இந்திய எல்லைக்குள் சீன ஆக்கிரமிப்பு குறித்து பிரதமர் ஏன் அமைதியாக இருக்கிறார்?… அசாதுதீன் ஓவைசி கேள்வி

இந்திய எல்லைக்குள் சீன ஆக்கிரமிப்பு குறித்து பிரதமர் ஏன் அமைதியாக இருக்கிறார்?… அசாதுதீன் ஓவைசி கேள்வி

இந்தியாவின் எல்லைக்குள் சீன ஆக்கிரமிப்பு செய்வது தொடர்பாக பிரதமர் ஏன் அமைதியாக இருக்கிறார்? என்று அசாதுதீன் ஓவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.

அருணாச்சல பிரசேதத்தில் இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் கிராமங்களை கட்டமைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. தற்போது நாடாளுமன்ற உறுப்பினரும், ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவருமான அசாதுதீன் ஓவைசியும் இந்த விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய எல்லைக்குள் சீன ஆக்கிரமிப்பு குறித்து பிரதமர் ஏன் அமைதியாக இருக்கிறார்?… அசாதுதீன் ஓவைசி கேள்வி
பிரதமர் மோடி

அசாதுதீன் ஓவைசி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: அருணாச்சல பிரதேசம், லடாக் மற்றும் சிக்கிமில் நமது எல்லையில் சீன மக்கள் விடுதலை ராணுவம் தொடர்ந்து ஆக்கிரமித்து வருகிறது. அருணாச்சல பிரதேசத்தில், சீன ராணுவம் உருவாக்கி வரும் கிராமம் இந்திய எல்லைக்குள் வருகிறது ஆனால் சீனா அங்கு நிரந்தர கட்டுமானங்களை கட்டுகிறது.

இந்திய எல்லைக்குள் சீன ஆக்கிரமிப்பு குறித்து பிரதமர் ஏன் அமைதியாக இருக்கிறார்?… அசாதுதீன் ஓவைசி கேள்வி
சீனா உருவாக்கி வரும் கிராமம்

இந்திய எல்லைக்குள் சீன ஆக்கிரமிப்பு செய்வது தொடர்பாக பிரதமர் ஏன் அமைதியாக இருக்கிறார்?. இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னதாக நேற்று ராகுல் காந்தி இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியின் பெயரை குறிப்பிடாமல் டிவிட்டரில், அவர் கொடுத்த வாக்குறுதியை நினைவில் கொள்ளுங்கள். யார் முன்னும் நாட்டை தலை குனிய விடமாட்டேன் என்று பதிவு பதிவு செய்து இருந்தார். மேலும், சீன ராணுவம் உருவாக்கி வரும் கிராமம் தொடர்பாக வெளியான செய்தியையும் அதனுடன் பதிவேற்றம் செய்து இருந்தார்.