தேர்தலுக்காக மற்ற கட்சி வேட்பாளர்களை விலைக்கு வாங்கும் ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ்.. அசாதுதீன் ஓவைசி ஆவேசம்

தேர்தலுக்காக மற்ற கட்சி வேட்பாளர்களை விலைக்கு வாங்கும் ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ்.. அசாதுதீன் ஓவைசி ஆவேசம்

ஆந்திரா நகராட்சி தேர்தலுக்காக மற்ற கட்சி வேட்பாளர்களை விலைக்கு வாங்குகிறது என்று ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸை அசாதுதீன் ஓவைசி குற்றம் சாட்டினார்.

எதிர்வரும் நகராட்சி தேர்தலுக்காக கர்னூல் மாவட்டத்தின் அடோனி நகரில் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது: நகராட்சி தேர்தலுக்காக மற்ற கட்சி வேட்பாளர்களை ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் விலைக்கு வாங்குகிறது. ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தனது சொந்த வேட்பாளர்களுக்கு ஆதரவாக காவல்துறை தவறாக பயன்படுத்துகிறது.

தேர்தலுக்காக மற்ற கட்சி வேட்பாளர்களை விலைக்கு வாங்கும் ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ்.. அசாதுதீன் ஓவைசி ஆவேசம்
ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ்

எனது கட்சி வேட்பாளர்களை விலைக்கு வாங்க முடியாது. மத்திய அரசின் நிதியுடன் சிறுபான்மையினருக்கான ஐ.டி.ஐ. கல்லூரி கட்டப்பட்டது. ஆனால் மாநில அரசு இன்னும் வகுப்புகளை தொடங்கவில்லை. அடோனி நகரில் ஒரு ஈட்காவை இடிக்கவும் மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இந்த முடிவை மாநில அரசு திரும்பபெற வேண்டும். ஜமா மசூதி நிலத்தை பார்க்கிங் பகுதியாக மாற்ற மாநில அரசு முயற்சி செய்கிறது.

தேர்தலுக்காக மற்ற கட்சி வேட்பாளர்களை விலைக்கு வாங்கும் ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ்.. அசாதுதீன் ஓவைசி ஆவேசம்
ஏ.ஐ.எம்.ஐ.எம்.

2019ம் ஆண்டில் உருது கல்லூரி மற்றும் பள்ளி கட்டிட கட்டுமானம் தொடங்கப்பட்டது. அவற்றை விரைவாக முடிக்க வேண்டும். ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசு மாநிலத்தில் முஸ்லிம்களுக்கான 4 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தவில்லை. இந்த எல்லாவற்றையும் அடைய ஏ.ஐ.எம்.ஐ.எம். ஆட்சிக்கு வர வேண்டும். 2019 மக்களவை தேர்தல் மற்றம் ஆந்திர பிரதேச சட்டப்பேரவை தேர்தல்களில் ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸை ஏ.ஐ.எம்.ஐ.எம். ஆதரித்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.