இந்திய எல்லைக்குள் சீன ராணுவம்… அதை ஒப்புக்கொள்ள அரசுக்கு ஏன் தைரியம் இல்லை?… ஓவைசி தாக்கு…

 

இந்திய எல்லைக்குள் சீன ராணுவம்… அதை ஒப்புக்கொள்ள அரசுக்கு ஏன் தைரியம் இல்லை?… ஓவைசி தாக்கு…

செய்திதாள்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பாதுகாப்பு நிபுணர்கள் இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் உள்ளதாக கூறுகின்றனர் ஆனால் அதை ஒப்புக்கொள்ள மத்திய அரசுக்கு ஏன் தைரியம் இல்லை என அசாதுதீன் ஒவைசி கேள்வி எழுப்பினார்.

இந்திய, சீனா பாதுகாப்பு அமைச்சர்கள் சந்தித்து பேசியதாக மத்திய அரசு ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தது. அது தொடர்பாக ஏ.ஐ.எம்.ஐ.எம்.ஐ. கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறியதாவது: எட்டு மணி நேரம் கழித்து இந்த அறிக்கை வெளியாகி உள்ளது, ஆனால் உண்மை என்னவென்றால் இந்தியாவின் உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ஆக்கிரமித்த ஆயிரம் சதுர கி.மீட்டர் பகுதியிலிருந்து சீன ராணுவம் வெளியேற போகிறார்கள் என்பதுதான் விஷயம். ஆனால் அது குறித்து தெளிவு இல்லை.

இந்திய எல்லைக்குள் சீன ராணுவம்… அதை ஒப்புக்கொள்ள அரசுக்கு ஏன் தைரியம் இல்லை?… ஓவைசி தாக்கு…
அசாதுதீன் ஓவைசி

1962 முதல் இது மிகவும் கடுமையான பிரச்சினை என வெளியுறவு செயலர் மற்றும் வெளியுறவு அமைச்சகம் பதிவு செய்துள்ளனர். இந்தியாவின் உண்மையான எல்லை கட்டுப்பாட்டு பகுதிக்குள் சீனர்கள் உள்ளதை இது தெளிவாக காட்டுகிறது. இந்திய பிராந்தியத்தின் உள்ளே சீன மக்கள் விடுதலை ராணுவத்தினர் அமர்ந்துள்ளனர். சீன ஊடுருவல் பிரச்சினை தொடர்பாக எதிர்க்கட்சியின் கருத்தை விவாதிக்க மையம் விரும்பவில்லை என்பது கவலைக்குரியது.

இந்திய எல்லைக்குள் சீன ராணுவம்… அதை ஒப்புக்கொள்ள அரசுக்கு ஏன் தைரியம் இல்லை?… ஓவைசி தாக்கு…
இந்திய, சீன பாதுகாப்பு அமைச்சர்கள் சந்திப்பு

சீன மக்கள் விடுதலை ராணுவத்தினர் இந்திய எல்லைக்குள் அமர்ந்துள்ளனர் என ஒவ்வொரு செய்திதாள்கள், பத்திரிகையாளர்கள், ஒவ்வொரு பாதுகாப்பு நிபுணர்களும் கூறுகின்றனர். இதனை ஒப்புக்கொள்ள இந்த அரசுக்கு ஏன் தைரியம் இல்லை?. இது, சீன மக்கள் விடுதலை ராணுவம் இந்தியாவின் உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிக்குள் உள்ளது என்பதை தெளிவாக காட்டுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.