கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவத்தை வெளியேற்ற போர் அறிவிக்கப்பட்டுள்ளதா? அசாதுதீன் ஓவைசி

கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவத்தை வெளியேற்ற போர் அறிவிக்கப்பட்டுள்ளதா? அசாதுதீன் ஓவைசி

நம் நாட்டை கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸ் படாதப்பாடு படுத்தி வருகிறது மறுபுறம் எல்லையில் சீன ராணுவம் குடைச்சல் கொடுத்து வருகிறது. இந்த சூழ்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில், கொரோனா வைரஸ் மற்றும் கிழக்கு லடாக்கின் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் நிலவும் பதற்றம் ஆகிய இரண்டு யுத்தத்திலும் இந்தியா வெற்றி பெறும் என தெரிவித்தார்.

கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவத்தை வெளியேற்ற போர் அறிவிக்கப்பட்டுள்ளதா? அசாதுதீன் ஓவைசி

அனைத்து இந்திய மஜிஸ் இ இத்தேஹாதுல் முஸ்லீமின் (AIMIM) கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி, அமித் ஷாவின் பேட்டியை குறிப்பிட்டு, கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவத்தை வெளியேற்ற போர் அறிவிக்கப்பட்டுள்ளதா? டிவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அசாதுதீன் ஓவைசி டிவிட்டரில், கல்வான் பள்ளத்தாக்கு, ஹாட் ஸ்பிரிங்ஸ், டெப்சாங், பாங்காங் த்சோ ஆகியவற்றிலிருந்து மக்கள் சுதந்திர ராணுவத்தை வெளியேற்ற போர் அறிவிக்கப்பட்டுள்ளதா? என அமித் ஷாவிடம் கேள்வி கேட்டுள்ளார்.

கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவத்தை வெளியேற்ற போர் அறிவிக்கப்பட்டுள்ளதா? அசாதுதீன் ஓவைசி

லடாக்கின் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் சீனாவுடனான மோதல் மற்றும் இந்திய பகுதியில் சீன ஊடுருவல் குற்றச்சாட்டுகள் குறித்து எதிர்க்கட்சிகள் அரசாங்கத்திடம் கடுமையான கேள்விகளை எழுப்பி வருகின்றன. மேலும் பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும் வலியுறுத்தி வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடி நேற்று மனதிலிருந்து பேசுகிறேன் நிகழ்ச்சியில், நம் நாட்டுடன் யாரும் மோத முடியாது. நமது எல்லைகள் காக்கப்படும் லடாக் எல்லையில் சரியான பதிலடியை கொடுத்திருக்கிறோம் என பேசியது குறிப்பிடத்தக்கது.