சிதம்பரம் நடராஜர் கோயிலில் டிச.30 ல் ஆருத்ரா தரிசனம்!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் டிச.30 ல் ஆருத்ரா தரிசனம்!

சிதம்பரம் நடராஜர் கோவிலில் 30 ஆம் தேதி ஆருத்ரா தரிசனம் நடைபெறவுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் டிச.30 ல் ஆருத்ரா தரிசனம்!

புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சனம் மற்றும் ஆருத்ரா திருவிழா இரண்டும் வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு கொரோனா காரணமாக ஆருத்ரா தரிசனம் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. இருப்பினும் பல பிரசித்தி பெற்ற ஸ்தலங்களில் கோயில் வளாகத்தில் பக்தர்கள் இன்றி கோயில் விழாக்கள் நடைபெற்று வந்தது.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் டிச.30 ல் ஆருத்ரா தரிசனம்!

இந்நிலையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா டிசம்பர் 21 ஆம் தேதி தொடங்கி 31 ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறவுள்ளது. நடராஜர் கோயிலில் தேரோட்டம் 29 ஆம் தேதியும், 30 ஆம் தேதி ஆருத்ரா தரிசனமும் நடைபெறவுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. வரும் 30-ந்தேதி அதிகாலை ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜருக்கு மகா அபிஷேகமும், திருவாபரண அலங்காரமும், மதியம் 3 மணி அளவில் ஆருத்ரா தரிசன விழாவும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் டிச.30 ல் ஆருத்ரா தரிசனம்!

சமீபத்தில் நிவர் புயல் காரணமாக கொட்டி தீர்த்த கனமழையால் சிதம்பரம் நடராஜர் கோயிலில் மழை நீர் புகுந்தது. அதை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் ஆருத்ரா தரிசனத்திற்கான் பணிகளை தொடங்கியுள்ளனர்.