சமூகம் மட்டுமே அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்ற பொய்யின் அடிப்படையில் இந்துத்துவா கட்டமைக்கப்பட்டுள்ளது… ஓவைசி
திக்விஜய சிங்

அண்மையில் நடந்து முடிந்த பீகார் சட்டப்பேரவை தேர்தலில் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது. முன்னதாக, அசாதுதீன் ஓவைசி தலைமையிலான ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி பீகார் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட போவதாக தெரிவித்த உடனேயே, பா.ஜ.க.வுக்கு எதிரான சிறுபான்மையினர் (இஸ்லாமியர்கள்) வாக்குகளை பிரிக்கவே அந்த கட்சி போட்டியிடுகிறது என்று விமர்சிக்கப்பட்டது. மேலும், பா.ஜ.க.வின் உத்தரவுப்படி அசாதுதீன் ஓவைசி கட்சி பீகார் தேர்தலில் போட்டியிடுகிறது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய சிங் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.