என் திட்டத்தை தெரிந்ததால்தான் என்னை வீட்டை விட்டு போலீசார் வெளியே விடவில்லை.. அரவிந்த் கெஜ்ரிவால்

என் திட்டத்தை தெரிந்ததால்தான் என்னை வீட்டை விட்டு போலீசார் வெளியே விடவில்லை.. அரவிந்த் கெஜ்ரிவால்

விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க எல்லைக்கு செல்ல நான் திட்டமிட்டு இருந்ததே போலீசார் தெரிந்து கொண்டதால்தான் என்னை வீட்டை விட்டு வெளியே விடவில்லை என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

டெல்லி போலீசார் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை நேற்று முன்தினம் மாலை முதல் வீட்டு காவலில் வைத்திருப்பதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியது. மேலும் நேற்று காலை முதல் மாலை வரை ஆம் ஆத்மி தலைவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவியது. டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியாவை முதல்வர் வீட்டுக்குள் போலீசார் அனுமதி அளித்ததையடுத்து மோதல் போக்கு முடிவுக்கு வந்தது.

என் திட்டத்தை தெரிந்ததால்தான் என்னை வீட்டை விட்டு போலீசார் வெளியே விடவில்லை.. அரவிந்த் கெஜ்ரிவால்
மனிஷ் சிசோடியா

அதன் பிறகு வீட்டை வெளியே வந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், விவசாயிகளுடான எனது ஒற்றுமையை வெளிப்படுத்த நான் இன்று (நேற்று) முதல்வராக அல்லாமல், ஒரு சாமானிய மனிதனாக எல்லைக்கு செல்ல திட்டமிட்டு இருந்தேன். எனது திட்டத்தை அவர்கள் (டெல்லி போலீசார்) எப்படியோ அறிந்தார்கள். அதனால்தான் என்னை வீட்டை விட்டு வெளியெ விடவில்லை என்று நான் நினைக்கிறேன் என்று தெரிவித்தார்.

என் திட்டத்தை தெரிந்ததால்தான் என்னை வீட்டை விட்டு போலீசார் வெளியே விடவில்லை.. அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

அதேசமயம் டெல்லி முதல்வர் வீட்டு காவலில் வைக்கப்பட்டார் என்று குற்றச்சாட்டை டெல்லி போலீசார் மறுத்துள்ளனர். டெல்லி வடக்கு டி.சி.பி. அன்டோ அல்போன்ஸ் கூறுகையில், முதல்வர் கெஜ்ரிவாலின் வீட்டுக்கு வெளியே காணப்படுவது வழக்கமான பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டது ஆகும். அவர்கள் யாரும் உள்ளே அனுமதிக்க வேண்டும் என்று சொன்னால் நாங்கள் அனுமதிப்போம் என்று தெரிவித்தார்.